பாம்பின் விஷம் செம காஸ்ட்லி! கோடி கோடியாய் பணம்.. யாரிந்த நபர்? பொறி வைத்து தூக்கிய கஸ்டமர் போலீஸ்
சென்னை: பாம்பு விஷம் கொடியது என்றுதான் தெரியும்.. அது எவ்வளவு விலை உயர்ந்தது என்று பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.. நேற்று நடந்த அதிர்ச்சியில் இருந்து குஜராத் மாநில மக்கள் இன்னும் மீளவில்லை.. என்ன நடந்தது தெரியுமா?
குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் போலீசார் வழக்கமான தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.. அப்போதுதான் அந்த பகுதியில் பாம்பு விஷம் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.. உடனே போலீசார் மப்டியில், அந்த குறிப்பிட்ட பகுதிக்கு வந்தனர்..

பாம்பு விஷம் வேண்டும் என்பது போல அந்த பகுதியில் சுற்றி திரிந்தனர்.. அப்போது சோனி என்பவர் பாம்பு விஷத்தை கூடுதல் தொகைக்கு விற்க தயாராக இருப்பது தெரியவந்தது.. உடனே வாடிக்கையாளர் போல, சோனியை தேடி சென்றார்கள் போலீசார்..
பாம்பின் விஷம்
சோனியிடம் சின்ன சின்ன டப்பாக்கள் இருந்ததை போலீசார் கவனித்தனர்.. உடனே அதை வாங்கி பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர்.. அந்த சிறிய டப்பாவில் 6.5 மில்லி லிட்டர் கொடிய பாம்பு விஷம் இருந்தது.. அந்த குட்டி டப்பாவில் இருந்த விஷத்தின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 5.85 கோடி ரூபாயாகும்..
விலையை கேட்ட போலீசார், ரூ.8 கோடிக்கு தங்களுக்கு விற்க முடியுமா? என்று பேரம் பேசி உள்ளனர்.. இறுதியில்தான் சோனியை சுற்றி வளைத்து பிடித்தனர்.. சோனியிடம் வழக்கமாக பாம்பு விஷம் வாங்கும் மற்ற 6 பேரையும் போலீசார் வலைவீசி பிடித்தனர்.
ரேவ் பார்ட்டி - போதை விருந்துகள்
தற்போது கைதான 7 பேரில் நான்கு பேர் மத்திய பிரதேசம், வதோதரா பகுதியில் இருந்து வந்தவர்கள் என்றும், மற்றவர்கள் சூரத் பகுதிக்கு சம்பந்தப்பட்டவர்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். குஜராத்தில் இதுவரை பிடிக்கப்பட்ட பாம்பு விஷங்களில் இதுதான் அதிக மதிப்புள்ள முதன்மையான சம்பவம் என்கிறார்கள்..
இந்த கொடிய பாம்பு விஷம், மருந்து தயாரிப்பில் முக்கியப் பொருளாகப் பயன்படும் ஒரு விஷமானது. குறிப்பாக, உயிர் காக்கும் விஷமுறிவு மருந்துகள் மற்றும் புற்றுநோய் சிகிச்சை மருந்துகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம், சட்டவிரோதமாக போதை பார்ட்டிகள், கொடுமை விஷமிகு செயல்கள் போன்றவற்றில் கூட இந்த விஷம் பயன்படுத்தப்படுவதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக 'ரேவ் பார்ட்டி' எனப்படும் போதை விருந்துகளில், மதுவுடன் கலந்து பாம்பு விஷம் பயன்படுத்தி போதைக்கு முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன...
பொறி வைத்த போலீஸ்
போலீசார் வழக்கை வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்து, இந்த குற்றப்பின்னணியில் தொடர்புடைய மற்ற நபர்களையும் தேடிக்கொண்டுள்ளனர். சோனி மற்றும் கைதான மற்றவர்களின் தொடர்பில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
கைதானவர்கள் மத்திய பிரதேசம் மற்றும் சூரத் பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என்பதால், இந்த கடத்தல் சர்வதேச பின்னணியை கொண்டிருக்கும், அதில் பலருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிறார்கள்.. மேலும் அந்த சம்பவத்தில் தப்பி ஓடிய அகமதாபாத் நகைக்கடை வியாபாரியையும் தேடி வருகிறார்கள் போலீசார்..












Click it and Unblock the Notifications