பாடகி மைதிலியின் கிரேட் வாக்குகள்.. பாஜக நபருக்கு சூப்பர் ரிசல்ட்.. அசந்து போய் பார்த்த போன அலி நகர்
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் NDA கூட்டணி அபார வாக்குகளை பெற்றுள்ளது.. இதில் அலி நகரில் பாஜக வேட்பாளர் பாடகி மைதிலி ஆரம்பத்திலிருந்தே முன்னிலை வாக்குகளை பெற்றது பலரையும் வியக்க வைத்தது.. பாடகி மைதிலி யார்? எதற்காக இவருக்கு பாஜக சீட் தந்தது? கிராமப்புறங்களில் இவருக்கான வரவேற்பு எப்படி இருந்தது? என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களின் 2வது பட்டியலை பாஜக வெளியிட்டபோது, அதில் பலரது கவனத்தை பெற்றிருந்தது பாடகி மைதிலியின் பெயர்தான்.. தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதியில் அரசியல் அறிமுகமானார் நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர்..

யாரிந்த பாடகி மைதிலி
"கட்சி எனக்கு எந்த வேலையை ஒதுக்கினாலும், அதை நான் முழு அர்ப்பணிப்புடன் செய்வேன்" என்று கட்சியில் இணைந்ததுமே உறுதி தந்தார் பாடகி மைதிலி.
நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் எதற்காக பாஜகவில் இணைந்தார்? என்ற சந்தேகமும், ஆர்வமும் பல தரப்பிலும் அதிகரித்தது. கிராமப்புறங்களில் நெருக்கமான தொடர்பு உள்ளதால் மைதிலிக்கு பாஜக சீட் தந்திருப்பதாகவே கருதப்பட்டது..
அதுமட்டுமல்ல, என்டிஏ கூட்டணியின் பீகார் பிரச்சாரத்திற்கும் மைதிலி தாகூர் மிகப்பெரிய ஊக்கமாக இருப்பார் என்றும், குறைந்தபட்சம் 40 தொகுதிகளில் நட்சத்திர பிரச்சாரகராக பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் பாஜக நம்பியது..
சமூக வாக்குகள்
மேலும், கடந்த 2020ம் ஆண்டிலிருந்தே NDA இங்கு 20 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.. இதில் மைதிலி, தான் சார்ந்த சமூகத்தின் வாக்குகளை ஒருங்கிணைப்பதன் மூலம் NDA கூட்டணி கூடுதலாக 5 முதல் 8 இடங்களை கைப்பற்றக்கூடும் என்றும் கணக்கு போட்டது.
ஆனால், இதனை காங்கிரஸ் விமர்சித்தது.. மைதிலி தாக்கூர் எந்தக் கட்சியில் சேர்ந்தாலும் பாட்டு மட்டும்தான் பாடப்போகிறார்... முன்பு அந்த பாடகி, கடவுளை வணங்கினார்.. இப்போது பிரதமர் மோடி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீதான பக்தியில் மூழ்கிவிடுவார் என்று கிண்டலாக கூறியது நினைவிருக்கலாம்.
எனினும் தனக்கு தந்த அரசியல் வாய்ப்பை 25 வயதான பாடகி மைதிலி சரியாகவே பயன்படுத்தி கொண்டார்.. காரணம், குடும்ப பிரச்சனைக்காக பாட்டு பாடி சம்பாதிக்க தொடங்கியவர் மைதிலி.. சிறு வயதிலிருந்தே, அவர் பாரம்பரிய இசை, நாட்டுப்புற இசையில் பயிற்சி பெற்றது அவரை இசையில் மிகவும் வலிமை உள்ளவராக மாற்றியது..
பிரபலமான பாடகி
இந்தி, மைதிலி, போஜ்பூரி மொழிகளில் பாடல்களை பாடி, மக்களிடம் பிரபலமானவராக அறியப்பட்டிருக்கிறார்.. தமிழில்கூட ஒரு பாட்டு பாடியிருக்கிறார்.. சிறந்த பாடகிக்கான பல்வேறு விருதுகளை பெற்றவர்.. இத்தனை அம்சங்களும் நிறைந்ததால்தான், செல்லுமிடமெல்லாம் மைதிலிக்கு பெரும் வரவேற்பினை கிராமப்புற மக்கள் அள்ளி தந்தார்கள்..
ஒரு கலாச்சார சின்னமாக பார்க்கப்படும் தாக்கூரின் வருகையானது,. பாஜகவின் பிரச்சாரத்தை உற்சாகப்படுத்தியது.. குறிப்பாக வடக்கு பீகாரில் அதன் இளைஞர் ஈர்ப்பை விரிவுபடுத்தியது என்றே சொல்லலாம்.
முன்னிலையில் பாடகி
இன்று பீகார் ரிசல்ட்டின்போது, ஆரம்பத்திலிருந்தே பாஜக கூட்டடிணி முன்னிலை பெற்றது.. நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ள நிலையில், தேஜஸ்வி யாதவின் மகா கூட்டணி பின்தங்கிவிட்டது. இதில், தபால் வாக்கு எண்ணிக்கையில் என்டிஏ கூட்டணி முன்னணி வகிக்க, அலிநகரில் தொகுதியில் பாஜக வேட்பாளரான பாடகி மைதிலி தாக்கூர் முன்னிலை வகித்தது பலரையும் வியக்க வைத்து,.
அலிநகரில் பாஜகவின் மைதிலி தாக்கூர் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றதுமே, அங்குள்ளவர்கள் இந்த வெற்றியை கொண்டாட துவங்கிவிட்ட்னர். , மைதிலி தாக்கூர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆக பதவியேற்பது உறுதியாகி விட்டது என்றே சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications