எகிறி ஓடிய 5 டீச்சர்கள்.. "அவர் ரொம்ப நல்லவருங்க".. காமுகனுக்கு சர்ட்டிபிகேட் தந்தவர்கள் திடீர் மாயம
சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த ஆசிரியர்கள் மாயமாகி உள்ளனர்
சென்னை: சிவசங்கர் பாபா விவகாரத்தில் உடந்தையாக இருந்த 5 டீச்சர்களும் தற்போது தலைமறைவாகி உள்ளனர்.. இதையடுத்து இவர்களை தேடும் பணி தொடர்கிறது.
சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்து இருந்தனர்.. இதையடுத்து, சிவசங்கர் பாபா மீது மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பிறகு இந்த வழக்கை சிபிசிஐடி கையில் எடுத்தது.. கைதாகி உள்ள பாபாவிடம் விசாரணையும் நடந்து வருகிறது.. அதேசமயம், சிவசங்கர் பாபாவின் இந்த காரியங்களுக்கு எல்லாம், அவரது பள்ளி ஆசிரியைகள் 5 பேர் உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது..
விசாரணை

கேளம்பாக்கம்
அதனால் அவர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைதொடர்ந்து கேளம்பாக்கம் பழனிகார்டன் பகுதியில் உள்ள 5 ஆசிரியைகளுக்கு நேரில் சம்மன் கொடுக்க சிபிசிஐடி போலீசார் முடிவு செய்தனர்.. அதன்படி நேற்று அந்த 5 டீச்சர்களின் வீடுகளுக்கும் சென்றனர்.. ஆனால், 5 பேருமே அங்கு இல்லை.. சம்மனுடன் அதிகாரிகள் வருவது தெரிந்து முன்கூட்டியே தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது.

சம்மன்
அந்த டீச்சர்கள் வீட்டில் இல்லாததால், அவர்களின் வீட்டு வாசலில் சம்மனை போலீசார் ஒட்டிவிட்டு சென்றனர்.. மேலும் தப்பி ஓடிய டீச்சர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.. இந்த 5 பேருமே சில தினங்களுக்கு முன்பு சிவசங்கர் பாபா பற்றி நல்லவிதமான கருத்துக்களை சொன்னார்கள்.. முக்கியமாக சிவசங்கர் பாபா ரொம்ப நல்லவர் என்று திடமாக சொல்லி இருந்தனர்.
Recommended Video

விசாரணை
சிவசங்கர் பாபாவுக்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்களை சொன்னதால், எந்த அடிப்படையில் இதுபோன்ற கருத்துக்களை நீங்கள் தெரிவித்தீர்கள் என்பது பற்றி அந்த டீச்சர்களிடம் விசாரிப்பதற்காகவே போலீசார் சம்மனுடன் சென்றதாக தெரிகிறது.

தலைமறைவு
வருகிற திங்கட்கிழமை முதல் 5 டீச்சர்களையும் நேரில் அழைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டு இருந்தனர்.... ஆனால் அதற்குள் 5 பேருமே எஸ்கேப் ஆகி உள்ளனர்.. அவர்களை தேடி பிடித்து விசாரித்தால்தான், சிவசங்கர் பாபா உண்மையிலேயே நல்லவரா? என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.. பார்ப்போம்..!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications