அண்ணாமலை - மோடி - யோகி.. எழுந்த சந்தேகம்! தன்கரின் திடீர் ராஜினாமா.. மொத்த நாட்டையே உலுக்கிடுச்சே!
சென்னை: குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உடல்நலக் காரணங்களுக்காகப் பதவி விலகியுள்ளார். அவரின் இந்த முடிவு கடுமையான சில விவாதங்களை எழுப்பி உள்ளன. அதே சமயம் அவரின் இந்த முடிவு பல வதந்திகளுக்கும் வழி வகுத்துள்ளது.
74 வயதாகும் தன்கர் தனது உடல் நலத்திற்கு முன்னுரிமை அளிப்பதாகவும், மருத்துவர்களின் ஆலோசனையின் பேரிலேயே இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் தன்கர், "என் ஆரோக்கியத்திற்கு, உடல்நிலைக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாகவும், மருத்துவ ஆலோசனையின்படி இந்திய அரசியலமைப்பின் 67(a) பிரிவின்படி, இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

எழுந்த சந்தேகங்கள் - புரளிகள்
1. ஜெகதீப் தன்கரின் பதவி விலகலுக்கு நீதிபதி வர்மாவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கண்டனத் தீர்மானத்தை அவர் பரிசீலித்தது காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
2. நீதிபதி வர்மாவுக்கு எதிராக இரு அவைகளிலும் கண்டனத் தீர்மானம் கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. ராஜ்யசபாவின் அலுவுக் குழுவின் (Business Advisory Committee - BAC) நிகழ்ச்சி நிரலில் இது முக்கிய அம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தன்கர் எதிர்பாராத விதமாக எதிர்க்கட்சிகளின் தீர்மானத்தை அலுவுக் குழு கூட்டத்தில் கொண்டு வந்து, அடுத்த நாள் மதியம் 1 மணிக்கு அதை எடுத்துக் கொள்வதாகக் கூறியது அரசாங்கத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த விவகாரம் தொடர்பாக மூத்த அமைச்சர்கள் தன்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களது அதிருப்தியைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அவரது நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கண்டித்துள்ளனர். இதற்கு பதிலளித்த தன்கர், அரசாங்கத்திடமிருந்து அதிருப்தியை உணர்ந்ததாகவும், அதனால் விரைவில் பதவி விலக நேரிட்டதாகவும் ஒரு பக்கம் கூறப்படுகிறது. .
3. அதே சமயம் இவருக்கு இந்த வருடம் 75 வயது ஆகிறது. இதனால் அவர் ராஜினாமா செய்து.. அதன் மூலம் பிரதமர் மோடியை ராஜினாமா செய்ய அழுத்தம் கொடுக்கிறார் என்று கூறப்படுகிறது. இதற்கு பின் ஆர்எஸ்எஸ் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது பாஜகவில் 75 வயதுக்கு மேல் பதவி கிடையாது என்ற ரூல் உள்ளது. தன்கர் ராஜினாமா மூலம் மோடிக்கும் ராஜினாமா செய்ய பிரஷர் கொடுக்கலாம் என்கிறார்கள்.
4. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க யோகி ஆதித்யநாத்தை உத்தர பிரதேச முதல்வர் பதவியில் இருந்து மாற்றி தேசிய அரசியலுக்கு கொண்டு வரலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. இதற்காக நிதின் கட்கரி அல்லது ராஜ்நாத் சிங் ஆகியோரில் ஒருவரை துணை ஜனாதிபதியாக்கிவிட்டு யோகியை அந்த அமைச்சரவை பொறுப்பிற்கு கொண்டு வர பாஜக திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது.
5. ராஜ்நாத் சிங் துணை ஜனாதிபதி ஆவார் - அதன் மூலம் அண்ணாமலை அல்லது வேறு ஒருவர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆவார் என்றும் கதை உலாவி வருகிறது.
6. நட்டா - தன்கர் இடையிலான மோதலே தன்கர் ராஜினாமாவிற்கு காரணம் என்றும் ஒரு கதை சொல்லப்படுகிறது. இப்படி கூறப்படும் பல விஷயங்கள் புரளி என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கவனிக்க வேண்டிய விஷயமே.. தன்கர் ராஜினாமாவிற்கு உண்மையில் உடல்நிலைதான் காரணமா அல்லது வேறு விவகாரமா என்பதுதான். ஏனென்றால் தன்கர் ராஜினாமா பற்றி டெல்லியில் இருந்த பல டாப் தலைகளுக்கே தெரியவில்லை.. அப்படி ரகசியமாக என்னதான் நடந்தது.. என்ற கேள்வி எழுந்துள்ளது.
7. மோடி இதில் அமைதியாக இருப்பதும் பல கேள்விகளை எழுப்பி உள்ளது. நேற்று தன்கர் ராஜ்யசபா நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை. அவர் பிரியாவிடை உரையும் நிகழ்த்த மாட்டார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது மேலும் பல யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. பல்வேறு பொறுப்புகளில், குறிப்பாக இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக தன்கர் நாட்டுக்கு ஆற்றிய அர்ப்பணிப்பு மிக்க சேவையை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். மேலும், அவர் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவும் கூட கிட்டத்தட்ட 12 மணி நேரம் கழித்துதான். 12 மணி நேரமாக தன்கர் பற்றி மோடி எந்த போஸ்டும் செய்யாமல் இருந்தார் .. அப்படி மோடிக்கு தன்கர் மீது என்ன கோபம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications