எடப்பாடிக்கு தெரியாமல்.. டெல்லிக்கு போயிட்டாங்க.."க்ளோஸ்".. அதிமுக சீக்ரெட் கசியுதே! அப்போ கட்சி?
சென்னை: பாஜகவிற்கும் அதிமுகவின் மணியான குழுவிற்கும் இடையே இருக்கும் தொடர்ப்பு நெருக்கமானது. நாம் நினைப்பதை விட அவர்கள் மிக நெருக்கமாக இருக்கிறார்கள் என்று மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக மோதல் காரணமாக அவர்கள் கூட்டணி முறிந்துள்ளது. 2024 லோக்சபா, 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி அமைத்து தனியாக போட்டியிடும் என்று என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அதிமுகவின் இந்த நிலைப்பாடு பற்றி மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி: அதில், பாஜகவிற்கும் மணியான குழுவிற்கும் இடையே இருக்கும் தொடர்ப்பு நெருக்கமானது. நாம் நினைப்பதை விட அவர்கள் மிக நெருக்கமாக இருப்பார்கள். அவர்கள் அடிக்கடி டெல்லி செல்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் எடப்பாடிக்கு தெரியாமல் கூட இவர்கள் டெல்லிக்கு சென்று வருகிறது. அதனால் அவர்கள் கண்டிப்பாக பாஜக கூட்டணி வேண்டும் என்று நினைப்பார்கள்.
அவர்களுக்கும் சில பிரச்சனை உள்ளது. பல விஷயங்களில் இருந்து அவர்கள் காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கின்றனர். பாஜக மட்டுமே காக்க முடியும். அதனால் அவர்கள் டெல்லியுடன் நெருக்கமாக உள்ளனர். எடப்பாடி கூட்டணியை உடைத்து கூட உண்மையா என்று தெரியவில்லை. ஏனென்றால் பாஜக இன்னும் கூட்டணியை உடைக்கவில்லை.
என்ன சொன்னார்?: பாஜக இப்போதும் கூட்டணிக்கு கதவை திறந்து வைத்துள்ளது. கூட்டணிக்கான கதவு இப்போதும் திறந்தே உள்ளது. அதனால் அதிமுக - பாஜக கூட்டணி முறிவு உண்மையா என்பது சந்தேகம்தான். அதோடு இல்லாமல் இப்போது கூட்டணி இல்லை. எல்லோரிடமும் போய் சொல்லுங்கள். மக்களிடம் போய் சொல்லுங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறார்.
( உடையும் கொங்கு அதிமுக? "அவருக்கு" பின்னால் திரண்ட எம்எல்ஏக்கள்? எடப்பாடி ஆதரவு இல்லையா? அதிருதே? )
ஆனால் இதெல்லம்க் எந்த அளவிற்கு எடப்பாடிக்கு சாதகமாக இருக்கும். எந்த அளவிற்கு உதவியாக மாறும். மக்கள் அல்லது சிறுபாண்மையினர் அதை எந்த அளவிற்கு நம்புவார்கள் என்று சந்தேகம் உள்ளது. மக்களிடம் சொல்வதை விட பாஜகவை அவர் எதிர்க்கலாம். பாஜகவை கடுமையாக எதிர்க்கலாம். அவர் சொல்லில் காட்டாமல் செயலில் காட்ட வேண்டும். இல்லையென்றால் மக்கள் எப்படி நம்புவார்கள்.
கூட்டணி பிளவு: அவரை மக்கள் எப்படி நம்ப முடியும். மக்கள் அவரை நம்ப வேண்டும் என்றால் உறுதியாக மோடி வேண்டாம் என்று முடிவு எடுக்க வேண்டும். பாஜகவின் 10 வருட ஆட்சியை எதிர்க்க வேண்டும். பாஜகவை கடுமையாக தாக்க வேண்டும். முக்கியமாக மோடியை தாக்கி பேச வேண்டும். ஆனால் அதை எடப்பாடி செய்ய வாய்ப்பே இல்லை. எடப்பாடி அதை செய்வாரா?

அவருக்கு அது ஒரு அக்னி பரீட்சை. அவர் கஷ்டப்பட்டு இப்போதுதான் கட்சியை மீட்டுள்ளார். பல கோர்ட் கேஸ், போராட்டம் எல்லாம் செய்து கட்சியை பிரித்துள்ளார். அப்படி இருக்க இப்போது அவர் நிரூபிக்க வேண்டும். பாஜக இல்லாமல் அவர் தன்னை நிரூபிக்க வேண்டும். அவர் அப்படி நிரூபித்தால் வெற்றிபெற முடியும். இல்லையென்றால் கட்சிக்கு பாதிப்பு வரும்.
அவர் பின்னால் திரண்டு இருப்பவர்கள் எல்லாம் பிரிந்து செல்ல வாய்ப்பு உள்ளது. அது அவருக்கும் தெரியும். அதனால்தான் அவர் பாஜகவை எதிர்க்கவில்லை. தேவைப்பட்டால் பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என்ற முடிவில் இருக்கிறார். அதனால் அவர் இப்போதைக்கு கண்டிப்பாக இறங்கி செயல் வாய்ப்பை இல்லை என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications