பாம்புக்கு பாயா போட்டாலும் பணியாது! காயம்பட்ட நாகராஜாவுக்கு சிகிச்சை.. அப்பறம் நடந்தது தான் ட்விஸ்ட்
சென்னை: பாம்புக்கு பால் வார்த்தாலும் விஷத்தைத் தான் கக்கும் என்பது நீண்ட நாட்களாக சொல்லப்படும் ஒரு புகழ் பெற்ற வசனம். உண்மையில் அப்படி ஒரு சம்பவம் தான் நடந்திருக்கிறது. காயம்பட்ட பாம்புக்கு சிகிச்சை அளித்தவர் அதே பாம்பால் கடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
இந்த உலகில் வசிக்கும் ஆயிரக்கணக்கான உயிரினங்களில் பாம்பு ஒன்று. ஊர்வன இனத்தைச் சேர்ந்த பாம்புகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் தன்மை கொண்டவை. பொதுவாக மனிதர்களிடம் இருந்து விலகி இருக்கவே பாம்புகள் விரும்பும். அதே நேரத்தில் மழைக்காலங்களில் கதகதப்பு தேடி மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வரும்.
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள், விஷமுள்ள பாம்புகளாக இருந்தாலும், விஷமில்லா பாம்புகளாக இருந்தாலும் அவற்றை அடித்துக் கொன்று விடுவது மக்களின் வழக்கம். தற்போது ஓரளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் குடியிருப்பு பகுதிகளுக்குள் பாம்புகள் புகுந்தால் கூட தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து அந்த பாம்புகளை பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதிகளில் விடப்படுகிறது.

மேலும் பாம்புகளை பிடிப்பதற்கென்று ஏராளமான தன்னார்வலர்களும் இருக்கின்றனர். குடியிருப்புகளுக்குள் புகுந்த பாம்புகளை கவனமாக கையாண்டு அவற்றை பிடித்து வனப்பகுதிக்குள் விட்டு வருகின்றனர். சில நேரங்களில் இது போன்ற காப்பாற்றப்படும் பாம்புகள் கடித்து பாம்பு பிடி வீரர்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெறுவது வழக்கம்தான். இதற்கு முன்னர் இதேபோல ஏராளமான சம்பவங்கள் நடந்திருக்கிறது. அப்படி ஒரு வீடியோ தான் சமூக வலைதளங்களில் தற்போது பகிரப்பட்டு வருகிறது.
பாத்திரமறிந்து பிச்சையிடு.😳 pic.twitter.com/1ibS6Itgi9
— சேட்டை🐯 (@Settai_R) June 5, 2025
நாகப்பாம்பு ஒன்றுக்கு கடுமையாக காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனை பார்த்த ஒருவர் அந்த பாம்பை லாவகமாக பிடித்து அதற்கு முதல் உதவி சிகிச்சை செய்து கட்டு போடுகிறார். அந்த பாம்பை விட முயற்சித்த போது அவரது கையில் அந்த பாம்பு பலமாக கடித்து விட்டது. இதனால் அவர் மயக்கம் அடைந்த நிலையில் உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
பாம்புக்கு என்னதான் பால் வார்த்தாலும் அது தனது வேலையை காட்டிவிடும் எனவும், பாம்புக்கு பாயாவும் பணியாரமும் கொடுத்தாலும் பணியாது என்ற வடிவேல் வசனத்தோடு இந்த வீடியோ பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் இது எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை.
இது ஒரு புறம் இருக்க பாம்பு பிடிக்கும் போது மிக கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் தீயணைப்புத் தொடங்கினர். பொதுவாக பாம்புகள் அச்சத்தில் மக்களிடமிருந்து விலகி இருக்கவே நினைக்கும். ஒருவேளை மாட்டிக்கொண்டால் மக்களை அச்சுறுத்துவதற்காக மட்டுமே படம் எடுக்கும். முடிந்தவரை கடிக்க முயற்சிக்காது. எதிர்பாராத விதமாக பாம்புகளை மிதித்து விட்டால் கூட அப்போதும் தப்பிக்க தான் நினைக்கும்.
தனக்கு ஆபத்து வருகிறது என்ற போது தான் மனிதர்களை தாக்கும். தற்போது சமூக வலைதளங்களில் ரீல்ஸ்க்காக சிலர் பாம்புகளை பிடித்து விளையாடி வருகின்றனர். உண்மையில் அப்படி செய்யவே கூடாது. பாம்புகளை பார்த்தால் எது விஷமுள்ள பாம்பு எது விஷம் இல்லாத பாம்பு என தெரியாது. எனவே பாம்புகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. ஒருவேளை பாம்புகளை நேரில் பார்க்க நேர்ந்தால் உடனடியாக தீயணைப்புத் துறைகளுக்கு தான் தகவல் தெரிவிக்க வேண்டும். தாங்களாகவே பாம்புகளை பிடிக்க வேண்டும் என நினைக்க கூடாது என அறிவுறுத்துகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications