வாக்காளர் பட்டியல்(SIR) திருத்தத்தால்.. அதிகம் பாதிக்கப்பட போவது விஜய்தான்! தவெகவிற்கு பெரிய சிக்கல்
சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகள் தமிழ்நாட்டில் தொடங்கி உள்ளது. இதனால் இளம் வாக்காளர்கள் பலர் பாதிக்கப்பட உள்ளனர். முக்கியமாக இதில் உள்ள விதி ஒன்று இளம் தலைமுறையினருக்கு எதிராக செல்லலாம்.
2002-2004 காலகட்டத்தில் நடத்தப்பட்ட SIR பட்டியலில் ஒரு வாக்காளரின் பெயர் இடம்பெற்றிருந்தால், அவர் கூடுதல் ஆவணங்கள் எதையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. ஆனால், அதற்குப் பிறகு சேர்க்கப்பட்ட வாக்காளர்கள் தங்கள் குடியுரிமை மற்றும் வசிப்பிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை வழங்க வேண்டும். இதனால் இளம் தலைமுறையினர் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள்.

விஜய்க்கு சிக்கல்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகள் காரணமாக விஜய்க்கு செல்லும் இளம் வாக்காளர்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால்.. விஜயின் வாக்காளர்கள் பலரும் 2000க்கு பின் பிறந்தவர்களாக இருக்க வாய்ப்புகள் உள்ளன. 2002-2004 காலகட்டத்தில் நடத்தப்பட்ட SIR பட்டியலில் இவர்களின் பெயர்கள் இருந்திருக்காது.
இதனால் இப்போது SIR நடக்கும் நிலையில்.. புதிய வாக்காளர்கள் தங்கள் குடியுரிமை மற்றும் வசிப்பிடத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை வழங்க வேண்டும். அதாவது இவர்கள் 12 முக்கியமான ஆவணங்களில் எதையாவது ஒன்றை வழங்க வேண்டும். அப்போதுதான் இவர்கள் லிஸ்டில் இருப்பார்கள்.
அதாவது 2002-2004 காலகட்டத்தில் நடத்தப்பட்ட SIR பட்டியலில் உங்களின் பெயர்கள் இல்லை.. அதன்பின்தான் நீங்கள் வாக்காளர்கள் ஆனீர்கள் என்றால்.. கீழ்கண்ட ஆவணங்களை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் உங்களின் வாக்குரிமை பறிக்கப்படும்.
SIR ஆவணங்கள் என்னென்ன?
தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்,
பாஸ்போர்ட்,
மெட்ரிகுலேஷன்/கல்விச் சான்றிதழ்,
நிரந்தர வசிப்பிடச் சான்றிதழ்,
அரசு வழங்கிய அடையாள அட்டை
(மத்திய/மாநில/பொதுத்துறை நிறுவனங்கள்),
சாதி அல்லது OBC சான்றிதழ் (பொருந்தினால்),
உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து குடும்பப் பதிவேடு,
NRC சான்று (பொருந்தினால்),
நிலம் அல்லது வீடு ஒதுக்கீட்டுச் சான்றிதழ்
ஆதார் அட்டை (அடையாளத்திற்கு மட்டுமே, குடியுரிமைக்கு அல்ல).
SIR காரணமாக - விஜய்க்கு சிக்கல்?
இதனால் விஜய் கடுமையான பாதிப்புகளை சந்திக்கலாம் . தமிழக வெற்றிக் கழக வாக்காளர்கள் பலர் 2000ல் பிறந்தவர்கள் . இதனால் இவர்களின் வாக்குரிமை கடுமையாக பாதிக்கப்படும். பல இளம் தலைமுறையினர் வாக்குகளை இழக்க நேரிடும்.
முக்கியமாக பலர் இதில் சென்னையில் பணியாற்றுகிறார்கள். பலர் சொந்த ஊர்களில் இல்லை. இவர்கள் அதிகாரிகள் சோதனை செய்ய வரும் நேரத்தில் வீட்டில் இல்லையென்றாலும் வாக்குரிமையை இழக்க நேரிடும். 3 முறை அதிகாரிகள் வீட்டிற்கு வருவார்கள். அதை தவறவிடும் பட்சத்தில் இளம் தலைமுறையினர் பலரின் வாக்குகள் பறிபோகும் அபாயங்கள் உள்ளன.
எப்போது வரை சர்வே நடக்கும்?
கணக்கெடுப்புக் கட்டம் நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை நடைபெறும். BLO-க்கள் ஒவ்வொரு வாக்காளருக்கும் கணக்கெடுப்பு படிவங்களை (EFs) விநியோகிப்பார்கள்.
விவரங்களைச் சரிபார்க்க BLO-க்கள் மூன்று முறை வாக்காளர்களின் வீடுகளுக்குச் செல்வார்கள். வாக்காளர்கள் தங்கள் படிவங்களை Voter Portal (https://voters.eci.gov.in) வழியாக ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்.
இந்தக் கட்டத்தில், இறந்த, நகல் அல்லது குடியேறிய வாக்காளர்கள் அடையாளம் காணப்படுவார்கள். கணக்கெடுப்புக்குப் பிந்தைய கட்டத்தில், டிசம்பர் 9, 2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
ஜனவரி 8, 2026 வரை புகார்கள் மற்றும் ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்படும். இறுதியாக, பிப்ரவரி 7, 2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.












Click it and Unblock the Notifications