"அண்ணே.. காமெடி பண்ணாம போங்க".. பாஜக "தலை"க்கு சுந்தரவள்ளி சைலன்ட் டோஸ்.. தடதடக்கும் ட்விட்டர்
சுந்தரவள்ளியின் ட்வீட் வைரலாகி கொண்டிருக்கிறது
சென்னை: தமிழக பாஜக பொருளாளர் ஒரு ட்வீட் பதிவிடவும், அதை கிண்டலடித்து சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளி இன்னொரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. இதுதான் வைரலாகி கொண்டிருக்கிறது.
3 புதிய வேளாண் சட்டங்கள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது... இந்த சட்டம் தங்களுக்கு எதிராக இருப்பதாகவும், இந்த சட்டங்களினால் எந்தவித பிரயோஜனமும் தங்களுக்கு இல்லை என்றும் விவசாயிகள் விவசாயிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
எனவே, இந்த சட்டத்தை திரும்பப் பெறக்கோரி, டெல்லியை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்...

கண்டனம்
இந்த 2 வருட காலத்தில் இந்தியாவை அதிர வைத்தது விவசாயிகளின் போராட்டம் என்றே சொல்லலாம்... சமீப காலமாக நடந்த போராட்டங்களிலேயே, மிகப்பெரிய போராட்டகவும் இது கருதப்படுகிறது.. இந்நிலையில், இந்த 3 சட்டங்களையும் ரத்து செய்வதாக பிரதமர் மோடி நேற்றைய தினம் அறிவித்தார்.. இது பல தரப்பினருக்கும் ஆச்சரியத்தை இது ஏற்படுத்தியது.. பாஜக அரசு கொண்டு வந்த சில சட்டங்கள் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகின்றன என்பதாலேயே, தாங்கள் கொண்டு வந்த சட்டத்தை பாஜக திரும்ப பெற்றுள்ளது என்ற கருத்து பரவலாக கூறப்பட்டது.

ராகுல்காந்தி
எனினும் இதற்கு பல்வேறு தலைவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டனர்.. "இது அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும், பிரதமர் முடிவை வரவேற்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், காங்கிரஸ் தரப்பு தான், பாஜகவின் முடிவை சீண்டி வருகிறது.. "நாட்டிற்கு உணவளிக்கும் விவசாயிகளின் சத்யாகிரக போராட்டத்திற்கு ஆணவம் அடிபணிந்தது. அநீதிக்கு எதிரான வெற்றிக்கு வாழ்த்துக்கள். நான் ஏற்கனவே மத்திய அரசு திரும்ப பெறும் என கூறியதையும் நினைவுப்படுத்துகிறேன்" என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

அமித்ஷா
ஆனால், பாஜக தரப்போ இதை கொண்டாடி வருகிறது.. உள்துறை அமைச்சர் அமித்ஷா, "வேளாண் சட்டங்கள் தொடர்பாக பிரதமர் மோடியின் அறிவிப்பு வரவேற்புக்குரியது. இது அரசியல்வாதி போன்ற முடிவு. பிரதமர் மோடி, தனது பேச்சின் போது, இந்தியா தொடர்ந்து விவசாயிகளுக்கு சேவையாற்றும். அவர்களின் வளர்ச்சிக்கு எப்போதும் ஆதரவு அளிக்கும் என்றார். ஒவ்வொரு இந்தியரின் நலனை தவிர வேறு சிந்தனை இல்லை என்பதையே இது காட்டுகிறது. பிரதமர் மோடி தனது அபாரமான அரசியல் திறனை வெளிப்படுத்தி விட்டார்" என்று பாராட்டியிருந்தார்.

சேகர் ட்வீட்
அந்த வகையில், தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், புலி பதுங்குவது
பாய்வதற்காக #NarendraModi என்று பதிவிட்டுள்ளார்.. இந்த ட்வீட்டுக்குதான் ஏராளமானோர் திரண்டு வந்து கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்...

வேதனை
"ரொம்ப காலத்துக்குப் பதுங்கு குழியிலேயே பதுங்கினால் மூச்சடைத்துச் செத்துப்போகத்தான் வாய்ப்பிருக்கிறது பாவம்.. பத்திரிகையாளர்களைச் சந்தித்தே ஏழு வருடங்களாகிவிட்டது. பதுங்கிப் பதுங்கி என்னத்த சாதித்தீங்க. சீனாக்காரன் நம்ம எல்லையில் வீடுகட்டி கிராமத்தையே உருவாக்கியதுதான் மிச்சம் என்று சிலர் வேதனையுடன் பதிவிட்டு வருகின்றனர்.

கமெண்ட்கள்
ஆனால் சமூக செயற்பாட்டாளர் சுந்தரவள்ளியோ இதை கிண்டலடித்துள்ளார்.. எஸ்ஆர் சேகர் ட்வீட்டுக்கு, "😜😜😜காமெடி பண்ணாம போங்க அண்ணே..." என்று பதிவிட்டுள்ளார்.. சுந்தரவள்ளியின் இந்த கமெண்ட்டுக்கும் ஏராளமானோர் திரண்டு வந்து கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications