விஜய் வெற்றி.. மக்கள் முடிவை தவறுன்னு சொல்ல நீங்க யார்? சிவக்குமார் சொன்னதும் சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன்
சென்னை: "மக்கள் தீர்ப்பை தவறென்று சொல்ல நீங்கள் யார்?" என்று விஜய்க்கு ஆதரவாக நடிகர் சிவக்குமார் பேசியுள்ளார். மேலும், தி.மு.க மற்றும் அ.தி.மு.க மீது அதிருப்தி ஏற்பட்டதால் மக்கள் விஜய்க்கு வாக்களித்துள்ளனர் என்றும், அவர் நல்லது செய்வார் என நம்புவோம் என்றும் சிவக்குமார் பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
சொத்து எதுவும் சேர்க்காத காமராஜரையே தோற்கடித்தார்கள்.. காங்கிரசை திமுக தோற்கடித்தபோது தமிழ்நாட்டில் விஷ கிருமி பரவிவிட்டது என பக்தவச்சலம் கூறினார். தங்களுக்கான தலைவரை இளைஞர்கள் தேர்வு செய்யும் போது அதை தவறு என சொல்ல நாம் யார்? என சிவக்குமார் கூறியுள்ளார்.

விஜய்க்கு ஓட்டு போட்டு இருக்காங்க..
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் சிவக்குமார் கூறியதாவது:- கடந்த 1954 ஆம் ஆண்டில் இருந்து காமராஜர் நாட்டை ஆண்டார். 9 வருஷம் ஜெயிலில் இருந்தார். 9 வருஷம் நாட்டை ஆண்டார். அவர் உயிரிழக்கும் போது தலைமாட்டில் 140 ரூபாயும், 4 ஜோடி சட்டை.. இரண்டு ஜோடி செருப்பு.. ஏழு புத்தகங்கள்.. இவை மட்டும் தான் வைத்துவிட்டு போனார்.. இவர் மாதிரி ஒரு தலைவனை பார்க்க முடியுமா? இப்போ இப்படி யாரையாவது பார்க்க முடியுமா?
அப்படிப்பட்ட காமராஜரையே தோற்கடித்தீங்க தானே.. காமராஜரே தேவையில்லை மாற்றம் வேண்டும் என சொன்னீங்க.. அப்போது காங்கிரசை திமுக தோற்கடித்தபோது தமிழ்நாட்டில் விஷ கிருமி பரவிவிட்டது என பக்தவச்சலம் கூறினார். அவங்களை எப்படி விஷக்கிருமி என சொன்னீங்க.. 69 வருஷம் ஆண்டு இருக்காங்களே.. இப்போ அதுவும் பிடிக்காமல் தான் விஜய்க்கு ஓட்டு போட்டு இருக்கின்றனர்.
மக்கள் முடிவு பண்றாங்க..
எனவே இதனை மக்கள் தான் முடிவு பண்ணுகின்றனர். யார் வேண்டும், யார் வேண்டாம் என்பதை மக்கள் முடிவு செய்கின்றனர். மக்கள் முடிவு பண்ணினால் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இளைஞர்கள் 90 முதல் 95 சதவீதம் பேர் ஓட்டு போட்டு இருக்கின்றனர். அவங்க எல்லாரும் காசு வாங்காமல் தான் ஓட்டு போட்டு இருக்கின்றனர். பெண்களும் அதிகமாக ஓட்டு போட்டு இருக்காங்க..
அவங்க எல்லாம் யாரு.. என் பேரன், பசங்க எல்லாம் ஓட்டு போட்டு இருக்காங்க.. என் பேரன் தான் அடுத்து நாட்டை ஆளப் போகின்றவர்கள். அவர்கள் முடிவு செய்து ஓட்டு போட்டிருக்கும் போது அதனை ஏன் நாம் தப்பு என சொல்ல முடியும். என்.டி.ராமராவ், எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா என எல்லாரும் சினிமாவில் இருந்து தான் வந்தார்கள். அண்ணா கூட சினிமாவில் வசனம் எழுதினார். கலைஞரும் அப்படித்தான். மக்களுக்கு மற்றவர்களை விட சினிமாக் காரர்கள் நெருக்கமானவர்கள். அதனால் ஓட்டு போட்டுள்ளனர்.
நீங்க ஏன் படம் பார்க்க போறீங்க..
படித்தவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். மக்களுக்கு அறியாமை இருக்கின்ற வரை அரசியல்வாதிகள், சினிமாக்காரர்கள் பிழைத்துக் கொள்வார்கள்.. உங்களுக்கு அறிவு வந்தால் நீங்க ஏன் படம் பார்க்க போகின்றீர்கள். என்று பேசினார். அப்போது அருகில் இருந்த சத்தியராஜ் பாத்தீங்களா என சிரித்தார். சிவக்குமாரும் சத்தியராஜை தட்டி கொடுத்துக்கொண்டே இவ்வாறு பேசினார்.
-
போக்குவரத்து துறைக்குள் ஒளிந்திருக்கும் பூதம்.. வெள்ளை அறிக்கையில் வெளிவந்த உண்மை! -
ரிப்போர்ட்டில் ஷாக் விஷயமே இதுதான்.. வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் வில்சன் அதிர்ச்சித் தகவல்! -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய்.. எந்த வகையிலும் நியாயமற்ற அணுகுமுறை.. ஏன்? -
தொடரும் மின்வெட்டு.. முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு! 15,000 ஊழியர்களை நியமிக்க ஆர்டர் -
எதிர்ப்புக்கு பணிந்தது விஜய் அரசு.. விவசாயிகளுக்கு ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி! -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
விஜய்யின் அரசியல் எப்படி இருக்கு? ஒரு வார்த்தையில் ரஜினி ஸ்டைலில் பதில் சொன்ன லதா.. இப்படி சொல்லிட்டாங்களே? -
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
சென்னையில் பில்டிங் கட்டுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. முதல்வர் விஜய் உத்தரவு -
விஜய்க்கு பெரிய நன்றி சொல்லியே ஆகணும்.. ஏனென்றால்? அவர் இல்லனா ... உருக்கமாக பேசிய பாரதிராஜா தம்பி












Click it and Unblock the Notifications