மகேந்திரன் யார்?.. தளபதியாரே நாங்கள் கொடுத்த புகார் என்னவாயிற்று?.. கொதிக்கும் சிங்காநல்லூர் திமுக
சென்னை: அதிமுக நிர்வாகியுடன் சேர்ந்து கொண்டு சதி செய்து உதயசூரியனை தோற்கடித்த டாக்டர் மகேந்திரனுக்கு ஸ்டாலின் இத்தனை முக்கியத்துவம் கொடுப்பதா என சிங்காநல்லூர் தொகுதி திமுகவினர் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்த மகேந்திரன் கடந்த சட்டசபை தேர்தலில் தனது பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடாமல் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் திமுக சார்பில் என் கார்த்திக், அதிமுக சார்பில் பொள்ளாச்சி கே ஆர் ஜெயராமன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
இதில் பொள்ளாச்சி ஜெயராமன் 81244 வாக்குகளுடன் வென்றார். அது போல் என் கார்த்திக் 70390 வாக்குகளை பெற்று 11 ஆயிரத்து சொட்சம் வாக்குகளில் தோல்வி கண்டார். மகேந்திரன் 36855 வாக்குகளை பெற்றிருந்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்
இந்த நிலையில் அதிமுகவை வெற்றி பெற வைக்க கொங்கு மண்டலத்து அதிமுக நிர்வாகியுடன் இணைந்து மகேந்திரன் திமுகவை தோற்கடித்ததாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கார்த்திக் புகார் அளித்திருந்தார். இதற்கு அடுத்து மகேந்திரனுக்கும் கமலுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு அக்கட்சியிலிருந்து அவர் விலகினார்.

பாஜக- திமுக
இந்த நிலையில் அவரை தங்கள் கட்சியில் சேர்க்க பாஜகவும் திமுகவும் போட்டா போட்டி போட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து நீண்ட யோசனைக்கு பிறகு மகேந்திரன் நேற்று முன் தினம் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார். இது கொங்கு மண்டலத்தில் உள்ள திமுகவினருக்கு பிடிக்கவில்லை.

திமுக
ஏனென்றால் மகேந்திரன் உள்பட நூற்றுக்கணக்கானோர் திமுகவில் இணைய அறிவாலயத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. திமுகவின் வெற்றியை அதிமுக முன்னாள் அமைச்சருடன் இணைந்து பறித்த மகேந்திரனை, தன் பக்கத்தில் ஸ்டாலின் அமர வைத்ததை பார்த்து தொண்டர்கள் குமுறினர்.

மகேந்திரன் மீது புகார்
இதிலிருந்து மகேந்திரன் மீது தான் கூறிய புகாரை ஸ்டாலின் நம்பவில்லை என எடுத்துக் கொள்வதா என சிங்காநல்லூர் திமுகவினர் புகைந்து கொண்டிருக்கிறார்கள். மேலும் மகேந்திரன் திமுகவில் இணைந்த விழாவில் கூட திமுக வேட்பாளர் நா கார்த்திக் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் மகேந்திரனுக்கு புதிய பதவியேதும் கொடுக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார்கள். ஆனால் ஸ்டாலின் என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications