இனி ஆகாயத்தில் மிதந்தபடி பயணிக்கலாம்.. தமிழ்நாட்டில் 6 இடங்களில் வரும் ரோப்வே கார் சேவை! எங்கெல்லாம்
சென்னை: தேசிய நெடுஞ்சாலைகள் தளவாட மேலாண்மை லிமிடெட் (NHLML), தமிழ்நாட்டில் ஆறு ரோப்வே திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகளை (DPR) தயாரிக்க, தொழில்நுட்ப ஆலோசகர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. மத்திய அரசின் பர்வதமாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் இந்த ரோப்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் உள்ள பர்வதமலை, ஊட்டியில் உள்ள கிளென்மோர்கன்-சிங்காரா மின் நிலையம், குரங்கணி-டாப் ஸ்டேஷன், தோரணமலை முருகன் கோவில் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி மலைகளில் இரண்டு வழித்தடங்கள் என ரோப்வே திட்டங்களுக்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த ரோப்வே வழித்தடங்களின் உத்தேச நீளம் 0.5 கி.மீ. முதல் 4.6 கி.மீ. வரை இருக்கும்.

ஆறு ரோப்வே திட்டங்கள்
தேர்ந்தெடுக்கப்படும் ஆலோசகர்கள் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இதில் நிலப்பரப்பு மற்றும் புவி தொழில்நுட்ப மதிப்பீடுகள், சீரமைப்புத் திட்டங்கள், செலவு மதிப்பீடுகள், போக்குவரத்து தேவை பகுப்பாய்வு, சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு தாக்க மதிப்பீடுகள், திட்ட அமைப்பு மற்றும் சலுகை ஆவணங்களை உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.
மேலும், சட்டரீதியான அனுமதிகளைப் பெறுவதற்கும், நிலம் கையகப்படுத்துதல் திட்டங்களுக்கும் ஆதரவு அளிப்பதும் அவர்களின் பணிகளில் அடங்கும். இந்த ரோப்வே திட்டங்களுக்கான முன்மொழிவுக்கான கோரிக்கை (RFP), திட்டப் பணிகளை நிறைவு செய்ய ஆறு மாத காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. அத்துடன், கடுமையான தொழில்நுட்ப மற்றும் நிதித் தகுதி அளவுகோல்களையும் வகுத்துள்ளது.
பர்வதமாலா பரியோஜனா திட்டம், சுற்றுலா, புனித யாத்திரை மற்றும் மலைப்பகுதிகளை இணைக்கும் வகையில் ரோப்வே போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் முன்மொழியப்பட்ட இந்த ரோப்வே வழித்தடங்கள், தொலைதூர மற்றும் சூழலியல் ரீதியாக முக்கியமான இடங்களுக்கான அணுகலை மேம்படுத்துவதோடு, பயண நேரத்தையும், சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் குறைக்கும்.
ரோப்வே திட்டங்களுக்கான முன்மொழி
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL), மாமல்லபுரம், உதகமண்டலம் மற்றும் கொடைக்கானலில் பிரபலமான சுற்றுலாத் தலங்களை இணைக்கும் கேபிள் கார்கள் மற்றும் ரோப்வே போன்ற கேபிள் உந்துதல் போக்குவரத்து அமைப்புகளை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது. இதற்கிடையில், சென்னை மாநகராட்சி மெரினா கடற்கரையில் ரோப்வே ஒன்றை அமைக்க முன்மொழிந்துள்ளது. இது கடற்கரையின் கண்கவர் காட்சிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசும் கையில் எடுக்கும் திட்டம்
சென்னையில், மாநில அரசு இந்த ஆண்டு வெளியிட்ட பட்ஜெட் அறிவிப்பைத் தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) ரோப் கார் அமைப்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்படி, யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான மகாபலிபுரம் மற்றும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களில் ரோப்வே அடிப்படையிலான போக்குவரத்து முறையை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஆலோசகர்களை நியமிக்கும் பணியை CMRL தொடங்கியுள்ளது.
மகாபலிபுரத்தில் ஆய்வு செய்யப்படவுள்ள திட்டத்தின்படி, புதிதாக கட்டப்படவுள்ள பேருந்து நிலையத்திலிருந்து புகழ்பெற்ற கடற்கரை கோயில் வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு ரோப் கார் மூலம் வான்வழி இணைப்பு ஏற்படுத்தப்படும். அதாவது பேருந்து நிலையத்தில் தொடங்கி கடற்கரை கோவில் வரை இந்த ரோப் கார் செல்லும். சுற்றுலாத் தலங்களில் அதிக உயரத்தில் கேபிள் மூலம் இயக்கப்படும் போக்குவரத்து முறைகளை ஆராயும் மாநில அரசின் முயற்சி இதுவாகும்.
இது தொடர்பாக ஆலோசகர்கள் நியமிக்க டெண்டர்களை CMRL ஏற்கனவே வெளியிட்டுள்ளது. மகாபலிபுரம் மட்டுமின்றி, சென்னையின் தகவல் தொழில்நுட்ப பூங்கா மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலையில் (ECR) இரண்டு ரோப்வே பிரிவுகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தரமணி MRTS நிலையத்திலிருந்து கந்தன்சாவடி மெட்ரோ வரை 1.7 கி.மீ தூரமும், கந்தன்சாவடியிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக பாலவாக்கம் வரை 1.0 கி.மீ தூரமும் ரோப்வே அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த திட்டங்கள் எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசின் இந்த முயற்சி, ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைப் பின்பற்றி எடுக்கப்பட்டுள்ளது.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications