இவ்வளவு வன்மமா.. லைவில் தோனியை பற்றிய இப்படி பேசலாமா?.. கம்பீர் சொன்ன ஒரு வார்த்தை.. சர்ச்சை!
சென்னை; சிஎஸ்கே கேப்டன் தோனியை பற்றி கொல்கத்தா முன்னாள் கேப்டன் கம்பீர் வைத்த மறைமுக விமர்சனம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கம்பீருக்கும் தோனிக்கும் இடையில் பல காலமாக கருத்து மோதல் நிலவி வருகிறது. தோனியை பலமுறை கம்பீர் கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார். தோனியின் பேட்டிங் பார்ம், அவ்வப்போது அவரின் கேப்டன்சி குறித்து கம்பீர் விமர்சனம் செய்வது உண்டு.
முக்கியமாக உலகக் கோப்பை 2011 வெற்றியை குறிப்பிடும் போது யாராவது தோனியை பற்றி குறிப்பிட்டால் அதை கம்பீர் கடுமையாக எதிர்த்தது உண்டு. உலகக் கோப்பையை இந்தியாவிற்கு வென்று கொடுத்தது ஒரு வீரர் மட்டும் கிடையாது, மொத்த அணியின் செயல் அது என்று கம்பீர் குறிப்பிட்டு இருக்கிறார்.

தோனி
இந்திய அணியில் இருந்து கம்பீரை நீக்க தோனி முக்கிய காரணம் என்று கருத்து உண்டு. இதன் காரணமாக கம்பீர் தோனி மீது கோபமாக இருப்பதாக கூறப்படுவதும் உண்டும். ஆனால் தோனி இது போன்ற விமர்சனங்களை கண்டுகொண்டது இல்லை. கம்பீர் வைத்த விமர்சனங்கள் எதற்கும் தோனி ஒருமுறை கூட பதில் சொல்லியது கிடையாது.

கம்பீர்
இந்த நிலையில்தான் கடந்த பஞ்சாப் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்து கம்பீர் கருத்து தெரிவிக்கும் போது தோனியை மறைமுகமாக விமர்சனம் செய்தார். அந்த போட்டியில் பஞ்சாப் திரில் வெற்றி பெற்றது. கடைசி நேரத்தில் களமிறங்கிய தமிழ்நாடு வீரர் ஷாருக்கான் வெறும் 9 பந்தில் 22 ரன்கள் அடித்து போட்டியை பினிஷ் செய்து பஞ்சாப் அணியை வெற்றிபெற வைத்தார்.

ஷாருக்கான்
இந்த போட்டிக்கு பின் ஆட்டத்தை பினிஷ் செய்வது குறித்து விவாதம் நடந்தது. அப்போது பேசிய கம்பீர்.. கடைசியில் இறங்கி ஆட்டத்தை மாற்றினால் பினிஷரா.. ரசலை பினிஷர் என்று கூறுகிறார்கள். ஆனால் என்னை கேட்டால் கோலியைதான் பினிஷர் என்று கூறுவேன்.

கோலி பினிஷர்
கோலி போன்ற வீரர்கள் 3வது இடத்தில் இறங்கி கடைசி வரை ஆடுவார்கள். கடைசி வரை அவர்கள் ஆடி ஆட்டத்தை மாற்றுவார்கள். இவர்கள்தான் பினிஷர்கள். புள்ளி விவரங்களை பார்த்தாலே யாரு பினிஷர் என்று தெரியும்.

பினிஷர்
பினிஷர் என்று அழைக்கப்படும் சிலரை விட கோலி சிறந்த பினிஷர் என்று கம்பீர் குறிப்பிட்டார். தோனியைத்தான் பலர் பினிஷர் என்று அழைப்பது உண்டு. இதை மறைமுகமாக குறிப்பிட்ட கம்பீர் பினிஷர் என்று அழைக்கப்படும் நபர்களை விட கோலி சிறந்தவர் என்பது போல பேசி இருந்தார்.

வன்மம்
கம்பீரின் இந்த பேச்சை நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்துள்ளனர். தோனி மீது கம்பீருக்கு என்ன வன்மமோ? ஏன் இன்னும் தோனியை கம்பீர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். ஏன் தோனியை பற்றி குறைவாக கம்பீர் பேசி வருகிறார்.. இவர்களுக்கு இடையில் என்னதான் மோதல் என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications