**ப் பண்ணிடுவேன்னு மிரட்டுறாங்க! ஆபாச தாக்குதல்.. இரவோட இரவாக கெனிஷா விட்ட நோட்டீஸ்! என்னாச்சு
சென்னை: பிரபல நடிகர் ரவி மோகன், ஆர்த்தி இடையே விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில் இருவரும் இனி அறிக்கை போரில் ஈடுபடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த நிலையில் தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள், ஆபாச குறுஞ்செய்திகள் வருவதாகவும், இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாடகி கெனிஷா எச்சரித்துள்ளார்.
தமிழ் திரைத்துறையில் பிரபலமான நடிகரான ரவி மோகன் (ஜெயம் ரவி), ஆர்த்தி என்பவரை காதலித்து கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால், இருவரும் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நடிகர் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது தனக்கு 40 லட்சம் ரூபாய் மாதம் வழங்க வேண்டுமென ஆர்த்தி கூறியிருந்தார்.

இது குறித்து பதில் அளிக்க ரவி மோகனுக்கு அவகாசம் வழங்கி வழக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தன்னை குறித்து அறிக்கை வெளியிட தடை விதிக்க வேண்டும் என ரவி மோகன் தொடர்ந்து வழக்கில் இரு தரப்பும் அறிக்கை தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம், இருவர் தொடர்பான செய்திகளை வெளியிடவும் தடை விதித்தது. இந்த நிலையில் தான் தனக்கு மிரட்டல் வருவதாகவும், தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக பாடகி ஜெனிஷா நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
அனைத்து வசவாளர்களுக்கும்: கெனிஷாவின் வழக்கறிஞர் குழுவில் இருந்து என்ற கேப்சனோடு வெளியாகியிருக்கும் நோட்டீஸில், பாடகி கனிஷா ஆன்லைனில் தொடர்ச்சியாக கொலை மிரட்டல் பாலியல் வன்கொடுமை மிரட்டல் ஆபாச குறுஞ்செய்திகள் உள்ளிட்ட தாக்குதல்களால் குறி வைக்கப்படுவதால் அவர் மன ரீதியான அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார். மேலும் இதனால் அவரது நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. கெனிஷாவுக்கு வந்த மிரட்டல்கள் தொடர்பான ஸ்கிரீன்ஷாட்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் சட்டத்தின் முன் சமர்ப்பிக்கப்படும். அடுத்த 48 மணி நேரத்திற்குள் கெனிஷா குறித்த அவதூறுகள், வீடியோக்கள், போட்டோக்கள், ஆபாச பின்னூட்டங்கள் உள்ளிட்டவற்றை நீக்கவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ரவி மோகன் ஆர்த்தி இடையேயான விவாகரத்து வழக்கு தனியே நடந்து கொண்டிருக்கும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமண நிகழ்ச்சியில் கெனிஷாவும் ரவி மோகனும் கலந்து கொண்டனர். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் வேகமாக பரவிய நிலையில், ரவி மோகன் ஆர்த்தி இடையே அறிக்கை போர் ஏற்பட்டது. ஆனால் தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கெனிஷா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் கெனிஷாவுக்கு எதிராக தாக்குதல்கள் நடைபெற்ற நிலையில் தான் தற்போது ஜெனிஷா வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் இருக்க 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி தொடர்ந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது. அதில் ஜீவனாம்சம் வழங்குவது குறித்த தனது நிலைப்பாட்டை ரவி மோகன் நீதிமன்றம் முன் எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications