கட்டாயக் கருக்கலைப்பு! இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக சரிகமப பாடகர் குருகுகன் கைது
சென்னை: இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் பாடகர் குருகுகனை பரங்கிமலை போலீஸார் கைது செய்தனர். இவர் மீது மென்பொருள் பொறியாளராக இருக்கும் பெண் புகார் அளித்திருந்தார்.
குருகுகனும் அந்த பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் தனிமையில் சந்தித்தாகவும் தெரிகிறது. இதன் விளைவு அந்த பெண் வயிற்றில் கரு தங்கிவிட்டது. இதுகுறித்து குருகுகனிடம் சொன்ன போது அவர் கருவை கலைத்தால் திருமணம் செய்து கொள்வேன் என தெரிவித்தாராம்.

ஆனாலும் கருவை கலைக்க மனம் ஒவ்வாத நிலையில் குருகுகனோ அந்த பெண்ணை கட்டாய கருக்கலைப்பில் ஈடுபட்டாராம். கருவைக் கலைத்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ள அந்த பெண் கேட்ட போது குருகுகன் மறுத்துவிட்டாராம். இதனால் தாம் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த அந்த பெண் பரங்கிமலை போலீஸில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் பொய்யான உத்தரவாதம், மிரட்டி ஆதாரங்களை அழிப்பது உள்ளிட்ட பிரிவுகளில் குருகுகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து பாடகர் குருகுகனை மகளிர் போலீஸார் கைது செய்தனர். குருகுகன் சரிகமப உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மே மாதம் ஹேப்பி ஸ்ட்ரீட் எனும் நிகழ்ச்சியில் அந்த பெண் கலந்து கொண்டார். அப்போது அங்கு நிகழ்ச்சி நடத்த வந்த குருகுகன் அந்த பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டு நட்பாக பேசியதாக தெரிகிறது.
இதையடுத்து இருவருக்குள்ளும் ஒருவர் மீது ஒருவருக்கு காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் குருகுகன், அந்த பெண்ணிடம் என் வீட்டில் எனக்கு வேறு இடத்தில் பெண் தேடுகிறார்கள். ஆனால் நான் உன்னை காதலிக்கிறேன் என தெரிவித்தாராம். அப்போது அந்த பெண், "நீ வேறு சமூகத்தை சேர்ந்தவன். நம் திருமணத்திற்கு உன் பெற்றோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்" என கூறினாராம்.
அதற்கு குருகுகனோ, வீட்டில் திருமணம் செய்து வைக்க ஒப்புக் கொள்ளாவிட்டாலும் நான் உன்னைதான் திருமணம் செய்வேன். வீட்டில் ஏற்காவிட்டாலும் நாம் தனியாக குடித்தனம் நடத்தலாம் என குகன் கூறியதாக தெரிகிறது. இதை நம்பிய அந்த பெண், குருகுகனை காதலித்தார். இருவரும் பல இடங்களுக்கு சென்றதன் விளைவு அந்த பெண் கருவுற்றார்.
அந்த பெண், பதிவு திருமணம் செய்து கொள்ள அழைத்த போதும் குருகுகன் சமாளித்து நாசுக்காக மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து ஆகஸ்ட் மாதம் அந்த பெண்ணின் கருவை கலைக்க சொல்லி கட்டாயப்படுத்தினாராம். இதனால் அந்த பெண் கருக்கலைப்பு செய்தும் குருகுகன் அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.
இதுகுறித்து குருகுகனின் பெற்றோரிடம் முறையிட்ட போது ஜாதி தடையாக இருப்பதாக சொல்லிவிட்டார்களாம். இதனால் அந்த பெண் தற்போது போலீஸில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications