விஜயகாந்த் சமாதிக்கு விசிட் அடித்த ஐந்தறிவு ஜீவன்! கேப்டனின் புகைப்படத்தில் செய்த அதிசய சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சமாதிக்கு பாம்பு ஒன்று வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நடிகர், அரசியல்வாதி, நல்ல நண்பர், சிறந்த ஸ்டண்ட் கலைஞர் என்ற பல்வேறு பரிமாணங்களை கொண்ட விஜயகாந்தின் முக்கியமான பரிமாணம் நல்ல மனிதர். ஏழை, பணக்காரன், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வித்தியாசம் பார்க்காமல் அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர்.

Snake came to bless Vijayakanth in his memorial

கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என்பார்கள். அதன்படி தனது மனதிற்கு பட்டதை பேசுபவர், உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசாதவர், தவறு என்றால் யாராக இருந்தாலும் தட்டி கேட்கும் துணிச்சல் என அவரின் நல்ல குணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

விஜயகாந்தை யாரும் குறை சொல்லவே முடியாது. அவருக்கு இருக்கும் "கெட்ட குணம்" உடல் நிலையை கவனித்துக் கொள்ளாமல் உதவி, கட்சி, மக்கள் தொண்டு என இருந்ததுதான். விஜயகாந்த் ஊரை அடித்தார் உலையில் போட்டார் என சொல்வதற்கு ஒரு எள் முனை அளவுக்கு கூட முகாந்திரம் இல்லாத அளவுக்கு ஏழைகளுக்கு அள்ளி அள்ளி கொடுத்தவர்.

அப்படிப்பட்ட வானத்தை போல மனம் படைத்த விஜயகாந்த், உடல்நலக் குறைவால் கடந்த வாரம் இதே நாளில் மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்றார். அதாவது டிசம்பர் 28ஆம் தேதி மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அவர் பார்த்து பார்த்து கட்டிய ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தில் (தேமுதிக கட்சி அலுவலகம்) நல்லடக்கம் செய்யப்பட்டது.

இங்கு ஒரு அதிசய சம்பவம் நடந்தது. விஜயகாந்தின் சமாதிக்கு அருகே அவருடைய புகைப்படம் உள்ளது. அங்கு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. அந்த புகைப்படத்தில் திடீரென ஒரு பாம்பு வந்து ஏறி படம் எடுத்துவிட்டு இறங்கி சென்றது. விஜயகாந்தை சிவபெருமானின் கழுத்தில் இருந்த பாம்பு ஆசிர்வதித்ததாக சொல்லப்படுகிறது.

விஜயகாந்த் நினைவிடத்திற்கு சாரை சாரையாக ரசிகர்களும் தொண்டர்களும் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு வரும் நிலையில் இந்த உயிரினமும் அவருக்கு அஞ்சலி செலுத்தியதாகவே கருதப்படுகிறது. விஜயகாந்த் ஊர்வலத்தின் போது அவரது உடலை கருடன் 3 முறை வட்டமடித்தது. புண்ணியங்களை செய்த விஜயகாந்தை சொர்க்கத்திற்கு கருடனை அனுப்பி பெருமாள் அழைத்து வர சொன்னதாகவும் கூறுகிறார்கள்.

பொதுவாக விஜயகாந்திற்கு செல்ல பிராணிகள் மீது அளவுக் கடந்த பாசம் ! அவரது வீட்டில் நாய், பறவைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கேப்டனை வீட்டில் காணாததால் ஒரு நாய் சோகமாக தேடும் வீடியோவும் வைரலானது. அது போல் ஒரு ஊரில் விஜயகாந்தின் புகைப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்திய போது அங்கு வந்த கருநாகம் விஜயகாந்தின் புகைப்படத்தின் மீது ஏறி இறங்கி அது பாட்டுக்கு யாரையும் தொல்லை செய்யாமல் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+