"அபார்ஷன் கேஸ்".. 10 நாள் மணிகண்டனுக்கு அடைக்கலம் தந்ததே சிட்டிங் "புள்ளி"யாம்.. மேட்டரை கக்கிய மாஜி
மாஜி அமைச்சர் மணிகண்டனுக்கு, எம்எல்ஏ ஒருவர் அடைக்கலம் தந்து வந்தாராம்
சென்னை: ஒரு பரபரப்பான விஷயம் கசிந்து வருகிறது.. மாஜி அமைச்சர் மணிகண்டன் இவ்வளவு நாள் தலைமறைவாக இருந்தார் இல்லையா? அவருக்கு அடைக்கலம் தந்ததே ஒரு முக்கிய கட்சியின் சிட்டிங் எம்எல்ஏதானாம்..!
கல்யாணம் செய்து கொள்வதாக தன்னை மணிகண்டன் ஏமாற்றிவிட்டார் என்றும், அவரை நம்பி 3 முறை அபார்ஷன் செய்து கொண்டதாகவும், இந்த விஷயம் மணிகண்டன் சம்பந்தப்பட்டவர்களுக்கும் நல்லா தெரியும் என்றும் நடிகை சாந்தினி போலீசில் புகார் தந்தார்.. இது தொடர்பாக சில ஆதாரங்களையும் அளித்திருந்தார்.
இந்த புகாரின்போரில் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு மகளிர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.. ஆனால் அதற்குள் இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி, மாஜி அமைச்சர் மணிகண்டன் சென்னை ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.. அந்த மனுவை கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது.

பேட்டி
ஆனால், கோர்ட் கேஸ் நடந்து கொண்டிருக்கும்போதே மணிகண்டனை காணவில்லை.. சாந்தினி போலீசில் புகார் தந்த அன்றைய தினம் மணிகண்டன் ஒரு டிவி சேனலுக்கு பேட்டி தந்திருந்தார்.. அதில், "சாந்தினி யாரென்றே தனக்கு தெரியாது.. பணம் பறிக்கவே அந்த கும்பல் இப்படி செய்கிறது" என்று தன் மீதான புகாருக்கு மறுப்பு சொன்னார்.. ஆனால், இப்படி பேட்டி தந்துவிட்டு அதற்கு பிறகு, மணிகண்டன் எங்கே போனார் என்றே தெரியவில்லை.

தேடல்
முன்ஜாமீன் மனு கோர்ட்டில் டிஸ்மிஸ் ஆகும்வரை, மணிகண்டன் சீனிலேயே வரவில்லை.. அவரை அப்போதிருந்தே போலீசார் தேடி வந்தனர்.. சென்னையில் இருப்பதாக சொன்னார்கள்.. ஆனால் அங்கு அவர் இல்லை.. பிறகு சேலத்தில் இருப்பதாக சொன்னார்கள்.. அங்கேயும் இல்லை.. ராமதநாதபுரத்திலேயேதான் பதுங்கி உள்ளார் என்றார்கள்.. அங்கேயும் இல்லை..

மணிகண்டன்
இந்த சமயத்தில்தான் மதுரையில் மணிகண்டன் பதுங்கி இருப்பதாக செய்திகள் வரவும், அடையாறு மகளிர் போலீஸார் தனிப்படையை வைத்து அவரை கைது செய்ய மதுரைக்கு விரைந்தனர்.. பிறகு, திருநெல்வேலியில் இருந்து பெங்களூர் சென்று விட்டதாக தகவல் வரவும், பெங்களூரில் அவரை கைது செய்துவிட்டனர்..!

யார் காரணம்?
அப்படி என்றால், மணிகண்டன் இத்தனை நாளும் எங்கு தங்கியிருந்தார்? வெறும் ரெண்டு நாளில் பப்ஜி மதனை கைது செய்த போலீசாரால், ஒரு மாத காலமாக தலைமறைவாக இருந்த மணிகண்டனை மட்டும் எப்படி கைது செய்ய முடியாமல் போகும் என்ற சந்தேகமும் வலுத்தது.. யாருடைய சப்போர்ட்டும் இல்லாமல் மணிகண்டனால், இப்படி ஓடி ஒளிய முடியாது என்றும் சலசலப்புகள் கிளம்பின.

எம்எல்ஏ?
இப்படிப்பட்ட சூழலில்தான், அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாக இருக்கவே, ஒரு எம்எல்ஏதான் காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.. இப்படி அடைக்கலம் தந்தவர் தற்போதைய சிட்டிங் எம்எல்ஏ ஆவார்.. முக்கிய மற்றும் தேசிய கட்சியை சேர்ந்தவர்.. அதிலும் இவர் தென்மாவட்ட எம்எல்ஏவாம்.. கைதான மணிகண்டனிடம் 3 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.. அப்போதுதான் இந்த விஷயமே போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

பாலியல் வன்புணர்வு
அதுமட்டுமல்ல, சாந்தினியை தொழில் ரீதியாக மட்டுமே தெரியும் என்றும், பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்புணர்வில் ஈடுபடவில்லை என்றும், பணம் பறிக்கவே இப்படி சாந்தினி செயல்படுகிறார் என்றும் மணிகண்டன் போலீசில் சொன்னாராம்.. கடந்த 10 நாட்களாகவே அந்த தென் மாவட்டத்தை சேர்ந்த எம்எல்ஏவின் வீட்டிலேயே மணிகண்டன் தங்கயிருந்தாராம். அங்கிருந்தபடியே சென்னை ஹைகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் உட்பட அனைத்து காரியங்களையும் செய்துள்ளார்.

பரபரப்பு
தன்னை போலீசார் எந்நேரமும் கைது செய்யக்கூடும் என்பதால், அந்த எம்எல்ஏவதான் மணிகண்டனை பெங்களூருக்கு தப்பி செல்ல உதவினாராம்.. இப்போது விசாரணைக்கு பிறகு மணிகண்டன் ஜெயிலில் இருந்தாலும், இவருக்கு அந்த எம்எல்ஏ ஏன் உதவ வேண்டும்? என்ன காரணம்? மணிகண்டனுடன் வேறு யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா? போன்ற பரபரப்பு கேள்விகளும் எழுந்துள்ளன












Click it and Unblock the Notifications