சாமி குத்தம்.. அதான் சுரங்கம் இடிஞ்சிட்டு! தேரை இழுத்து உத்தரகாண்ட் சுரங்கத்திற்கு போன கும்பல்! ஷாக்
சென்னை; உத்தரகாண்டில் உள்ள சுரங்கத்தில் 41 ஊழியர்கள் சிக்கி இருக்கும் நிலையில் அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இங்கே திடீரென சாமியை காவடி போல் எடுத்து வந்து சுரங்கத்திற்குள் போக சிலர் முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி சில்க்கியாரா சுரங்கப் பாதை இடிபாடுகளில் சிக்கி 12 நாட்களாக 41 தொழிலாளர்கள் சிக்கி தவிக்கின்றனர். இங்கே சுரங்கம் அமைக்கும் பணியின் போது சுரங்கம் இடிந்து உள்ளே மூடியதால் அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் கடந்த 12 நாட்களாக சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், பணிகளை முடிக்க இன்னும் குறைந்தது 10 மணிநேரம் ஆகும். மேல் பக்கம் மற்றும் கிடை மட்டமாக இரண்டு துளையிட்டு அது வழியாக ட்யுப் போட்டு.. அதில் இருந்து ஊழியர்களை வெளியே கொண்டு வர முடிவு செய்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளே ஏற்கனவே சுரங்கம் அமைப்பதற்காக போடப்பட்ட இரும்பு வளையங்கள் இடிபாடுகளில் சிக்கி இருப்பதால் அங்கே மீட்பு பணிகளை செய்வது சிரமம் ஆகி உள்ளது. உத்தரகாண்டில் இடிந்து விழுந்த சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள நாற்பத்தொரு தொழிலாளர்கள், சக்கர ஸ்டிரெச்சர்களில் ஒரு பெரிய குழாய் மூலம் ஒவ்வொருவராக வெளியே இழுக்கப்படுவார்கள் என்று தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) இயக்குநர் ஜெனரல் அதுல் கர்வால் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆனால் குழாய்களை உள்ளே அனுப்பும் அளவிற்கு இன்னும் அங்கே துளைகள் போடப்படவில்லை. என்.டி.ஆர்.எஃப் பணியாளர்கள் குழாய் வழியாக உள்ளே நுழைந்து, அவர்கள் தொழிலாளர்களை அடைந்ததும், ஸ்ட்ரெச்சர்களைப் பயன்படுத்தி தொழிலாளர்களை ஒவ்வொருவராக வெளியே அனுப்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தெய்வத்தின் கோபம்: இந்த நிலையில் உத்தரகாண்டில் உள்ள சுரங்கத்தில் 41 ஊழியர்கள் சிக்கி இருக்கும் நிலையில் அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இங்கே திடீரென சாமியை காவடி போல் எடுத்து வந்து சுரங்கத்திற்குள் போக சிலர் முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
41 உயிர்கள் சுரங்கத்திற்குள் சிக்கி உள்ளதற்கு தெய்வத்தின் கோபம் தான் காரணம் என உள்ளூர் மக்கள் சிலர் நம்புகின்றனர். அங்கே இருந்த கோவில் ஒன்றை இடித்துவிட்டு இங்கே சுரங்கம் அமைத்ததாக சிலர் புகார்களை வைக்கின்றனர். இதனால் உள்ளே இருந்து எடுக்கப்பட்ட சாமியின் சிலையை மனதை குளிர்விக்க இன்று அந்த சாமியை காவடி போல் எடுத்து வந்து சுரங்கத்திற்குள் போக முயற்சி செய்தனர்.

இதனால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் உள்ளே போலீசார் விடாமல் அவர்களை தடுத்து நிறுத்தினர். சுரங்கப்பாதைக்கு வெளியே, 41 ஆம்புலன்ஸ்கள், தொழிலாளர்களை சின்னாலிசூரில் உள்ள ஒரு தற்காலிக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தயாராக உள்ளன. தொழிலாளர்கள் மருத்துவமனைக்கு வந்தவுடன் விரிவான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
எங்கே உள்ளது: சார் தாம் திட்டத்தின் ஒரு பகுதியான இந்த சுரங்கப்பாதை, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சில்க்யாரா மற்றும் தண்டல்கான் இடையே உத்தர்காசி மற்றும் யமுனோத்ரியை இணைக்க உள்ள சாலையில் அமைந்துள்ளது. 4.5 கிமீ சுரங்கப்பாதை அமைக்கும் பணி பெரும்பாலும் முடிவடைந்துள்ளது. மீதம் உள்ள பணிகளை செய்யும் போதே சுரங்கம் இடிந்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications