இப்படி பண்ணலாமா? அண்ணாமலை படத்தோடு ஆடு பலி.. மோடி, அமித்ஷாவிடம் புகாரளித்த நாராயணன் திருப்பதி
சென்னை: கோவை லோக்சபா தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இதனை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தான் நடுரோட்டில் ஆட்டின் கழுத்தில் அண்ணாமலையின் போட்டோவை மாட்டி தலையை வெட்டிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி முதல்வர் ஸ்டாலின், மோடி, அமித்ஷாவை டேக் செய்து புகாரளித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. தமிழ்நாட்டில் இந்த முறை நான்கு முனை போட்டி நிலவியது.

திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிகள் இடையே போட்டி நிலவியது. இதில் 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக, பாஜக கூட்டணிகள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் ஒரு இடத்திலும் கூட வெற்றி பெறவில்லை.
குறிப்பாக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். அந்த தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5 லட்சத்து 68 ஆயிரத்து 200 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 4 லட்சத்து 50 ஆயிரத்து 132 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். இதன்மூலம் அண்ணாமலையை 1 லட்சத்து 18 ஆயிரத்து 68 ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வீழ்த்தி எம்பியாகி உள்ளார்.
இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரன் 3ம் இடம் பிடித்தார். அவர் மொத்தம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 490 ஓட்டுகள் வாங்கினார். இந்நிலையில் தான் கோவையில் அண்ணாமலையின் தோல்வியை திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். தேர்தல் ரிசல்ட் வெளியான நாளில் கோவையில் திமுகவினர் மட்டன் பிரியாணி வழங்கினர். அண்ணாமலை தனது பேட்டிகளில் விவசாய குடும்பத்தில் இருந்து வந்ததாகவும், ஆடு வளர்ப்பதாகவும் அடிக்கடி கூறுவார். இதனால் அண்ணாமலையை திமுகவினர் ஆடு என வலைதளங்களில் விமர்சனம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்நிலையில் தான் அண்ணாமலையின் தோல்வியை மட்டன் பிரியாணி வழங்கி திமுகவினர் கொண்டாடினர்.
இத்தகைய சூழலில் தான் தற்போது இணையதளங்களில் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி வேகமாக பரவி வருகிறது. அதாவது அண்ணாமலையின் தோல்வியை கொண்டாடும் வகையில் அவரது போட்டோவுடன் நடுரோட்டில் ஆடு வெட்டப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ஆட்டின் கழுத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் போட்டோ நூலில் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளது. அதனை ஒருவர் அரிவாள் கொண்டு வெட்டுகிறார். தலை வேறு உடல் வேறு என ஆடு 2 துண்டாக ரத்தம் ரோட்டில் பாய்கிறது.
இதையடுத்து அங்கிருந்த சிறுவர்கள், பலியாடு அண்ணாமலை என்று கோஷமிடுகின்றனர். இந்த வீடியோ தான் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இருப்பினும் இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது, எப்போது எடுக்கப்பட்டது, அண்ணாமலையின் போட்டோவுடன் ஆடு பலியிட்டது யார் என்பது தெரியவில்லை. ஆனால் ஆடு பலி கொடுக்கும் ரோட்டோரம் திமுகவின் கொடி பறக்கிறது. இதனால் திமுகவினர் தான் இந்த செயலை செய்திருக்கலாம் என பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.அதோடு இந்த கொடூர நிகழ்வை அரங்கேற்றிய நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் பற்றி பாஜகவின் மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதோடு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் என்று அவர் முதல்வர் ஸ்டாலின், தமிழக போலீஸ், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மேலும் அதில் ‛‛அண்ணாமலையின் தோல்வியை கொண்டாடும் வகையில் அவரது போட்டோவை ஆட்டின் கழுத்தில் மாட்டி நடுரோட்டில் பலி கொடுக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் பாஜக வளர்வதை கண்டு பிற கட்சிகள் பயப்படுவதை காட்டுகிறது. அதோடு இதுபோன்ற கீழ்த்தரமான அரசியல் செய்வதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும்.
ஓட்டு எண்ணிக்கை நாளில் திமுக அமைச்சர் டிஆர்பி ராஜா ஆட்டுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தது மற்றும் மட்டன் பிரியாணி விநியோகம் செய்தது. இதுபோன்ற தரம் தாழ்ந்த அரசியலை திமுக கைவிட வேண்டும். அதோடு இந்த வீடியோவில் சிறுவர்கள் அண்ணாமலைக்கு எதிராக கோஷமிடுகின்றனர். சிறுவர்கள் இடையே வெறுப்பு மற்றும் கோபத்தை திணிப்பது என்பது கடும் கண்டனத்துக்கு உரியது. அதோடு இது எதிர்க்கட்சிகளின் முட்டாள்தனமாக அரசியலாகும். இந்த வீடியோ பற்றி விசாரித்து குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறோம்'' என தெரிவித்துள்ளார். அதோடு இந்த எக்ஸ் பதிவில் அவர் முதல்வர் ஸ்டாலின், தமிழக போலீசார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி உள்ளிட்டவர்களை அவர் டேக் செய்துள்ளார்.
இதற்கிடையே தான் என்னதான் அரசியலில் போட்டியிருந்தாலும் நடுரோட்டில் இப்படி எதிர்க்கட்சியை சேர்ந்த பிரமுகரின் போட்டோவை மாட்டி நடுரோட்டில் பலியிடுவது என்பது அநாகரீகம். இது வெறுப்புணர்வை தான் அதிகமாக தூண்டும். இதனால் இதுபோன்ற செயல்களை எந்த கட்சியும் முன்னெடுக்க கூடாது. மீறினால் அத்தகைய செயலில் ஈடுபடும் கட்சியினருக்கு தான் மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படும் என பொதுவானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
தமிழகத்தில் யார் சிறந்த அமைச்சர்கள்? வானதி சீனிவாசன் சொன்ன அந்த இருவர்! பாஜகவை கிண்டல் செய்தாங்களே! -
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா!












Click it and Unblock the Notifications