Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2 ஏசிக்கு ரூ 30 ஆயிரம் மின் கட்டணமா? மின்வாரியத்திடம் பணத்தை Refund பெறுவது எப்படி? பாடகர் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இரு ஏசி கொண்ட ஒரு வீட்டிற்கு ரூ 30 ஆயிரம் மின் கட்டணம் என வந்ததை அடுத்து பாடகர் விஷ்ணு ராம் அந்த பணத்தை எப்படி திரும்ப பெற்றார் என்பது குறித்து விளக்கியுள்ளார்.

இதுகுறித்து பாடகர் விஷ்ணு ராம் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நான் சென்னையில் இருப்பது 2BHK வீடு. அதுவும் வாடகை வீட்டில் குடியிருக்கிறேன். எங்கள் வீட்டில் ஒரு ஏசி இருந்தது. தற்போது அப்பா அம்மாவுக்காக ஒரு புதிய ஏசியை வாங்கினேன்.

eb bill

கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எனக்கு வந்த கரண்ட் பில் ரூ 5000. பிறகு ஏசி நிறைய பயன்படுத்துகிறோமோ என நினைத்து அதை குறைத்து ஜூன் மாதம் 9223 ரூபாய் மின் கட்டணம் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நான் மேலும் பயன்பாட்டை குறைத்தேன்.

ஆகஸ்ட் மாதம் 15 ஆயிரம் பில் வந்தது. எத்தனை வகையில் பயன்பாட்டை குறைத்தாலும் இப்படி பில் வந்து கொண்டே இருக்கிறதே என்பதால் ஆன்லைனில் புகார் அளித்தேன். நான் அனுப்பிய புகார்கள் எல்லாம் தீர்வு ஏற்படாமலேயே தானாகவே குளோஸ் ஆகிவிடுகிறது. ரீடிங் சரியாகத்தான் இருக்கிறது. நீங்கள் மின் கட்டணம் செலுத்துங்கள் என சொல்கிறார்கள்.

ஆகஸ்ட் மாதம் 18 ஆயிரம் பில் வந்தது. அக்டோபர் மாதம் 27,452 ரூபாய் மின் கட்டணம் வந்தது. இதெல்லாம் இனி வேலைக்கு ஆகாது என நினைத்த நான் தமிழகத்தில் உள்ள மின் உதவி மையத்திற்கு போன் செய்து பேசினேன்.

அவர்களும் இவ்வளவு பில் வரக் கூடாதே என்றனர். மேலும் ஆபீஸில் போய் லெட்டர் கொடுத்தால் அவர்கள் தீர்த்து வைப்பார்கள் என்றார்கள். உடனே நான் அடுத்த நாள் மின் அலுவலகத்திற்கு சென்று எனது பிரச்சினை குறித்து புகார் அளித்தேன். அப்போது அங்கிருந்த அதிகாரி, கொரோனா காலத்தில் யாருக்கும் சரியாக ரீடிங் எடுக்கவில்லை, எனவே தற்போது மொத்தமாக ரீடிங் எடுத்ததால் இவ்வளவு தொகை வந்துவிட்டது. அடுத்த முறை மின் கட்டணம் செலுத்தும் போது நான் அட்ஜெஸ்ட் செய்ய சொல்வதாக தெரிவித்தார்.

ஆனால் அடுத்த முறை ரீடிங் எடுக்க வந்த நபரோ "பில் போட்டுவிட்டால் எதுவும் செய்ய முடியாது. அடுத்த முறை அதுவே சரியாகிவிடும்" என்றார். ஜனவரி மாதம் எனக்கு ரூ 18050 பில் வந்தது. உடனே நான் பேஸ்புக் நண்பர் வழக்கறிஞர் சேதுராமிடம் நடந்ததை தெரிவித்தேன்.

அவர் நாம் ஒரு நோட்டீஸ் அனுப்பலாம் என தெரிவித்து அனுப்பியிருந்தார். அந்த நோட்டீஸில், ஒரு வீட்டிற்கு இத்தனை ரூபாய் பில் வர வாய்ப்பே இல்லை. நுகர்வோர் எத்தனையோ வகைகளில் புகார் அளித்துள்ளார்.

அந்த வக்கீல நோட்டீஸில் இருக்கும் வக்கீலுக்கு போன் செய்து சரி செய்து தருவதாக மின்சார வாரியம் தரப்பில் சொல்லியிருக்கிறார்கள். ஒரு முறை போன் செய்து எனது மீட்டரை மாற்றி கொடுத்தார்கள். இதனால் எனக்கு பிப்ரவரியில் பில் குறைவாக வரணும். ஆனால் பாதி மாதம் பழைய மீட்டரில் ஓடியதால் ரூ 10 ஆயிரம் பில் வந்தது.

அதன் பிறகு எனக்கு மின்சார வாரியம் ஒரு விளக்கம் அளித்தது. அதாவது மின் கட்டணம் இப்படி அதிகரித்தால், அந்த மீட்டரை எடுத்து கொண்டு போய் ஒரு யூனிட்டுக்கு ஒரு யூனிட்டுதான் ஓடுகிறதா இல்லை நிறைய ஓடுகிறதா என செக் செய்வார்களாம். ஆனால் நான் சொன்ன போது இவர்கள் செக் செய்யவில்லை. வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதும் செக் செய்தார்கள். 2021 ஆம் ஆண்டு முதலே என் மீட்டர் சரியாக ஓடவில்லை என எனக்கு ரிப்போர்ட் அனுப்பினார்கள். 49 ஆயிரத்தை நாங்கள் திருப்பி தருகிறோம் என்றார்கள்.

இதில் 33 ஆயிரத்தை எனது வங்கிக் கணக்கிற்கு அட்வான்ஸாக அனுப்புவதாக மின்சார வாரியம் பதில் அனுப்பியது. கோர்ட்டில் கேஸ் போட வேண்டாம். சமாதானமாக போகலாம் என சொன்னார்கள்.

இது எனது சொந்த வீடு இல்லை. ஒரு வேளை நான் வீடு மாறி போயிருந்தால் இங்கு குடிவருவோருக்குத்தான் அந்த ரீஃபென்ட் அமவுண்ட் வரும். நான் அவர்களிடம் போய் பணத்தை கேட்க வேண்டிய நிலை வந்திருக்கும். எனவே இது மாதிரியான பிரச்சினை வரும். எனவே உங்களுக்கும் இது போன்ற ஏதாவது பிரச்சினை இருந்தால் நேரில் போய் புகார் கொடுங்கள். நடவடிக்கை இல்லாவிட்டால் உடனடியாக வக்கீல் நோட்டீஸ் அனுப்புங்கள் என தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+