தேர்தல் அறிவிப்புக்கு சற்று முன்பாக.. ‘சூப்பர்’ அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின்.. சீர்மரபினர் குஷி!
சென்னை: சீர்மரபினருக்கு ஒரே சான்றிதழ் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு சில நிமிடங்கள் முன்பாக இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.
சீர்மரபினருக்கு Denotified Communities மற்றும் Denotified Tribes என இரண்டு சான்றிதழ்கள் வழங்குவதற்கு பதிலாக தமிழகத்தில் டிஎன்டி என்ற பிரிவின் கீழ் 68 சமூகங்களுக்கு ஒற்றைச் சான்றிதழ் கோரிக்கையை சீர்மரபினர் முன்வைத்து வருகின்றனர்.

ஆங்கிலேயர் ஆட்சியில் குற்றப்பரம்பரை சட்டத்தினால் பாதிக்கப்பட்ட வகுப்பினர் சீரமரபினர் என வகைப்படுத்தப்பட்டு, எம்.பி.சி பிரிவின் கீழ் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. குறவர் சமூகத்தில் 28 சமூகப் பிரிவுகள், மறவர் சமூகத்தில் 6 பிரிவுகள், கள்ளர் சமூகத்தில் 3 பிரிவுகள், ஊராளி கவுண்டர், தொட்டிய நாயக்கர், போயர் வேட்டுவ கவுண்டர் என மொத்தம் 68 சமூகங்கள் சீர்மரபினர் என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 'டிஎன்சி' என சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது.
அதேசமயம், மத்திய அரசின் கீழ் டிஎன்சி பிரிவு இல்லாததால், மத்திய அரசின் திட்டங்களில் உதவி பெறுவதற்கு சீர்மரபினர் பிரிவில் உள்ள மக்கள் 'டி.என்.டி' எனும் சாதிச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் திட்டங்களுக்கு ஒரு சான்றிதழ், மாநில அரசில் ஒரு சான்றிதழ் என இரண்டு சான்றிதழ்கள் சீர்மரபினருக்கு வழங்கப்படுகிறது.
இரண்டு சான்றிதழ்கள் பெறுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளதால், ஒரே சாதிச் சான்றிதழ் வழங்கி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது சீர்மரபினரின் தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது. சீர்மரபினர் நலச் சங்கம் மற்றும் 68 சமுதாய அமைப்புகள் சார்பில் பலமுறை போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.

ஒற்றைச் சான்றிதழ் கோரிக்கை நிறைவேற்றப்படாததால், இட ஒதுக்கீட்டால் கல்வி, வேலைவாய்ப்பில் இரண்டு தலைமுறையைச் சேர்ந்த 68 சமூக இளைஞர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தின் பூர்வகுடி மக்களாக உள்ள பெரும்பான்மை சமூகத்திற்கு ஒற்றைச் சான்றிதழ் வழங்காததால் சமூக முன்னேற்றம் தடைபட்டுள்ளது என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது, திமுக ஆட்சி அமைந்ததும் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக தமிழக முதலமைச்சர், சீர்மரபினர் நலச் சங்கத்தினரிடம் வாக்குறுதி அளித்தார். எனினும் 3 ஆண்டுகளாக இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், சற்று முன்பு இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் உத்தரவைப் பிறப்பித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு Denotified Communities மற்றும் Denotified Tribes என இரண்டு சான்றிதழ்கள் வழங்குவதற்கு பதிலாக ஒரே சான்றிதழ் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இனி வருவாய் அலுவலர்கள் சீர்மரபினருக்கு ஒரே சான்றிதழ் வழங்குவார்கள். இதன் மூலம் இரட்டை சான்றிதழ் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடுவதற்கு சற்று முன்பாக தமிழக முதல்வர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். தேர்தல் அறிவித்த பிறகு புதிய அறிவிப்பை வெளியிடக்கூடாது என விதி உள்ள நிலையில், தேர்தல் அறிவிப்புக்கு சற்று முன்பாக இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications