லெட்டர் பேட் கட்சியை எல்லாம் கூப்பிட்டாங்களே.. பாஜகவால் கலங்கிய ஓபிஎஸ்.. பரபரப்பு முடிவு? ட்விஸ்ட்
சென்னை: டெல்லி பாஜகவால் முற்றிலுமாக ஓரம்கட்டப்பட்டதால் ஓ பன்னீர்செல்வம் கடும் மன வருத்தத்தில் இருக்கிறாராம். அவர் இதனால் முக்கிய முடிவு ஒன்றை எடுக்க போவதாகவும் தகவல்கள் வருகின்றன.
நேற்று முதல்நாள் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டம் மோடி தலைமையில் டெல்லியில் நடந்தது. எதிர்க்கட்சிகளின் இந்திய கூட்டணிக்கு எதிராக டெல்லியில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மொத்தம் 38 கட்சிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டன.

பாரதிய ஜனதா கட்சி
சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு)
தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார் பிரிவு)
ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி (பசுபதி குமார் பராஸ் பிரிவு)
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
அப்னா தால் (சோனேலால்)
தேசிய மக்கள் கட்சி
தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (Neiphiu Rio)
அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம்
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா
மிசோ தேசிய முன்னணி
திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி
நாகா மக்கள் முன்னணி
இந்திய குடியரசுக் கட்சி (அத்வாலே)
அசோம் கண பரிஷத்
பாட்டாளி மக்கள் கட்சி
தமிழ் மாநில காங்கிரஸ்
ஐக்கிய மக்கள் கட்சி லிபரல்
சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (ஓம் பிரகாஷ் ராஜ்பர்)
சிரோமணி அகாலி தளம் (சன்யுக்தா)
மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி
ஜனநாயக்க ஜனதா கட்சி
பிரஹர் ஜனசக்தி கட்சி
ராஷ்ட்ரிய சமாஜ் பக்ஷா
ஜன் சுராஜ்ய சக்தி கட்சி
குக்கி மக்கள் கூட்டணி (மணிப்பூர்)
ஐக்கிய ஜனநாயகக் கட்சி
மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி
நிஷாத் பார்ட்டி
அகில இந்திய என் ஆர் காங்கிரஸ்
இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா
ஜன சேனா கட்சி
ஹரியானா லோகித் கட்சி
பாரத தர்ம ஜன சேனா
கேரள காமராஜ் காங்கிரஸ்
புத்திய தமிழகம்
லோக் ஜனசக்தி கட்சி
கோர்கா தேசிய விடுதலை முன்னணி
ஆகிய கட்சிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டன. இதில் பிரதமர் மோடிக்கு அருகிலேயே எடப்பாடி பழனிசாமி அமர வைக்கப்பட்டு இருந்தார். இந்த கூட்டத்தில் மொத்தமாக ஓ பன்னீர்செல்வம் புறக்கணிக்கப்பட்டார். அவருக்கு அழைப்பே செல்லவில்லை.
லெட்டர் பேட் கட்சிகள்,. எம்பிக்கள் இல்லாத கட்சிக்கு எல்லாம் அழைப்பு சென்றது. ஆனால் முன்னாள் முதல்வருக்கு.. பாஜக சொன்னபடியெல்லாம் கேட்டவருக்கு அழைப்பு செல்லவில்லை. இதனால் ஓ பன்னீர்செல்வம் கடும் மன வருத்தத்தில் இருக்கிறாராம். அவர் இதனால் மிக கடுமையாக அப்செட் ஆனதாகவும் கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில்தான் முக்கிய முடிவு ஒன்றை எடுக்க போவதாகவும் தகவல்கள் வருகின்றன. அதன்படி அடுத்த தேர்தலில் பாஜக கூட்டணி இல்லாமல் வெற்றிபெற முடியாது. அவர் இல்லையென்றால் அவரின் மகன் ஓ பி ரவீந்திரநாத் எம்பி ஆக வேண்டும். அதற்காகவாது கூட்டணியில் இருக்க வேண்டும். ஆனால் மீண்டும் அதிமுகவில் சேர முடியாது.
மன்னிப்பு கேட்டால் கூட சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று எடப்பாடி தரப்பும் உறுதியாக உள்ளது. இதன் காரணமாக ஓ பன்னீர்செல்வம் முக்கியமான வேறு ஒரு கட்சியில் சேர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஒத்த கருத்து கொண்ட அந்த கட்சியில் சேருவதற்கான பேச்சுவார்த்தையில் ஓ பன்னீர்செல்வம் ஈடுபட்டு வருகிறாராம்.
தான் சேராவிட்டாலும் தன்னுடைய மகனை மாட்டுவது சேர்த்துக்கொள்வது தொடர்பாக அவர் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக பாஜக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications