சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெற்றிக்கணக்கை கவுன்சிலராக தொடங்கிய பரிதி இளம் சுருதி...சிவகாமிக்கு தோல்வியை பரிசளித்த மக்கள்

சென்னை மாநகராட்சி 99வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமியை திமுக வேட்பாளர் பரிதி இளம்சுருதி தோற்கடித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக கூட்டணியில் சென்னை மாநகராட்சியில் 99வது வார்டில் இரட்டை இலை கட்சியில் போட்டியிட்ட முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமியை தோற்கடித்துள்ளார் திமுகவின் பரிதி இளம் சுருதி. வார்டு கவுன்சிலாக வெற்றிக்கணக்கை தொடங்கியுள்ளார் பரிதி இளம் சுருதி.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. சென்னை மாநகராட்சியை எந்தக் கட்சி கைப்பற்றி வாகை சூடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரத்தின் படி சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டுகளில் பல இடங்களில் திமுக முன்னிலையில் உள்ளது.

அரியலூர் மாணவி மரணம்.. பாஜகவை ஒதுக்கி தள்ளிய மைக்கேல்பட்டி! தோல்வி அடைந்த வியூகம்! திமுக மாஸ் வெற்றிஅரியலூர் மாணவி மரணம்.. பாஜகவை ஒதுக்கி தள்ளிய மைக்கேல்பட்டி! தோல்வி அடைந்த வியூகம்! திமுக மாஸ் வெற்றி

சென்னையில் உள்ள 16 சட்டசபைத் தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே எம்.எல்.ஏக்களாக உள்ள நிலையில் உள்ளாட்சித் தேர்தலிலும் 90% இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் திமுக செயல்பட்டு வருகிறது. சென்னை மேயர் பொறுப்பிற்கு உதயநிதி ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்படுவார் என கூறப்பட்டு வந்த நிலையில் தமிழக அரசின் அரசாணை அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. இருப்பினும் திமுகவின் முன்னணி தலைவர்களாக பொறுப்பு வகித்த வாரிசுகள் இத்தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கி உள்ளனர்.

பரிதி இளம் வழுதியின் மகன்

பரிதி இளம் வழுதியின் மகன்

சென்னை மாநகராட்சியின் எழும்பூர் தொகுதிக்குட்பட்ட 99ஆவது வார்டில் போட்டியிடுவதற்கு திமுகவின் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகனான பரிதி இளம் சுருதிக்கு போட்டியிடவாய்ப்பு வழங்கப்பட்டது. அவர், அதிமுக சார்பில் போட்டியிட்ட ஐஏஎஸ் அதிகாரி சிவகாமியை எதிர்த்து அந்த வார்டில் களம் இறங்கினார்.
சிவகாமி ஐ.ஏ.எஸை தோற்கடித்து வெற்றிக்கணக்கை தொடங்கி உள்ளார் பரிதி இளம் சுருதி.

யார் இந்த பரிதி இளம் சுருதி

யார் இந்த பரிதி இளம் சுருதி

1984 தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் சத்தியவாணி முத்துவை தோற்கடித்து வெற்றி கணக்கை தொடங்கியவர் பரிதி இளம் வழுதி. மறைந்த பரிதி இளம்வழுதிக்கு 3 மனைவிகள். முதல் மனைவி எஸ்.எம்.லலிதாவுக்கு திலீபன் என்ற மகனும் இந்திரஜித் என்ற 2 மகன்களும், சந்தியா என்ற மகளும் உள்ளனர். 2-வது மனைவியான உதயகுமாரிக்கு பரிதி இளம்சுருதி என்ற மகனும், அனு யாழினி என்ற மகளும், 3-வது மனைவியான எலிசபெத்துக்கு ப்ரீத்தி பரிதி என்ற மகளும் உள்ளனர்.

முதல் வெற்றி

முதல் வெற்றி

தி.மு.க.வின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட செயலாளராக இருந்த இளம்வழுதியின் மகன் ஆவார். இவர் தி.மு.க.வில் இருந்த போது 6 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர். தனது 25-வது வயதில், 1984-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் பெரும் தலைவர்களில் ஒருவரான சத்தியவாணி முத்துவை பெரம்பூர் தொகுதியில் எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர். எழும்பூர் தொகுதியில் 1989 முதல் 2011 வரை தி.மு.க. வேட்பாளராக 5 முறை சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்.

 பரிதி இளம் சுருதிக்கு போட்டியிட வாய்ப்பு

பரிதி இளம் சுருதிக்கு போட்டியிட வாய்ப்பு

2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எழும்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பியிடம் தோல்வி அடைந்தார். பின்னர், தி.மு.க.வில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2013ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். அவரது மகன் பரிதி இளம் சுருதிக்கு சென்னை மாநகராட்சியில் 99ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமியை தோற்கடித்து வெற்றிக்கணக்கை தொடங்கி உள்ளார் பரிதி இளம் சுருதி.

 சிவகாமி ஐஏஎஸ் அரசியல் பயணம்

சிவகாமி ஐஏஎஸ் அரசியல் பயணம்

அரசியலில் ஈடுபட தனது ஐஏஎஸ் பணியை துறந்தவர் சிவகாமி. 1980ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த இவர், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உட்பட, உயர்ந்த பல பொறுப்புகளை வகித்தவர். அரசு பணிகளிலும் ஜாதி ரீதியான பிரச்சினைகளை இவர் சந்தித்தார். இதை தனது நாவல்கள் மூலம் வெளிப்படுத்தினார். 1986ல் இவரது முதல் நாவலான 'பழையன கழிதலும்' வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 1990இல் ஊடாக என்ற குறும்படத்தை இயக்கினார். இதன்பிறகு, 2003ல் இருந்து 'தலித் நிலஉரிமை இயக்கத்தில்' தீவிரமாக செயலாற்றினார்.

2008ல் விருப்ப ஓய்வு பெற்ற சிவகாமி, பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார்.

தொடர் தோல்விகள்

தொடர் தோல்விகள்

2009ல் கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் மக்கள் தோல்வியை பரிசளித்தனர். 2009ல் 'சமூக சமத்துவ படை' என்ற கட்சியை துவங்கினார். தொடர்ந்து தலித்துகள் பிரச்சினைக்காக குரல் கொடுத்து வருகிறார். தருமபுரியில் தலித் மக்கள் குடிசை எரிப்பு, தலித் சமூகத்தை சேர்ந்த டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை உட்பட பல பிரச்சனைகளிலும் அதிரடியாக வாய்ஸ் கொடுத்தவர் சிவகாமி. இவரின் தந்தை பழனிமுத்து முன்னாள் எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக கூட்டணி சார்பில் 99 வார்டு கவுன்சிலராக போட்டியிட்டு பரிதி இளம் வழுதியின் மகன் பரிதி இளம் சுருதியிடம் தோல்வியடைந்துள்ளார்.

English summary
Sivagami IAS defeat in 99th ward of Chennai corporation Election:( சிவகாமி ஐஏஎஸ் தோல்வி) Paruthi Ilam Suruthi has defeated former IAS officer Sivagami, who contested in the 99th Ward Irattai Ilai in the Chennai Corporation in the AIADMK alliance. Paruthi Ilam Suruthi has begun a winning streak as a ward councilor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X