உடையும் கொங்கு அதிமுக? "அவருக்கு" பின்னால் திரண்ட எம்எல்ஏக்கள்? எடப்பாடி ஆதரவு இல்லையா? அதிருதே
சென்னை; எடப்பாடி பக்கம் கூட எம்எல்ஏக்கள் இல்லை.. ஆனால் மணியான தலைவர்கள் பின் எம்எல்ஏக்கள் உள்ளனர் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி முறிவால் அதிமுக உள்ளே ஏக்நாத் ஷிண்டே ஒருவர் தோன்ற போகிறார். அதிமுகவை உடைக்க போகிறார். பாஜகவுடன் இணைய போகிறார் என்றெல்லாம் செய்திகள் வர தொடங்கி உள்ளன. இந்த நிலையில்தான் அதிமுகவில் நிலவரம் என்ன என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி; அதில், எடப்பாடி பக்கம் கூட எம்எல்ஏக்கள் இல்லை.. ஆனால் மணியான தலைவர்கள் பின் எம்எல்ஏக்கள் உள்ளனர் என்றுதான் அதிமுகவினர் சொல்கின்றனர். முக்கியமாக கொங்கு மண்டலத்தில் இருக்கும் எம்எல்ஏக்கள் பலர் எடப்பாடி பக்கம் இல்லை.. பலர் மணியான தலைவர்கள் பின் பக்கம்தான் உள்ளனர்.
அந்த தலைவர்கள் எடப்பாடிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். எடப்பாடிக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். எடப்பாடிக்கு கூட்டம் சேர்ப்பது தொடங்கி முடிவுகளை எடுப்பது வரை பல விஷயங்களில் அவர்கள் உறுதுணையாக உள்ளனர். ஆனால் அவர்கள் எப்போதும் இதேபோல் பின்னாடியே இருப்பார்கள் என்று சொல்ல முடியாதே.
( 1 மாசம் ஆக போகுது.. ஸ்டாலின் போட்ட போடு.. கடும் டென்ஷனில் எடப்பாடி.. நடுங்கி போன அதிமுக.. ஏன்?)
அரசியல் முக்கியம்: அரசியலில் எப்போதும் எல்லோரும் பின்னாடியே இருக்க மாட்டார்கள். அவர்கள் முன் பக்கம் வர பார்க்கலாம், எடப்பாடி பின்னால் இருக்கும் நபர்கள் பின்னாடி இருந்து முன்னால் வரலாம். அரசியலில் இதெல்லாம் நடக்கும். அரசியலில் இதெல்லாம் சகஜம். அதனால் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
அதிமுகவில் மணியான கும்பலும் - எடப்பாடியும் பிரிந்தால் அது எடப்பாடிக்கு எதிராக திரும்பும். அதிமுகவிற்கும் எதிராக திரும்பும். கொங்கு மண்டலத்தில் அதிமுக வாக்குகள் உடையும். அரசியல் சூழல் என்றால் அதுதான். அப்படி நடந்தால் அதிமுகவின் வாக்குகள் வெகுவாக பிரியும். இந்த வாக்குகள் எல்லாம் திமுகவிற்கு செல்லும்.
கொங்கு மண்டலம்: அப்படி இருக்க அதிமுக தலைவர்களின் செல்வாக்கு கொங்கு மண்டலத்தில் சரியும். ஏற்கனவே பாஜகவுடன் அதிமுக நெருக்கமாக உள்ளது. கூட்டணி முறிந்தாலும் இன்னமும் நெருக்கமாக உள்ளனர். முக்கியமாக மணியான தலைவர்கள் மீண்டும் பாஜகவுடன் நெருக்கமாக உள்ளனர். அவர்களின் நோக்கம் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும்.
பாஜகவுடன் கூட்டணி தொடர் வேண்டும். தேர்தல் நேரத்தில் இவர்கள் கூட்டணி அமைக்க வேண்டும். இல்லையென்றால் அப்போது நிலைப்பாட்டை நாம் மாற்ற வேண்டும். அப்போது நாம் ஆக்சன் எடுக்க வேண்டும் என்பதே மணியான தலைவர்களின் நோக்கம். தேர்தல் நேரத்தில் அதிமுக - பாஜக கூட்டணியை மீண்டும் உருவாக்குவதே அவர்கள் நோக்கம்.

எடப்பாடி முடிவு: இதற்கு எடப்பாடி எதிர்ப்பு தெரிவித்தால் அப்போது எடப்பாடிக்கு எதிராக கூட இவர்கள் நடவடிக்கை எடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக தேர்தல் நேரத்தில் எடப்பாடி என்ன முடிவு எடுக்கிறார்.. பாஜக உடன் கூட்டணி வைப்பதற்கு தயாராக இருக்கிறாரா என்பதை பொறுத்தே மணியான கும்பலின் மூவ்கள் இருக்கும். அவர்கள் மோடிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
பாஜக - அதிமுக கூட்டணி இருந்தால்தான் நாங்கள் கொங்கில் வெல்ல முடியும். அதனால் கூட்டணி வையுங்கள் என்று மணியான கும்பல் சொல்லும். ஆனால் அதற்கெல்லாம் நேரம் இருக்கிறது. பிப்ரவரி மாதம்தான் இதில் முடிவெல்லாம் எடுப்பார்கள். அதுவரை நேரம் இருக்கிறது.
தேர்தல் நேரத்தில் எடப்பாடி என்ன முடிவு எடுக்கிறார். பாஜக என்ன முடிவு எடுக்கிறது.. கூட்டணியில் என்ன நடக்கிறது. எடப்பாடி - பாஜக மீண்டும் இணைவார்களா என்பதை பொறுத்தே மணியான கும்பலின் நடவடிக்கைகள் இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்!












Click it and Unblock the Notifications