SIR: சொந்த ஊரில் இருந்து சென்னை, கோவை மாறியவர்கள்.. வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவது எப்படி?
சென்னை: சொந்த ஊரில் வசித்து வந்த பலர், சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற தொழில் நகரங்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டார்கள். அவர்கள் சொந்த ஊரில் இருந்து நிரந்தரமாக பெருநகரங்களில் வந்து குடியேறி இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற என்ன செய்ய வேண்டும். 2026 தேர்தலில் இப்போது வசிக்கும் சட்டமன்ற தொகுதியில் வாக்களிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
வாக்காளர் திருத்தப்பணி என்பது ஒவ்வொரு சட்டசபை தேர்தலுக்கு முன்பும் நடப்பது இயல்பான ஒன்று தான். இந்த முறை மட்டும் ஏன் சர்ச்சையாகியது என்றால், பீகாரில் இந்த முறை வாக்காளர்களுக்கு ஆதாரை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்தது தான். அதற்கு காரணம், வங்கதேசத்தில் இருந்து ஊடுருவல் இருக்கும் என்ற அச்சம் காரணமாக அப்படி நடந்தது. அதேநேரம் தமிழ்நாட்டினை பொறுத்தவரை பெரிய அளவில் சிக்கல் இல்லை.. ஏதேனும் ஒரு ஆவணங்களை தந்தாலே போதும்.

10ம் வகுப்பு மதிப்பெண் சான்று இருந்தாலே வாக்களிப்பதில் சிக்கல் இருக்காது. அதுவும் இல்லை என்றால், பிறப்புசான்றிதழ் உள்பட ஏதேனும் அரசு ஆவணங்கள் இருந்தாலே வாக்காளர்களாகிவிட முடியும். அதேநேரம் இந்த முறை வாக்காளர்கள் சீர்திருத்தம் என்பது மிக தீவிரமாக நடக்கிறது. 2002, 2005 வாக்காளர் பட்டியலில் உறவினர்கள் பெயர் இருந்தால், அதனை இணைக்க வேண்டும் என்று ஒரு உத்தரவு இருக்கிறது. இது தொடர்பான குழப்பங்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவர்கள் விளக்கம் அளித்து வருகிறார்கள்.
இது ஒருபுறம் எனில், ஊர் மாறியவர்கள், அதாவது தங்கள் வாழும் சொந்த ஊரில் இருந்து சென்னை, கோவை, ஓசூர், திருப்பூர், ஈரோடு உள்பட பிற மாவட்டங்களுக்கு இடம் மாற்றியவர்கள், புதிய இடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அல்லது ஏற்கனவே உள்ள பெயரைப் புதிய முகவரிக்கு மாற்ற சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
நீங்கள் புதிய ஊருக்கு மாறிச் சென்றிருந்தால், பழைய தொகுதியில் பெயரை நீக்கிக் கொண்டு புதிய முகவரியில் பதிவு செய்ய வேண்டும். இதற்குப் பயன்படுத்த வேண்டிய முக்கியப் படிவங்களை பார்ப்போம்.
படிவம் 6 - பெயர் சேர்க்க விண்ணப்பம்
நீங்கள் வேறு ஒரு சட்டமன்றத் தொகுதியில் இருந்து புதிய தொகுதிக்கு மாறியிருந்தால், உதாரணமாக, மதுரையில் இருந்து சென்னைக்கு புதிய தொகுதிக்கு இடம் பெயர்ந்து இருந்தால், பெயர் சேர்க்கப் படிவம் 6 பயன்படுத்த வேண்டும். அத்துடன் புதிய முகவரிக்கான ஆதாரமாக க, மின் கட்டண ரசீது, சமையல் எரிவாயு ரசீது, ஆதார் அட்டை, வாடகை ஒப்பந்தம் போன்ற ஏதாவது ஒன்றை இணைக்க வேண்டும். அத்துடன் 18 வயது நிறைவு பெற்றவர் என்பதற்கான ஆதராரமாக பிறப்புச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் போன்றவற்றை காட்டலாம்.
உங்களிடம் மேலே உள்ள ஆவணங்கள் டிஜிட்டல் வடிவில் இருந்தால், தேசிய வாக்காளர் சேவைகள் போர்ட்டல் (National Voters' Service Portal - அல்லது வாக்காளர் ஹெல்ப்லைன் (Voter Helpline) செயலி மூலம் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
உங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க சிரமம் இருந்தால், உங்கள் ஏரியாவின் வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகத்தில் அல்லது நியமிக்கப்பட்ட சாவடி நிலை அதிகாரி ( BLO) மூலம் சமர்ப்பிக்கலாம்.
படிவம் 8 - ஒரே தொகுதியில் முகவரி மாற்றம்
நீங்கள் அதே சட்டமன்றத் தொகுதிக்குள் வேறு ஒரு இடத்திற்கு மட்டும் மாறியிருந்தால், உதாரணமாக, சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் இருந்து திருவல்லிக்கேணிக்கு மாறியிருந்தால் உங்கள் முகவரியை மாற்ற படிவம் 8 பயன்படுத்தலாம். அதாவது ஒரு சட்டமன்ற தொகுதியில் உள்ள எங்கு வேண்டுமானாலும் மாறியிருந்தாலும், படிவம் 8-ஐ பூர்த்தி செய்து, அதில் 'முகவரி மாற்றம்' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். புதிய முகவரிக்கான ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும்.
கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்
ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் வைத்திருப்பது சட்டப்படி குற்றம் ஆகும். எனவே, ஒரு புதிய இடத்தில் விண்ணப்பிக்கும்போது, பழைய இடத்தில் உங்கள் பெயரை நீக்கும் செயல்முறையும் தானாகவே தொடங்கிவிடும். விண்ணப்பம் சமர்ப்பித்த பிறகு, அதன் நிலையை NVSP இணையதளம் அல்லது செயலி மூலம் தொடர்ந்து கண்காணித்து, ஏதேனும் பிழைகள் இருந்தால் உடனடியாகச் சரிசெய்ய வேண்டியது அவசியம் ஆகும்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications