’சமூக நீதிக்காக’ உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட தமிழ்நாட்டின் ஆர். மகாதேவன் - என்ன தெரியுமா?
சென்னை: சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் அளித்த பரிந்துரையை ஏற்று சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியான ஆர்.மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட சமூக நீதி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் இடங்கள் காலியாக இருந்தன. இந்த நீதிபதி இடங்களில் ஒன்றுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியும் பொறுப்பு தலைமை நீதிபதியுமான ஆர்.மகாதேவன் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம், மத்திய அரசுக்கு இந்த பரிந்துரையை அளித்திருந்தது.

அப்போதே திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இந்த பரிந்துரையை வரவேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள மூத்த நீதிபதி ஜஸ்டிஸ் ஆர்.மகாதேவன் பெயர், உச்சநீதிமன்றத்தின் ''கொலிஜியம்'' (நீதிபதிகள் நியமனப் பரிந்துரைக் குழு) தற்போது காலியாக உள்ள இரண்டு நீதிபதிகள் இடங்களில் ஒன்றுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது பாராட்டத்தக்க பரிந்துரையாகும். அனுபவம், சட்ட அறிவின் நுண்மான் நுழைபுலம் தமிழ்ப் பண்பாடு, இலக்கியம், சமூகநல உரிமைக் கண்ணோட்டத்தோடு பல தீர்ப்புகளை வழங்கிடத் தயங்காதவர் என்ற பெயர் அவருக்குண்டு. எனவே விரைவில் மத்திய அரசின் சட்டத் துறையின் ஒப்புதல் - நியமனமாக வெளிவரும் என்று எதிர்பார்க்கிறோம்.
உச்சநீதிமன்றத்தின் இந்தப் பரிந்துரையில் ஒரு குறிப்பிடத்தக்க புதிய திருப்பம் என்னவென்றால், முதன்முறையாக - சமூகநீதிக்காகவே இவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர் என்ற காரணமும் -சமூகநீதிப் பார்வைக்கும் மக்களின் கோரிக்கைக்கும் கிடைத்துள்ள வெற்றியின் வெளிச்சமாகும்.
''The Collegium said Justice Mahadevan was ''eminently suitable'' for appointment as a Supreme Court Judge. He belongs to a backward c ommunity from Tamil Nadu, and will bring diversity to the Supreme Court Bench.'' இதுதான் நம் அரசமைப்புச் சட்டம் வற்புறுத்தும் சமூகநீதிக் கோட்பாடு. ஒரு விடியலின் தொடக்கமாகவே நீதிபதிகளின் நியமனம் துலங்குகிறது எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என் கோடீஸ்வர் சிங், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர் மகாதேவன் ஆகிய இருவரையும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று நியமித்துள்ளார்.
அதாவது பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு தரப்பட வேண்டும் என்ற சமூக நீதிக் கண்ணோட்டத்தில் உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் பரிந்துரைத்ததை ஏற்று உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் தமிழ்நாட்டின் ஆர்.மகாதேவன். இதனால் சமூக நீதி ஆதரவாளர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications