ஜாதியை வைத்து திட்டுகிறார்கள்.. சிலர் என்னை கொல்ல கூட நினைக்கிறார்கள்.. மோடி பரபர பேச்சு
சிலர் என் மீதுள்ள வெறுப்பு காரணமாக என்னை கொல்ல கூட நினைக்கிறார்கள் என்று பிரதமர் மோடி சென்னையில் பேசியுள்ளார்.
சென்னை: சிலர் என் மீதுள்ள வெறுப்பு காரணமாக என்னை கொல்ல கூட நினைக்கிறார்கள் என்று பிரதமர் மோடி சென்னையில் பேசியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற பாஜகவின் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். சென்னையில் வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பிரதமர் மோடிஎதிர்க்கட்சிகள் பற்றி நீண்ட நேரம் பேசினார்கள். சுமார் 30 நிமிடம் அவர் இதுகுறித்து பேசினார்.

எம்ஜிஆர் காங்கிரஸ்
மோடி தனது பேச்சில், எம்ஜிஆர் அரசை காங்கிரஸ்தான் டிஸ்மிஸ் செய்தது. சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்தி காங்கிரஸ் சர்வாதிகாரமாக செயல்பட்டுள்ளது. காங்கிரஸ் திமுக அரசை கூட டிஸ்மிஸ் செய்துள்ளது. ஆனால் இப்போது அவர்களே கூட்டணி வைத்துள்ளனர்.

மோடி வெறுப்பு
மோடி வெறுப்பு அதிகமாகிவிட்டது. மோடியை வசைபாடுவதில் எதிர்க்கட்சிகளுக்கு இடையே போட்டி. என்னை சிலர் திட்டுகிறார்கள். சிலர் என் ஏழ்மையை திட்டுகிறார்கள். சிலர் என் குடும்பத்தை திட்டுகிறார்கள். சிலர் என் பிற்படுத்தப்பட்ட ஜாதியை திட்டுகிறார்கள்.

கொலை
சிலர் என்னை கொல்ல கூட நினைக்கிறார்கள். பரவாயில்லை: நான் மக்களுக்காக வாழ்கிறேன். மக்களுக்காக நான் ரத்தம் சிந்த தயார். மக்களுக்காக நான் எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். மக்களின் நலனே எங்களுக்கு முக்கியம்.

தமிழக நலன்
ஊழலை கலைவதில் தீவிரமாக இருக்கிறோம். தேசிய பாதுகாப்பில் நாம் வலிமையுடன் இருக்கிறோம் . இந்தியாதான் எப்போதும் முதல்: மக்கள்தான் முதல். கடந்த 4 வருடத்தில் நிறைய செய்துள்ளோம். தமிழக நலனுக்கு நிறைய செய்துள்ளோம்.

நாற்பதும் நமதே
பாஜக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். தமிழக மக்களே எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள்.நாளை நமதே : நாற்பதும் நமதே. எல்லோருக்கும் நன்றி, என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications