உழைப்பாளி உணவகம்... உழைப்பாளி மருத்துவமனை... ரஜினிகாந்த் கட்சியில் சித்தமருத்துவர் வீரபாபு..?
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளை சித்த மருத்துவம் மூலம் குணப்படுத்திய சித்த மருத்துவர் வீரபாபு இப்போது சொந்தமாக மருத்துவமனை ஒன்றை திறந்திருக்கிறார்.
அந்த மருத்துவமனைக்கு அவர் சூட்டியிருக்கும் பெயர் உழைப்பாளி. ரஜினிகாந்தின் ரசிகரான இவர் ஏற்கனவே உழைப்பாளி உணவகம் என்ற பெயரில் சிறிய கேண்டீன் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால் அதில் வீரபாபு இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சித்த மருத்துவம்
கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த சித்த மருத்துவர் வீரபாபு, சென்னை மாநகராட்சி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கொரோனா சிகிச்சை மையத்தில் இருந்து வெளியேறிவிட்டார். இப்போது சொந்தமாக உழைப்பாளி என்ற பெயரில் மருத்துவமனை தொடங்கியுள்ள அவர் அங்கு வரும் நோயாளிகளிடம் ரூ.10 மட்டுமே சிகிச்சை கட்டணமாக வசூலிக்கிறார்.

ரஜினி ரசிகர்
நடிகர் ரஜினிகாந்தின் ரசிகரான வீரபாபு ஏற்கனவே உழைப்பாளி உணவகம் என்ற பெயரில் கேண்டீன் நடத்தி வருவதோடு அங்கு சாப்பிட வருபவர்களிடம் ரூ.10 மட்டுமே கட்டணம் வசூலித்து வருகிறார். தனது உணவகம், மருத்துவமனை ஆகிய இரண்டிற்குமே ரஜினிகாந்த் திரைப்படமான 'உழைப்பாளி' என்பதையே பெயராக சூட்டியிருக்கிறார். இதுமட்டுமல்லாமல் தனக்கு நெருக்கமான சிலரிடம் ரஜினிகாந்த் பற்றி அவ்வப்போது அவர் சிலாகித்து பேசுவதுண்டு.

தொலைபேசி மூலம்
இதனிடையே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், திடீரென ஒரு நாள் சித்தமருத்துவர் வீரபாபுவை தொலைபேசி மூலம் அழைத்துப் பேசிய ரஜினிகாந்த் அவருக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்திருந்தார். இது வீரபாபுவுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்ததோடு ரஜினி உடன் நிகழ்த்திய உரையாடல் அவரை அடுத்தக்கட்டத்தை நோக்கி சிந்திக்க வைத்திருக்கிறது.

ரஜினியுடன் இணைவார்
தற்போது உழைப்பாளி மருத்துவமனை மூலம் கொரோனா உள்ளிட்ட பல நோய்களுக்கும் சித்த மருத்துவம் அளித்து வரும் வீரபாபு, விரைவில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசுவார் எனத் தெரிகிறது. மேலும், ரஜினி கட்சி தொடங்கினால் அதில் இணைந்து பணியாற்றும் எண்ணமும் மருத்துவர் வீரபாபுவிடம் உள்ளதாக கூறுகின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications