கோயம்பேட்டில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய ஆசிரியை.. கத்தி முனையில் சிதைத்த காமுகன்
சென்னை: சென்னை கோயம்பேட்டில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய ஆசிரியை கத்திமுனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் போதை ஆசாமியை தர்ம அடி கொடுத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
கோயம்பேடு பகுதியில் வசித்து வரும் 31 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 பெண் பிள்ளைகள் இருக்கிறார். இவரது கணவர் இரவு நேரத்தில் ஆட்டோ ஓட்ட சென்று வருகிறார். ஆசிரியை மட்டும் வீட்டில் மகள்களுடன் தனியாக இரவில் உறங்குவார்..

இந்நிலையில், கடந்த சில தினங்களாக சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் இரவு புழுக்கம் அதிகளவில் இருந்தது. இதன் காரணமாக ஆசிரியை நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக கதவை சற்று திறந்து வைத்து இரு பிள்ளைகளுடன் தூங்கியுள்ளார்.
திடீரென நள்ளிரவில் வீட்டுக்குள் போதை ஆசாமி ஒருவர் நுழைந்தார். வீடு புகுந்து தூங்கி கொண்டிருந்த பெண்ணை தட்டி எழுப்பி, கத்தி முனையில் மிரட்டி உள்ளார். அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் அருகிலேயே இரண்டு பெண் பிள்ளைகள் படுத்திருந்ததால் அந்த நபர் மகள்களை ஏதாவது செய்து விடுவாரோ என பயந்துள்ளார் அவர்.
இதனால், சத்தம் போட முயன்றபோது அந்த நபர் கத்தியை காட்டி மிரட்டி குழந்தைகளை கொன்றுவிடுவேன் என்று மிரட்டி உள்ளார். பின்னர் கத்தி முனையில் ஆசிரியையை போதை ஆசாமி பாலியல் வன்கொடுமை செய்தாராம். பின்னர் போதை ஆசாமி அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர்.
தப்பி ஓட முயன்ற அந்த நபரை விரட்டி பிடித்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கி உள்ளனர். பின்னர், அவரை கோயம்போடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அவரை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள். கத்திமுனையில் ஆசிரியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கோயம்பேட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications