ஏகப்பட்ட புகார்! தனிப்பட்ட முறையில் செந்தில் பாலாஜியை விசாரிப்பது மிக மிக அவசியம்.. துஷார் மேத்தா
சென்னை: தனிப்பட்ட முறையில் செந்தில் பாலாஜியை விசாரிப்பது மிக மிக அவசியமான ஒன்று என அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான துஷார் மேத்தா தெரிவித்தார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதமானது என அவரது மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையில் செந்தில் பாலாஜியை கைது செய்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இதையடுத்து செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனு மீது ஏற்கெனவே கடந்த மாதம் இறுதியில் இரு முறை விசாரணை நடத்தப்பட்டது. அதில் செந்தில் பாலாஜி தரப்பில் கபில் சிபல் ஆஜராகி வாதம் செய்தார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் முகுல் ரோத்தகி ஆஜராகினார். இந்த நிலையில் இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் இன்றே முடிக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் போபண்ணா, சுந்தரேஷ் ஆகியோர் உத்தரவிட்டனர்.
செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்றைய தினம் அமலாக்கத் துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தை தொடங்கினார். அப்போது அவர் அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும். மருத்துவமனை, நீதிமன்ற காவலில் உள்ளதை விசாரணை காலமாக கருதக் கூடாது.
ஊழல், பொதுமக்கள் பணத்தை கையாடல் செய்தல் உள்ளிட்ட புகார்கள் செந்தில் பாலாஜி மீது உள்ளன. தனிப்பட்ட முறையில் செந்தில் பாலாஜியை விசாரிப்பது மிக மிக அவசியம். வாக்குமூலங்களை பெற முயற்சித்தபோது அவர் எந்த ஒத்துழைப்பையும் தரவில்லை. விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காததால்தான் அவரை கைது செய்தோம்.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான விவகாரத்தில் செந்தில் பாலாஜி ஈடுபட்டிருப்பார் என்பதற்கான வலுவான காரணங்கள் உள்ளன. நீதிமன்றக் காவலில் இருக்கும் போது ஒருவரை ஒப்படைக்க ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்ய முடியாது. பல்வேறு ஊழல் புகார்கள் அவர் மீது உள்ளன. வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்தவிடாமல் அனைத்து வகையிலும் செந்தில் பாலாஜி தடுத்தார். இவ்வாறு துஷார் மேத்தா வாதம் செய்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications