"பாலியல் அக்கிரமம்".. சிவசங்கர் பாபாவுக்கு உடம்பு சரியில்லையாம்.. . சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை
சிவசங்கர் பாபா இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை
சென்னை: பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபாவுக்கு திடீரென உடம்பு சரியில்லையாம்.. அதனால், டேராடூனில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று சிவசங்கர் பாபா தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவிகளும், முன்னாள் மாணவிகளும், தங்கள் பள்ளி ஆசிரியர்களால் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை புகார்களாக தெரிவித்து வருகின்றனர்.
இந்த புகார்களின் அடிப்படையில் போலீசார் விசாரணையும் நடத்திவருகின்றனர்.. அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் கிளம்பின.

ஆன்மீகவாதி
"ஆன்மீகவாதி' என்ற போர்வையில் தாங்கள் எந்த அளவுக்கு பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டோம் என்பது குறித்து, அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் சோஷியல் மீடியாவில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்துவருகின்றனர்.

ஆணையம்
எனவே, இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் இதுகுறித்து விசாரிக்க முன்வந்துள்ளது.. அதற்காக சிவசங்கர் பாபாவுக்கு சம்மனும் அனுப்பியிருந்தது... அதேபோல, பள்ளியின் தாளாளர் வெங்கட்ராமன், சிவசங்கர் பாபாவின் வழக்கறிஞர், ழுள்ளியின் பள்ளியின் தலைமை ஆசிரியர், 3 ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்குமே சம்மன் அனுப்பியது. அதன்படி, பள்ளியின் தாளாளர் வெங்கட்ராமன், 3 ஆசிரியர்கள் என 4 பேர் விசாரணைக்காக ஆஜராகினர்.

ஆஜர்
சம்பந்தப்பட்ட முக்கியமான நபர் சிவசங்கர் பாபா ஆஜராகவில்லை... ஆனால், அவருக்கு பதிலாக, அவர் தரப்பு வக்கீல் நாகராஜன் மட்டுமே ஆஜராகி உள்ளார்.. சிவசங்கர் பாபாவுக்கு திடீர் உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளதால், டேராடூனில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று சிவசங்கர் பாபா தரப்பில் ஆஜரான ஜானகி என்பவர் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.. அதற்கான மெடிக்கல் சர்ட்டிகேட், போட்டோ ஆதாரங்களையும் சமர்ப்பித்தார்...

பரபரப்பு
இதையடுத்து, இந்த பாலியல் புகார் தொடர்பாக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி நேரடியாக மற்ற அனைவரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்... ஆஜரானவர்களுடைய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது... சம்மன் அனுப்பியும் ஆஜராக நிலயில், சிவசங்கர் பாபா ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி உள்ளது பரபரப்பை தந்து வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications