சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"இது நாகாலாந்து அல்ல.. தமிழகம்.. உருட்டல், மிரட்டல் அரசியலில் எடுபடாது" ஆளுநர் பற்றி முரசொலி காட்டம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் நாகாலாந்து அல்ல என்பதை தமிழக ஆளுநர் ரவி உணர வேண்டும் என முரசொலியில் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து முரசொலியில் "கொக்கென்று நினைத்தாரோ; தமிழக ஆளுநர் ரவி!" என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது. அந்த தலையங்கத்தில், தமிழக ஆளுநர் பொறுப்பேற்றுள்ள ரவி சில நேரங்களில் தனது அதிகார எல்லை மீறி செயல்படத் தொடங்கியுள்ளாரோ என எண்ணிடத் தோன்றுகிறது! இன்றைய தமிழக ஆளுநர் ரவி தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்பதற்கு முன் நாகாலாந்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றிய போது நடந்து கொண்ட விவகாரங்கள் பெரும் விமர்சனத்துக்கு ஆளாகின! நாகாலாந்தின் தேசியவாத ஜனநாயக கட்சியின் தலைவர் சிங்வாங் கோன்யாக் அங்கு ஆளுநராகப் பணியாற்றிய ரவி குறித்து கருத்தறிக்கையில், ஆளுநர் ரவியின் செயல்பாடு மகிழ்ச்சி தருவதாக இருந்ததில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளில் அவரது குறுக்கீடு அதிகமிருந்தது என பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார்.

நமது ஆளுநராக வந்துள்ள ரவியின் அத்துமீறல்கள் நாகாலாந்து அரசு நிர்வாகத்தின் மீது மட்டுமல்ல, அங்குள்ள ஊடகவியாளர்கள் மீதும் இருந்துள்ளது. நாகாலாந்து ஆளுநர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு தமிழக ஆளுநராக அவர் நியமிக்கப்பட்ட நேரத்தில் ஆளுநர் ரவிக்கு அந்த அரசு சார்பில் ஒரு பிரிவு உபச்சார கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது பத்திரிகையாளர்கள் ஒட்டுமொத்தமாக ஆளுநர் ரவிக்குத் தரப்பட்ட பிரிவு உபச்சார விழாவைப் புறக்கணித்தார்கள். அந்தப் பிரிவி உபச்சார விழாவில் கலந்து கொள்ளுமாறு பத்திரிகையாளர்களுக்கு பல வேண்டுகோள்கள் வைத்தும், அவைகளை ஏற்க அவர்கள் முன்வரவில்லை. அந்த செய்தியாளர்களை அந்த அளவு நான் கவர்னராக நாகாலாந்தில் இருந்த காலத்தில் புண்படுத்தியுள்ளார் ரவி!

ஸ்டாலினால் குற்றஞ்சாட்டப்பட்ட நிறுவனத்துடன் காவல்துறை ஒப்பந்தம் - ரத்து செய்ய அன்புமணி வலியுறுத்தல் ஸ்டாலினால் குற்றஞ்சாட்டப்பட்ட நிறுவனத்துடன் காவல்துறை ஒப்பந்தம் - ரத்து செய்ய அன்புமணி வலியுறுத்தல்

வரலாற்று பின்னணி

வரலாற்று பின்னணி

இத்தகைய வரலாற்றுப் பின்னணிகளோடு தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுப் பொறுப்பேற்றுள்ளார் ரவி! ஆளுநர் ரவி அரசியல்வாதியாக இருந்து அரசியல் தட்பவெப்பங்களை உணர்ந்து அனுபவங்கள் பல பெற்று ஆளுநர் ஆனவரில்லை. அவர் ஒரு காவல் துறை அதிகாரியாக இருந்து ஓய்வுக்குப் பின் கவர்னராக அமர்த்தப்பட்டவர். மிரட்டல் உருட்டல் பாணிகள் காவல் துறைக்கு தேவை. பல நேரங்கள் அந்த பாணி கை கொடுக்கும். ஆனால் அது அரசியலில் எடுபடாது என்பதை அவர் உணர்ந்திட வேண்டும்.

நீட் விலக்கு

நீட் விலக்கு

நீட்டுக்கு எதிராக தமிழகச் சட்டசபை ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி மாதங்கள் சில கடந்தும் அது கிடப்பிலே கிடக்கிரது. அதன் நிலை என்ன என்று தெரியாத நிலையில் நீட் வருவதற்கு முன் இருந்த நிலையை விட நீட் வந்த பின் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவப் படிப்பு சேர்க்கை அதிகரித்துள்ளது என கூறியிருக்கிறார். ஒட்டுமொத்தத் தமிழகமுமே நீட்டை எதிர்த்து நிற்கும் நிலையில் தமிழகத்தின் சட்டப்பேரவையே அதனை எதிர்த்து ஒருமித்துத் தீர்மானம் நிறைவேற்றியுள்ள வேளையில் அதுவும் அவரது பரிசீலனையில் இருக்கும் கால கட்டத்தில் ஒரு ஆளுநர் இப்படி அறிவிப்பது எந்த வகையில் நியாயம்?

குடியரசு தின செய்தியில் ஆளுநர்

குடியரசு தின செய்தியில் ஆளுநர்

மேதகு ஆளுநர் ரவியின் குடியரசு தின செய்தி இன்று ஊடகங்களில் விவாதப் பொருளாகியுள்லது. ஆளுநரின் கருத்துக்கு உரிய எதிர்ப்பை தமிழக தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ரவி ஆளுநர் பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு, மற்ற இந்திய மாநிலங்களைப் போன்றது அல்ல என்பதை முதலில் அவர் உணர வேண்டும். இந்த மண் அரசியலில் புடம் போடப்பட்ட மண். இங்கே குக்கிராமங்களில் வசிப்பவர்கள் கூட அரசியல் தெளிவு மிகுந்தவர்கள். ஆளுநர் ரவி எத்தகைய கருத்தையும் தெரிவிக்கும் முன் தமிழகத்தை புரிந்து கொண்டு - அதன் வரலாற்றைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு கூறுவது அவரது பதவிக்கு பெருமை சேர்க்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

7 கோடி தமிழக மக்கள்

7 கோடி தமிழக மக்கள்

ஏறத்தாழ 7 கோடி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய தமிழகச் சட்டமன்றம் ஒரு மனதாக நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிய தீர்மானத்தின் மீது எந்தக் கருத்தும் தெரிவிக்காது சட்டத்தின் சந்து பொந்துகளில் பதுங்கிக் கொண்டு இருப்பது எந்தவித நியாயம் என்பதை ஆளுநர் ரவி தெரிவிக்க வேண்டும். ஒரு கட்சி தனது கொள்கைகளைச் சொல்லி மக்களிடம் வாக்குப் பெற்ரு ஆட்சி பீடம் ஏறுகிறது. மக்களும் அவர்கள் எண்மத்தை அந்த கட்சி நிறைவேற்றம் என எண்ணி வாக்களிக்கிறார்கள். அந்த மக்களின் எதிர்பார்ப்பை தீர்மானமாக்கி அனுப்பும் போது அதை ஒரு ஆளுநர் அலட்சியப்படுத்துவது என்பது சுமார் 7 கோடி மக்களை அவமதிப்பது என்பதை உணர வேண்டும்.

பழைய ஆளுநர்கள் பட்டியல்

பழைய ஆளுநர்கள் பட்டியல்

தமிழக அரசியலில் பழுத்த பழங்களை ஆளுநராகக் கண்ட மாநிலம்! ஸ்ரீபிரகாசா, உஜ்ஜல்சிங், கேகே ஷா, பிசி அலெக்சாண்டர், பர்னாலா, பட்வாரி, சென்னா ரெட்டி, ரோசையா, புரோஹித் என அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் ஆளுநராக பார்த்த மாநிலம் தமிழ்நாடு! அரசியல் சட்டம் அவர்களுக்கு அளித்த அதிகாரத்தை மதித்துப் புகழ பெற்றவர்களும் மிதித்து களங்கங்களாக விளங்கியவர்களும் உண்டு! தமிழக அரசியல்வாதிகள் பல கருத்துகளில் ஒன்றுபடுவதில்லை. ஆனால் பல ஜீவாதார உரிமைகளில் அவர்கள் ஒன்று பட்டு நிற்பார்கள். அங்கே கட்சி வேறுபாடுகளைக் காண முடியாது . அப்படிப்பட்ட உரிமைகளில் ஒன்றுதான் நீட் வேண்டும் என்பது!

மாறுபட்ட கருத்தில்லை

மாறுபட்ட கருத்தில்லை

தமிழகத்தை பொருத்தவரை இரு மொழிக் கொள்கைதான். இதிலே ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் மாறுபட்ட கருத்தில்லை. பல பிரச்சினைகளில் எதிரும் புதிருமாக இருந்தாலும், தமிழகத்தின் சில பிரச்சினைகளில் ஒட்டுமொத்தத் தமிழகமும் ஒன்றிணைந்த நிற்கும்! அதிலே ஒன்ரு இரு மொழிக் கொள்கை. மற்றொன்று நீட் வேண்டாமென்பது! ஆளுநர் ரவி இதனை உணர்ந்து உரிய தகவலை மேலிடத்திற்கு தந்து ஒட்டுமொத்தத் தமிழகத்தின் உரிமைக் குரலுக்கு அங்கீகாரம் வாங்கித் தர முயற்சி செய்ய வேண்டும். அதனை விடுத்து இங்கே பெரியண்ணன் மனப்பான்மையோடு அரசியல் செய்ய நினைத்தால்

கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா... எனும் பழங்கதை மொழியை அவருக்கு நினைவுப்படுத்த விரும்புகிறோம். அதாவது இது நாகாலாந்து அல்ல. தமிழகம் என்பதை அவர் உணர்ந்திட வேண்டும் என அந்த முரசொலியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Murasoli mouthpiece demands for neet exemption and bi linguial policy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X