தமிழ்நாட்டில் முதல்முறை? அலறிய போலீசார்.. சுட்டு தள்ளிய துணிச்சல் எஸ்ஐ மீனா.. குவியும் பாராட்டு
சென்னையில் போலீஸாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிய கொள்ளையனை சினிமா பாணியில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த பெண் எஸ்.ஐ. மீனாவை, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெகுவாக பாராட்டினார்.
சென்னை: சென்னையில் போலீஸாரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிய கொள்ளையனை சினிமா பாணியில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த பெண் எஸ்.ஐ. மீனாவை, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெகுவாக பாராட்டினார். சினிமா பாணியில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த பெண் எஸ்.ஐ. மீனா (34) செங்கல்பட்டை பூர்வீகமாக கொண்டவர். திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். சிறந்த பணிக்காக இவர் ஏற்கெனவே 2 முறை காவல் ஆணையரிடம் பதக்கம், சான்றிதழ் பெற்றிருக்கிறார்
சென்னை அயனாவரத்தில் அதிகாலை 4 மணி அளவில் 4 போலீஸாருடன் அயனாவரம் சப் இன்ஸ்பெக்டர் சங்கர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். ஒரு இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த 3 பேரை நிறுத்தி விசாரிக்க முயன்றனர். அப்போது, அந்த வாகனத்தில் கடைசியாக அமர்ந்திருந்த இளைஞர், மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் எஸ்.ஐ. சங்கரின் தலையில் பலமாக தாக்கிவிட்டு தப்பி ஓடினார். இதில், படுகாயம் அடைந்த சங்கர் அவர் அதே இடத்தில் சுருண்டு விழுந்தார். அவரை சக போலீஸார் உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையே, தாக்குதல் நடத்திய இளைஞர் உள்ளிட்ட 3 பேரும் அங்கிருந்து தப்பினர்.
இச்சம்பவம் பற்றி அயனாவரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், எஸ்.ஐ. மீது தாக்குதல் நடத்தியது பிரபல கொள்ளையனான புளியந்தோப்பு திருவிக நகர் பள்ளம் பகுதியை சேர்ந்த பெண்டு சூர்யா (எ) சூர்யா (22) என்பதும், அவருடன் இருசக்கர வாகனத்தில் வந்தது திருநின்றவூர் நெமிலிச்சேரி கவுதம் என்ற மோகன் (20), திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அஜித் என்ற பீக்கா (20) என்பதும் தெரியவந்தது. இதில் கவுதம், அஜித் ஆகிய இருவரையும் போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

தனிப்படை போலீசார்
ஆனால் சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய சூர்யா மட்டும் தலைமறைவாக இருந்தார். சூர்யா திருவள்ளூர் மாவட்டத்தில் தலைமறைவாக சுற்றிய தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து எஸ்.ஐ. மீனா தலைமையிலான தனிப்படை போலீஸார் அண்மையில் கைது செய்தனர். அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அயனாவரம் காவல் நிலையம் திரும்பிக் கொண்டிருந்தனர்.

போலீசுக்கு வெட்டு
நள்ளிரவு 11.30 மணி அளவில் அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலையில் வரும்போது, சிறுநீர் கழிக்க வேண்டும் என சூர்யா கூறியிருக்கிறார். அதற்கு போலீஸார் அனுமதித்துள்ளனர். இதையடுத்து ஒதுக்குப்புறமாக சூர்யா சென்றுள்ளார். போலீஸார் அவருக்காக காத்திருந்தனர். அப்போது சூர்யா, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து போலீஸாரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், தலைமைக் காவலர் சரவண குமார், முதல்நிலை காவலர் அமானுதீனின் கை, கால்களில் வெட்டுக்காயம் விழுந்தது. காவலர் திருநாவுக்கரசு இதில் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

ரவுடியை சுட்டார்
இதற்கிடையே, போலீஸாரின் அலறல் சத்தம் கேட்டு, காவல் வாகனத்தில் அமர்ந்திருந்த எஸ்.ஐ. மீனா உடனடியாக அவர்களை நோக்கி ஓடியுள்ளார். தனது கைத்துப்பாக்கியை எடுத்து, சூர்யாவை எச்சரிக்கும் விதமாக வானத்தை நோக்கி சுட்டார். சூர்யா தப்பி ஓட முயன்றதால், அவரை நோக்கி எஸ்.ஐ. மீனா சுட்டார். இடதுகால் முட்டியில் குண்டு பாய்ந்ததில், ரவுடி சூர்யா கீழே சுருண்டு விழுந்தார்.

நலம் விசாரிப்பு
இதையடுத்து சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். காயம் அடைந்த 2 போலீஸாருடன், ரவுடி சூர்யாவையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே விஷயத்தை கேள்வி பட்டு ,சிகிச்சை பெற்று வரும் 2 காவலர்களையும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

கமிஷ்னர் பாராட்டு
சினிமா பாணியில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த பெண் எஸ்.ஐ. மீனா (34) செங்கல்பட்டை பூர்வீகமாக கொண்டவர். திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். சிறந்த பணிக்காக இவர் ஏற்கெனவே 2 முறை காவல் ஆணையரிடம் பதக்கம், சான்றிதழ் பெற்றிருக்கிறார். இதனிடையே மீனாவை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் நேரில் அழைத்து வெகுவாக பாராட்டினர். முதன்முதலாக பெண் எஸ்.ஐ. துப்பாக்கிச்சூடு நடத்தி சாதனை படைத்திருப்பதாக போலீசார் பாராட்டினர்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications