பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபாவுக்கு ஜூலை 1 ஆம் தேதி வரை சிறை!
செங்கல்பட்டு: சென்னையை அடுத்த கேளம்பாக்கம் சுஷில் ஹரி சர்வதேச பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா இன்று காலை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை ஜூலை 1 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Recommended Video
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பாலியல் புகார் செய்து இருந்தனர். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

அப்போது உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் பகுதியில் இருப்பதாக அறிந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்றனர். அங்கு இல்லாததால் டெல்லி சித்தரஞ்சன் பூங்கா அருகே உள்ள ஒரு ஓட்டலில் டெல்லி போலீசார் உதவியுடன் சென்னை சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபாவை கைது செய்தனர்.
பின்னர் சிவசங்கர் பாபாவை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 2 நாள் ட்ரான்ஸ்ட் வாரண்ட் பெற்று சென்னைக்கு அழைத்து வந்தனர். டெல்லியில் இருந்து நேற்று இரவு 11.50 மணிக்கு சென்னை வந்தார்.

பின்னர் போலீஸ் ஜீப்பில் ஏற்றி கொண்டு விமான நிலையத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு போலீசார் கொண்டு சென்றனர்.
அங்கு சிவசங்கர் பாபாவிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளனர். இன்று காலை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை ஜூலை 1 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications