தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் கருப்பையா பதவியேற்பு! ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார்!
சென்னை: தமிழக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக தவெகவின் எம்எல்ஏவான சோழவந்தன் கருப்பையா இன்று ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னிலையில் தான் நாளை முதல்வர் விஜய், அமைச்சர்கள் உள்பட சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அனைவரும் எம்எல்ஏவாக பதவியேற்கின்றனர். அதோடு, இவர் தான் விஜய்யின் ஆட்சியையே காப்பாற்ற போகிறார்? என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மை தான். இதுபற்றி இங்கே பார்க்கலாம்.

தமிழகத்தின் புதிய முதல்வராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்றார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் விஜய்க்கு, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
இதையடுத்து தற்காலிக சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டது. முதல்வர் விஜய், தற்காலிக சபாநாயகராக கருப்பையா என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இவர் மதுரை மாவட்டம் தவெக சார்பில் சோழவந்தான் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதையடுத்து ஆளுநர் மாளிகையில் கருப்பையா தற்காலிக சபாநாயகராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழா ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. விழாவில் முதல்வர் விஜய், மூத்த அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் முதலில் வந்தே மாதரம், தேசிய கீதம் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. புதிதாக பதவியேற்ற கருப்பையா நாளை சட்டசபை கூட்டத்தொடரை தொடங்க உள்ளார்.
விஜய் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லை. காங்கிரஸ் உள்பட பிற கட்சிகளின் ஆதரவில் தான் மெஜாரிட்டியை பெற்று முதல்வராகி உள்ளார். இந்நிலையில் தான் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க 3 நாட்களில் நிரூபிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பெரும்பான்மையை நிரூபிக்க சட்டசபையை வழிநடத்த சபாநாயகர் ஒருவர் வேண்டும். இதற்காக தான் கருப்பையா தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் தலைமையில் தான் நாளை விஜய் உள்பட வெற்றி பெற்ற அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் சட்டசபையில் ப எம்எல்ஏவாக பதவியேற்பார்கள்.அதன்பிறகு நாளை மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் மட்டுமே விஜய்யால் முதல்வராக தொடர முடியும். தோல்வியடைந்தால் முதல்வர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.
இதனால் சட்டசபையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு மிகவும் முக்கியமானது. அந்த நம்பிக்கை வாக்கெடுப்பை தலைமையேற்று நடத்த இருக்கிறார் தற்காலிக சபாநாயகர் கருப்பையா. அதோடு நம்பிக்கை வாக்கெடுப்பை குரல் வழி அல்லது கையை உயர்த்துதல் அல்லது பொத்தான் அழுத்துதல் முறையில் எடுப்பதை கருப்பையா தான் முடிவு செய்வார். இதில் குரல் வழி அல்லது கையை உயர்த்துதல் என்றால் தவெக மற்றும் அதன் கூட்டணியில் உள்ள வேட்பாளர்களை தவிர அதிமுக, திமுகவில் உள்ளவர்கள் மாற்றி வாக்களித்தால் தெரிந்துவிடும். அதேவேளையில் பொத்தான் அழுத்தும் முறை என்றால் யாருக்கும் தெரியாது. இதில் கருப்பையா எந்த முறையை தேர்வு செய்ய உள்ளார்? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதோட ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இரண்டுக்கும் ஒரே எண்ணிக்கையில் எம்எல்ஏக்கள் வாக்களித்தால் சபாநாயகர் வாக்கு தான் வெற்றியை நிர்ணயம் செய்யும். அப்போது அவர் விஜய்க்கு ஆதரவாக அவர் வாக்களித்தால் முதல்வர் பதவிக்கு எந்த வித சிக்கலும் வராது. இதனால் தான் விஜய் முதல்வராக தொடர்வது என்பது தற்காலிக சபாநாயகர் கருப்பையாவின் கையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
“நீ நல்லா சாப்பிட்டிருக்க.. நான் சாப்பிடல”.. பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன் -
திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன் போட்டி? அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த க்ரீன் சிக்னல்! -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
விஜய் வெற்றி.. மக்கள் முடிவை தவறுன்னு சொல்ல நீங்க யார்? சிவக்குமார் சொன்னதும் சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில்












Click it and Unblock the Notifications