Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒல்லி நடிகரோடு கனெக்‌ஷன்..ஆர்த்தியோடு முடிச்சு போட்ட சுசித்ரா! குடும்ப கண்ணியம் போச்சு! பறந்த புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல நடிகரான ரவி மோகன் - ஆர்த்தி தம்பதியின் விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆர்த்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றை பாடகி சுசித்ரா பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோ மீண்டும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், சுசித்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்த்தியின் தந்தை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.

தமிழ் திரையுலகில் சர்ச்சைகளிலேயே சிக்காத நடிகர் என்றால் அது ஜெயம் ரவி. தான் சிறுவயதிலேயே திரைத்துறையில் அறிமுகமானாலும், ஜெயம் படம் தான் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. தொடர்ந்து ஜெயம் ரவி எனவே அழைக்கப்பட்டார்.

பின்னர் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதியினருக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் திடீரென தனது மனைவியை விவாகரத்து செய்வதாக கூறி அதிர வைத்தார் ஜெயம் ரவி. இதற்கு முன்னர் பல நட்சத்திர ஜோடிகள் பிரிந்திருந்தாலும், ஜெயம் ரவி ஆர்த்தி தம்பதியின் பிரிவு மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Suchitra Aarthi Jayam Ravi

தொடர்ந்து தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஜெயம் ரவி மனுதாக்கல் செய்தார். பிறகு தன் பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டதாகவும், இனி தன்னை ஜெயம் ரவி என அழைக்க வேண்டாம் என அறிக்கையும் வெளியிட்டார். இந்த நிலையில் தன்னிடம் எதுவுமே தெரிவிக்காமல் தன்னை பிரிவதாக ஜெயம் ரவி கூறி இருப்பதாக ஆர்த்தி அறிக்கை வெளியிட்டார். கடுமையான கண்காணிப்பு, சந்தேகப்படுகிறார் என பல குற்றச்சாட்டுகளை ஆர்த்தி ரவி, மீது ரவி மோகன் வைத்தார்.

அதற்கு பிறகு இந்த விவகாரம் அமைதியாகச் சென்ற நிலையில் பாடகி கெனிஷாவுடன் ஜெயம் ரவி பழக்கத்தில் இருப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தது. தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட வேண்டாம் என ஜெயம் ரவியும் கூறியிருந்தார். அதேபோல் தான் கெனிஷாவும் கூறி இருந்தார். மீண்டும் இந்த விவகாரங்கள் ஓய்ந்து போயின. இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேசின் இல்ல திருமண விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் பட்டு வேட்டி, பட்டு சேலையோடு ரவி மோகனும், கெனிஷாவும் கலந்து கொண்டனர். இதை அடுத்து இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடித்தது.

தன் வாழ்க்கையில் மூன்றாம் நபரின் தலையீடு இருப்பதாக ஆர்த்தி ரவி அறிக்கை வெளியிட்டார். தொடர்ந்து கெனிஷா, ரவி மோகன், ஆர்த்தியின் தாயார் சுஜாதா என அடுத்தடுத்து அறிக்கைகள் வெளியிட்டனர். இதற்கிடையே சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ரவி மோகன் தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது 40 லட்சம் ரூபாய் மாதம் தனக்கு ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என ஆர்த்தி மனுதாக்கல் செய்ய, அதனை கிண்டல் செய்து ரவி மோகன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

இந்த நிலையில் தங்களை குறித்து அவதூறு பரப்பும் வகையில் வெளியிட்ட செய்திகளை நீக்க வேண்டும் கூடுதல் அறிக்கைகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இருதரப்பும் அறிக்கை போரில் ஈடுபட வேண்டாம் என கூறிய நீதிமன்றம், இதற்கு முன் வெளியிட்ட பதிவுகளையும் நீக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஒரு வழியாக இந்த விவகாரம் அமைதியாக சென்றது.

இதற்கிடையே இந்த விவகாரத்தில் பரபரப்பை பற்ற வைத்தார் பிரபல பாடகியான சுசித்ரா. ஒல்லியான நடிகருடன் ஆர்த்தியை இணைத்து பேசியதோடு, அவர் மீது தான் தவறு எனவும் கூறி வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பரவிய நிலையில் கடுமையான கண்டனங்கள் எழுந்தது. இந்த நிலையில் சுசித்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார் ஆர்த்தி தந்தை.

தன் மகள் குறித்தும் அவரது வாழ்க்கை குறித்தும் அவதூறாக பேசிய கருத்துகளால் மனம் புண்பட்டு உள்ளது என்றும், இத்தனை ஆண்டுகள் தங்கள் கட்டிக் காத்த குடும்ப கண்ணியம், சுசித்ராவின் வீடியோவால் கேள்விக்குறியாக இருப்பதாகவும், தனது மகள் குறித்து அருவருக்கத்தக்க வகையிலும் ஆபாசமாகவும் வீடியோ வெளியிட்ட சுசித்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+