Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் SIR பணி.. அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு விஜய்க்கும் அழைப்பு! ரூட்டை மாற்றும் திமுக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த(SIR) நடவடிக்கை, தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் மேற்கொள்ளப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

இந்நிலையில், இதை எதிர்த்து வருகின்ற நவம்பர் 2-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க பனையூர் அலுவலகத்திற்கு நேரில் சென்று த.வெ.க தலைவர் விஜய்க்கு திமுகவினர் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அரசியல் தளத்தில் கவனம் பெற்றிருக்கிறது.

Vijay DMK TVK

பீகாரில் மேற்கொள்ளப்பட்ட SIR நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தின. இந்நிலையில் இதேபோல நாடு முழுவதும் SIR நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இதனையடுத்து இன்று முதல் தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் SIR நடவடிக்கை இன்று முதல் தொடங்குகிறது. தமிழ்நாட்டில் வீடு வீடாக சென்று வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணிகள் நவ.4ம் தேதி தொடங்கி டிச.4ம் தேதி வரை நடைபெறும் என்றும், இந்த பணிகள் முடிந்து டிச.9ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் டிச.9 முதல் ஜன.8 வரை தெரிவிக்கலாம். ஆட்சேபனை தொடர்பான சரிபார்ப்புகள் டிச.9 முதல் ஜன.31 வரை மேற்கொள்ளப்படும். இந்த பணிகள் எல்லாம் முடிந்து பிப்.7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த SIR நடவடிக்கையை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. இது தொடர்பாக விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்திருக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்க தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அழைப்பு தொடர்பான கடிதத்தை திமுக நிர்வாகிகள் பனையூரில் உள்ள விஜய் இல்லத்திற்கு சென்று கொடுத்திருக்கின்றனர்.

முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின் மீது விஜய் ஏராளமான விமர்சனங்களை அடுக்கியிருந்தார். ஆனால் அவரது விமர்சனங்களுக்கு முதலமைச்சர் நேரடியாக எந்த பதிலையும் சொல்லவில்லை. விஜய்யை கண்டுக்கவே இல்லை. திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களே விஜய்யின் பேச்சுக்கு பதிலடி கொடுத்திருந்தனர். விஜய்க்கு நேரடியாக பதிலடி கொடுத்தால், அவரை நேரடி போட்டியாக ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் என்பதாலேயே முதல்வர் விஜய்க்கு நேரடி பதிலளிக்காமல் இருந்தால் என்று சொல்லப்பட்டது. இப்போது விஜய்க்கு அழைப்பு விடுத்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

முன்னதாக இது தொடர்பாக முதலமைச்சர் விடுத்திருந்த அறிக்கையில். ""மக்களாட்சி மாண்பைச் சிதைப்பதையும், ஜனநாய கத்தை சின்னாபின்னப் படுத்துவதையும் தொடர்ந்து தொய்வில்லாமல் செய்வதே ஒன்றிய பா.ஜ.க. அரசின் வழக்கமான பழக்கம் ஆகும். அதற்கு ஏற்ப தன்னாட்சி பெற்ற அமைப்புகளையும் தங்களது விருப்பத்துக்கு வளைத்துச் செயல்படுத்தி வருகிறது.

சந்தேகத்துக்குரிய தேர்தலை
தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது
குறிப்பாகத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் சர்ச்சைக்குரியவையாக மட்டுமல்ல, சந்தேகத்துக்குரியவையாக இருக்கின்றன. முறையான தேர்தல், வெளிப்படையான தேர்தல், நேர்மையான தேர்தல், உண்மையான தேர்தல் நடத்துவதுதான். தேர்தல் ஆணையத்தின் ஒரே பணியாகும். ஆனால், சமீபகாலமாக தங்களுக்கு விருப்பமான உத்தரவுகள் மூலமாக சந்தே கத்துக்குரிய தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. இதற்கு வெளிப்படையான உதாரணமாக பீகார் தேர்தல் அமைந்துள்ளது.

பீகார் மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தமானது, உண்மையான வாக்கா ளர்களை நீக்குவதற்கான சதியாக மட்டுமே அமைந்தி ருந்தது என்பதைக் கண்டோம்.

உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத தேர்தல் ஆணையம்!

நம்பிக்கைக்குரிய தகவல்களின்படி பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டார்கள். பின்னர், சில லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டார்கள். உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது மாண்பமை நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவையே தேர்தல் ஆணையம் மதிக்க வில்லை. பின்பற்றவில்லை. செயல்படுத்தத் தயாராக இல்லை. இந்த ஜனநாயக விரோதச் செயலைச் செய்யத் தூண்டியது ஒன்றிய பா.ஜ.க. அரசு ஆகும்.

இந்த நிலையில் SIR என்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் அனைத்து மாநிலங்களிலும் விரைவில் செயல்படுத்தப்படும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார். இன்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர், தமிழ்நாட்டுக்கான தேதிகளை அறிவித்துள்ளார்.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் இதுபோன்ற பணிகளை நடத்துவது என்பது மிகமிகச் சிரமம் ஆகும். வடகிழக்குப் பருவமழை பெய்து வரும் காலத்தில் வாக்காளர் பட்டியல் குறித்த இது போன்ற மிகப்பெரிய பணிகளைச் செய்வது சிரமம் ஆகும். நடைமுறைச் சாத்தியம் இல்லாத காலத்தை தேர்தல் ஆணையம் தேர்வு செய்துள்ளது. "ஒளிப்படம் ஒட்டித் தர வேண்டும், பழைய வாக்காளர் பட்டியலை இணைய தளத்தில் பார்த்து இணைக்க வேண்டும்" என்று சொல்வது எல்லாம் பெரும்பான்மை வாக்காளர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தும்.

ஆதார் அட்டையை முழுமையான ஆவணமாக ஏற்க மறுப்பது ஏன்?

உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் ஆதார் அட்டையை முழுமையான ஆவணமாக ஏற்க மறுப்பது ஏன்? குடும்ப அடையாள அட்டைகளை முழுமையான ஆவணமாக ஏற்க வேண்டும் என்று நாங்கள் இதுவரை வைத்த கோரிக்கையை ஏற்க மறுப்பது ஏன்?

வாக்காளர் பட்டியல் சீரமைக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால், அதனை அவசர அவசரமாகச் செய்யக் கூடாது. கால அவகாசம் கொடுத்துச் செய்ய வேண்டும். நடைமுறைச் சிக்கல்கள் இல்லாமல் செய்ய வேண்டும். ஏப்ரல் மாதம் தேர்தலை வைத்துக் கொண்டு இப்போது இதனைச் செய்யத் தொடங்குவது சரியானது அல்ல. முறையானது அல்ல. எனவே, வாக்காளர் பட்டியல் சிறப்புச் சீர்திருத்தத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.

SIR என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டம் இதனுள் இருக்கலாம் எனச் சந்தேகப்படுகிறோம். பீகாரில் இசுலாமியர்கள், பட்டியல் சமூகத்தினர், பெண்கள் என்று குறிவைத்து இந்த நீக்கம் நடந்தன. பீகாரில் ஒரே தொகுதியில் 80,000 இசுலாமியர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க முயற்சி நடந்ததாக மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் அவர்கள் குற்றம்சாட்டினார். இது போன்ற எந்தச் சதியையும் தமிழ்நாடு அனுமதிக்காது. தமிழ்நாடு ஒன்று சேர்ந்து போராடும். போராட வேண்டும்.

நவ. 2 இல் அனைத்துக் கட்சிக் கூட்டம்

இது தமிழ்நாட்டுக்கான பிரச்சினை ஆகும். தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் இயக்கங்களும் இதனை உன்னிப்பாக கண்காணித்து தடுத்தாக வேண்டும். எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் பங்கேற்கும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நவம்பர் 2 - ஞாயிறு அன்று காலை 10 மணி அளவில், தியாகராய நகரில் உள்ள "ஓட்டல் அகார்டில்" நடைபெற இருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அரசியல் வேறுபாடுகளை கடந்து பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

அக்கூட்டத்தில் தலைவர்கள் வைக்கும் கோரிக்கைகள், ஆலோசனைகள் அடிப்படையில் நமது அடுத்த கட்ட செயல்பாடுகள் அமையும் என உறுதி அளிக்கிறோம்.

மக்களாட்சியையும், மக்களின் உரிமைகளையும், தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் மனதில் வைத்து, அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்று சேர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+