சென்னை விமான நிலையத்தில் புது வசதி.. இனி பயணிகளுக்கு சோர்வு இருக்காது.. வந்தாச்சு கேப்சூல் ரூம்கள்
சென்னை: களைப்பாக வரும் பயணிகள் ஓய்வெடுக்க வசதியாக சென்னை விமான நிலையத்தில் சிறிய ரக ஓய்வு அறைகள் எனப்படும் 'கேப்சூல்' ரூம்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
Recommended Video
பொதுவாக விமான நிலையங்களுக்கு இரண்டு விதமான பயணிகள் வருவார்கள். ஒருதரப்பினர் விமானத்தில் இருந்து இறங்கியதும் தாங்கள் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சென்றுவிடுவார்கள். அதேசமயத்தில், மற்றொரு தரப்பினர் ஒரு விமானத்தில் வந்து இறங்கி, மற்றொரு விமானத்துக்காக காத்திருப்பார்கள்.
வழக்கமாக இதுபோன்ற பயணிகள் சர்வதேச விமானத்தில் வந்து, உள்நாட்டில் வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டியவர்களாக இருப்பர். இவர்கள் தங்களின் அடுத்த விமானத்துக்காக பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

காத்திருப்பு
இதுபோன்ற சமயங்களில் வசதி படைத்தவர்களாக இருந்தால் அருகில் உள்ள ஹோட்டல்களுக்கு சென்று அங்கு தங்குவார்கள். சற்று பொருளாதார நெருக்கடியில் இருப்பவர்கள் விமான நிலையத்திலேயே மணிக்கணக்கில் காத்திருப்பர். இதில் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகளை வைத்திருப்பவர்களின் நிலைமை இன்னும் பரிதாபமாக இருக்கும்.

கேப்சூல் அறைகள்
பயணிகளின் இந்த நிலைமையை புரிந்துகொண்ட அதிகாரிகள், சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் சிறிய ஓய்வு அறைகளை அமைத்துள்ளனர். இவை 'கேப்சூல்' அறைகள் என அழைக்கப்படுகின்றன. இதில் ஒரு அறையில் பெரியவர் ஒருவரும், 12 வயதுக்கு கீழே உள்ள குழந்தை ஒன்றும் தங்கிக் கொள்ளலாம்.

வசதிகள் என்ன
அறை சிறியதாக இருந்தாலும் ஒருவர் படுத்து ஓய்வெடுத்துக் கொள்வதற்கும், உறங்குவதற்கும் தேவையான வசதிகள் இதில் உள்ளன. குறிப்பாக, பயணிகளின் உடைமைகளை வைக்கும் இடம், சுத்தமான படுக்கை, செல்போன் - லேப்டாப் சார்ஜ் செய்யும் வசதி, புத்தகம் படிப்பதற்கான சிறிய விளக்கு, ஏசியை கூட்டி - குறைப்பதற்கான வசதி உள்ளிட்டவை உள்ளன.

ஆன்லைனில் அப்ளை
இங்கு தங்குவதற்கு பயணிகள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். ஒரு மணிநேரம் தங்க குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். ஒரு விமானத்தில் வந்து மற்றொரு விமானத்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது பரிசோதனை நடவடிக்கைக்காக 4 கேப்சூல் அறைகள் மட்டுமே சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த கேப்சூல் அறைகளுக்கு பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பதை காண முடிகிறது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்.. தமிழ்நாடு 30 வருடம் பின்னோக்கி செல்லும்.. பரந்தூரை மூடிய விஜய்! -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
பரந்தூர் விமான நிலைய பணி நிறுத்தம்.. சிப்காட் பூங்கா அமைக்க முடிவு? விஜய்யின் மெகா திட்டம் -
பரந்தூர் ஏர்போர்ட் டிராப்? சென்னையை காவு கொடுக்க போகிறாரா விஜய்... நெட்டிசன் வெளியிட்ட பதிவு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்!












Click it and Unblock the Notifications