அடுத்தவர் உழைப்பில் குளிர்காய நினைக்கிறார் சிவகார்த்திகேயன்.. விளம்பரத்தால் பராசக்திக்கு வந்த புது சிக்கல்!
சென்னை: ஜனநாயகன் படத்துக்கு போட்டியாகவே பராசக்தி திரைப்படம் வெளியிடப்படுவதாக ஒருபுறம் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சிவாஜி கையில் இருந்து தீ பரவட்டும் என்று தீப்பந்தத்தை பெறுவது போன்று பராசக்தி திரைப்படத்துக்கு விளம்பரம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
நேர்மையைக் காற்றில் பறக்கவிட்டு, அடுத்தவர் உழைப்பில், அடுத்தவர் பெயரில் குளிர்காய்ந்து, எப்படியாவது பணம் சம்பாதித்தால் போதும் என்று திரையுலகில் திரியும் கூட்டத்தில் ஒருவராக, இன்று சிவகார்த்திகேயனும், மனசாட்சி தேவையில்லை, பணம் மட்டும் போதும் என்ற நிலையில் பராசக்தி திரைக்குழுவும் உள்ளது என்றும் நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு எதிர்ப்பு
சிவகார்த்திகேயேன் நடித்துள்ள பராசக்தி திரைப்படம் வரும் 10 ஆம் தேதிக்கு திரைக்கு வர உள்ளது. விஜய்யின் ஜனநாயகன் படத்துடன் மோதுவதால் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பட வெளியீட்டை முன்னிட்டு பட தயாரிப்பு நிறுவனம் பல்வேறு புரமோஷன்களையும் செய்து வருகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதனிடையே, பராசக்தி படத்தின் விளம்பரங்களில் சிவாஜி படத்தை பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதுபோல
நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை இது தொடர்பாக கண்டனம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்த் திரையுலக வரலாற்றை 1952ல் புரட்டிப்போட்ட பராசக்தி திரைப்படத்தின் பெயரை மீண்டும் அதே பெயரில் தயாரிப்பதற்கு ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்திருந்தோம்.
ஆனால், ரசிகர்களின் வேண்டுகோள் மற்றும் எதிர்ப்பைப் புறந்தள்ளி மீண்டும் அதே பெயரிலேயே (பராசக்தி) திரைப்படம் தயாரிக்கப்பட்டு வெளிவரவிருக்கிறது. வேதனையிலிருக்கும் எங்களுக்கு, வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதுபோல, நேற்று ஒரு தொலைக்காட்சியில், தீ பரவட்டும் என்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களிடமிருந்து தீப்பந்தத்தை சிவகார்த்திகேயன் பெறுவதுபோல பராசக்தி திரைப்படத்திற்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
யார் அதிகாரம் கொடுத்தது?
நடிகர் திலகத்தின் வாரிசுகளாக பிரபு, மூன்றாம் தலைமுறையாக விக்ரம் பிரபு ஆகியோர் இன்றளவிலும் தமிழ்த் திரையுலகில் தடம்பதித்து சென்று கொண்டிருக்கையில், சிவகார்த்திகேயனுக்கு நடிகர் திலகத்தின் வாரிசு என்ற ரீதியில் விளம்பரப்படுத்திக்கொள்ள யார் அதிகாரம், அனுமதி கொடுத்தது?
நேர்மையைக் காற்றில் பறக்கவிட்டு, அடுத்தவர் உழைப்பில், அடுத்தவர் பெயரில் குளிர்காய்ந்து, எப்படியாவது பணம் சம்பாதித்தால் போதும் என்று திரையுலகில் திரியும் கூட்டத்தில் ஒருவராக, இன்று சிவகார்த்திகேயனும், மனசாட்சி தேவையில்லை, பணம் மட்டும் போதும் என்ற நிலையில் பராசக்தி திரைக்குழுவும் உள்ளது.
சிவாஜியின் ஆன்மா மன்னிக்காது
ஒரு யுகக் கலைஞனாக கலை உலகின் தவப்புதல்வனாக கலைஞர் கருணாநிதி அவர்களின் புரட்சிகர வசனங்களை தனது உணர்ச்சிகர நடிப்பால் தமிழினத்திடம் கொண்டுசேர்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை தமிழ்த் திரையுலகம் கலையின் கொடையாக உலகிற்குத் தந்த திரைப்படம் தான் "பராசக்தி".
அந்தப் பெயரை அபகரித்ததோடு மட்டுமல்லாமல், நடிகர்திலகத்தின் பெயரையும், புகைப்படத்தையும் தங்களுடைய வணிக நோக்கத்திற்காக, சுயலாபத்திற்காகப் பயன்படுத்துவதை நடிகர் திலகத்தின் ஆன்மா மன்னிக்காது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜனநாயகன் படத்தோடு சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் வெளியாவது விஜய் ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. விஜய்யின் கையில் இருந்து துப்பாக்கியை வாங்கிக் கொண்டு இப்போது அவருக்கு எதிராகவே செயல்படுவதாக கூறி சிவகார்த்திகேயனை விஜய் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications