சுனாமி, புயல் எதுக்கும் உதவி பண்ணல… வாழ்த்து மட்டும் எதுக்கு.. வைரமுத்துவை வம்பிழுத்த சின்மயி
Recommended Video

சென்னை: ராணுவம், பாஜகவை புகழ்ந்தால் ஆதரவு கிடைக்கும் என்று நினைத்து கவிஞர் வைரமுத்து பாராட்டி இருக்கலாம் என்று பாடகி சின்மயி விமர்சித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் நேற்று அதிகாலை ஊடுருவிய இந்திய விமானப்படை வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதில் தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்திய விமானப்படையின் தாக்குதலால் கடும் ஆத்திரமடைந்துள்ள பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்தும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் இந்த தாக்குதலுக்கு பெரும் வரவேற்பு எழுந்தது. கூறப்பட்டுள்ளது.

ஆதரவும், எதிர்ப்பும்
அதே நேரத்தில் எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. அதுவும் வாழ்த்து தெரிவிப்பவர்களை வம்பிழுக்கும் வகையிலான கருத்துகளும் பதிவிடப்பட்டு வருகின்றன.
|
வாழ்த்திய வைரமுத்து
இந்திய விமானப்படையின் அதிரடி தாக்குதலுக்கு பலரும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்த நிலையில் கவிஞர் வைரமுத்துவும் தனது வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார். டுவிட்டரில் அவர் தமது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டிருந்தார்.

வணக்கம் சொல்கிறோம்
அதில் அவர் கூறியிருப்பதாவது:போர்மீது விருப்பமில்லை. ஆனால், தீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆகாய வீரர்களே! அசகாய சூரர்களே! அண்ணாந்து பார்த்து வணக்கம் சொல்கிறோம் என்று வைரமுத்து ட்வீட் செய்திருந்தார்.
|
சின்மயி விமர்சனம்
இந் நிலையில், இந்திய விமானப்படையின் அதிரடி தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், அவர் மீது மீ டூ புகார் கூறிய சின்மயி விமர்சித்துள்ளார்.அவரது வாழ்த்தையும் சின்மயி விமர்சித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:

புகழ்ந்தால் ஆதரவு
இதற்கு முந்தைய ராணுவ நடவடிக்கை பற்றி அவர் (வைரமுத்து) எந்த பாராட்டும் தெரிவித்தது இல்லை. சுனாமி, புயல் போன்றவற்றுக்காக நிதியுதவி செய்தும் பார்த்தது இல்லை.ராணுவம், பாஜகவை புகழ்ந்தால் ஆதரவு கிடைக்கும் என்று அவர் நினைக்கலாம் என்று அவர் ட்வீட் செய்துள்ளார். அவரின் இந்த டுவீட் மீண்டும் கடும் விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது எனலாம்.












Click it and Unblock the Notifications