சர்க்கரை நோயின் எதிரி! கொட்டி கிடக்கும் இரும்புச் சத்து.. பட்ஜெட்டில் சொன்ன சீவன் சம்பாவை தெரியுமா?
சென்னை: நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சீவன் சம்பா சாகுபடி செய்ய விதை விநியோகிக்கப்படும் என வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்திருந்தார்.

அவர் தனது உரையில்,
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர் (குறள்- 1033)
பருவநிலை மாற்றத்தின் காரணமாக தமிழகத்தில் புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்கள் ஆண்டுதோறும் நேரிட்டு பயிர் உற்பத்தியையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் வெகுவாகப் பாதிக்கின்றன. இத்தகைய இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் வருவாய் இழப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காத்திட 25 லட்சம் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை 4,436 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2022 -2023 ஆம் ஆண்டில் தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்த கனமழை மாண்டஸ் புயல், வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்த கனமழை, பருவம் தவறிப் பெய்த மழை, வறட்சி, கடந்த மார்ச் 2023 இல் பெய்த ஆலங்கட்டி மழை ஆகிய இயற்கைப் பேரிடர்களால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு 380 கோடியே 40 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை, 4 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
குறுவைப் பருவத்தில் ஏற்பட்ட மகசூல் இழப்பு, மிக்ஜாம் புயல், மக்காச்சோளப்பயிரில் ஏற்பட்ட மகசூல் இழப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட 1.85 லட்சம் விவசாயிகளுக்கு 118 கோடியே 77 லட்சம் நிவாரணம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கோடை மழை, தென்காசி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை காலத்தில் மழை குறைவால் ஏற்பட்ட மகசூல் இழப்பு, தென் மாவட்டங்களில் 2023- ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட பெருமழை போன்ற இயற்கைப் பேரிடர்களால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு 208 கோடியே 20 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை, 2 லட்சத்து 74 ஆயிரம் விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும்.
பழங்காலத்தில் நம் தமிழர்கள் நல்ல உணவுப் பழக்க வழக்கதினாலேயே் நல்வாழ்வு வாழ்ந்தனர். இதனை ஊக்குவிக்கும் விதமாக நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தக் கூடிய சீவன் சம்பா போன்ற மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய நெல் ரகங்கள், 2024-2025 ஆம் ஆண்டில் 1000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யும் வகையில் விதை விநியோகம் செய்யப்படும்.
நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தில் பாரம்பரிய நெல் ரகங்களான 60-ஆம் குறுவை, பூங்கார், தூயமல்லி, சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, சீவன் சம்பா, கருப்புக் கவுனி போன்றவற்றின் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன.
முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் 725 உயிர்ம வேளாண் தொகுப்புகளுக்கு ரூ.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். உயிர்ம வேளாண்மை மாதிரிப் பண்ணை உருவாக்க ரூ.38 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications