கரூரில் கால் வைத்த எஸ்ஐடி..ஆக்சனில் அஸ்ரா கார்க்! கைதாக போகும் விஜய்! தவிக்குது தமிழக வெற்றிக் கழகம்
சென்னை: கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நடத்திய பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில் உயர் நீதிமன்றம் நியமித்த ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே, விஜயிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க இருப்பதாகவும், தேவைப்பட்டால் அவர் கைது செய்யப்படலாம் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் கடந்த 27ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். அதில் 18 பெண்கள், 5 சிறுவர்கள், 13 ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தற்போது திருச்சி மற்றும் மதுரையில் நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரூர் கூட்ட நெரிசல்
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டது. அதற்கு தலைவராக ஐஜி அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சிறப்பு புலனாய்வு குழுவில் இரண்டு எஸ்பிக்கள், ஒரு ஏடிஎஸ்பி, இரண்டு டிஎஸ்பி, ஐந்து இன்ஸ்பெக்டர்களும் இடம் பெற்றிருக்கின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு காவல்துறையிடம் இருந்து இந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை, முதல் கட்ட ஆவணங்களை பெற்ற சிறப்பு புலனாய்வு குழு நேற்று கரூர் சென்றது.
அஸ்ரா கார்க்
வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று நண்பகலில் வேலுச்சாமிபுரம் சென்றனர். அங்கு விஜய் பிரச்சாரம் செய்த இடம், அவரது பேருந்து நின்ற இடம், ஜெனரேட்டர் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் இடம், சாலையில் நெரிசல் ஏற்பட்ட பகுதிகள், முறிந்து விழுந்த மரக்கிளைகள், தாவி குதித்த தொண்டர்கள் ஏறியதாக சொல்லப்படும் டிரான்ஸ்பார்மர் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். தொடர்ந்து சைபர் கிரைம் எஸ்.ஐ, தனிப்பிரிவு போலீசாரிடமும் அஸ்ரா கார்க் விசாரணை நடத்தினார்.
சிறப்பு புலனாய்வு குழு
இதற்கிடையே நடிகர் விஜய் இடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஒப்படைக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் நேரடி சாட்சியங்களிடமும் விசாரிக்கப்பட்டுள்ளது. தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி விஜயிடம் விசாரிக்க வேண்டும் என சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விசாரணைக்கு பிறகு தேவைப்பட்டால் விஜய் கைது செய்யப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. தேவைப்பட்டால் விஜயை கைது செய்வோம் என அமைச்சர் துரைமுருகன் சொன்னதையும் இங்கே கவனிக்க வேண்டும்.
பிரசாரம் விபத்து
இந்த நிலையில் விஜயின் ஆதரவாளர்கள் மீது அடுத்தடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச் செயலாளர் புஷி ஆனந்த், சி.டி.ஆர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் தான் தொண்டர்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாக விஜயின் பிரச்சார பேருந்தின் ஓட்டுநர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு பிரிவுகளின் கீழ் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
சங்கீதாவால் வந்த சட்டச் சிக்கல்.. விஜய்யின் வேட்புமனு தள்ளுபடியாக வாய்ப்பு? வெளியான ஷாக் பின்னணி! -
ஜனநாயகன் படம் பார்த்த மறு தணிக்கை குழுவினர்! தேர்தல் நடத்தை விதிகளால் எடுத்த முடிவு! -
அந்த கூட்டணி, இந்த கூட்டணிலாம் கிடையாது! ஆல் ஏரியாவுலயும் நாம்தான் கில்லி! இஃப்தார் நோன்பில் விஜய்! -
மன்னிப்பு கோரிய ஆதவ் அர்ஜுனா.. மகிழ்ச்சியில் புஸ்ஸி ஆனந்த் டீம்.. உச்சத்தில் தவெக கோஷ்டி பூசல்! -
திருப்பரங்குன்றத்திற்கு பேசாதது ஏன்? விஜய்க்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய தமிமுன் அன்சாரி! -
NDA கூட்டணியில் விஜய்? எஸ்பி வேலுமணி எடுக்கும் கடைசி கட்ட முயற்சி.. முக்கிய புள்ளி சொன்ன தகவல் -
திமுகவை திணறடிக்க திட்டம் போடும் சிபிஐ.. பாஜக மெகா பிளான்.. மிகப்பெரிய அரசியல் ட்விஸ்ட் வருது -
ரஜினிகாந்த்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட ஆதவ் அர்ஜுனா! அடுத்த வரியே கொடுத்த விளக்கம்! -
கால் வைக்கிற இடமெல்லாம் கன்னி வெடி.. ரஜினியை வைத்து விஜய்யை மொத்தமாக முடித்துவிட்ட ஆதவ் அர்ஜுனா -
"விசில்" நம் தேசிய கீதம்.. மேடையில் ஓப்பனாக பேசிய ஓ.பன்னீர்செல்வம் -
Vijay: விஜய் கொண்டு போன கத்தரிக்கோலுக்கு பின்னாடி இப்படி ஒரு ஜாதகம்? பிரபலம் விளக்கம் -
தவெக தனித்தே போட்டி.. பெரம்பூரில் களமிறங்கும் விஜய்? ஆதவ், புஸ்சி ஆனந்த் போட்டியிடும் தொகுதிகள் எது?












Click it and Unblock the Notifications