“நாங்க அதிமுகதான்; ஆனா ஸ்டாலின்தான் உதவினார்” - கலங்கடிக்கும் ஏழை மக்களின் கண்ணீர் கதைகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆதரவற்றவர்களை அரவணைப்பதற்காகத்தான் அரசாங்கம் உள்ளது. எல்லா வழிகளும் அடைக்கப்பட்ட பிறகு ஆதரவற்ற ஒரு நபருக்குக் கடைசிப் புகலிடம் அரசுதான். அப்படி அரசு அரவணைக்காவிட்டால் பரிதவிக்கும் மக்கள் உடைந்துபோவது உறுதி.

இதை உணர்ந்ததால்தான், தன்னிடம் மனு கொடுக்க வருபவர்களுக்கு உரிய உதவி உடனடியாகப் போய்ச் சேர வேண்டும் என்று உத்தரவிட்டார் முதல்வர் ஸ்டாலின். மேடைகள் தோறும் அவர், 'மக்கள் தரும் மனுக்கள் வெறும் காகிதம் அல்ல; அதில் அவர்களின் வாழ்க்கை அடங்கி உள்ளது" என அடிக்கடி சுட்டிக்காட்டிப் பேசிவருகிறார்.

 மனுக்கள் மீது அதிரடி நடவடிக்கை:

மனுக்கள் மீது அதிரடி நடவடிக்கை:

அப்படி தனக்கு வந்த மனுக்களைப் பரிசீலித்து பலரது கண்ணீரைத் துடைத்துள்ளார் ஸ்டாலின். அப்படி உருக்கமான கதைகளைத்தான் நீங்கள் படிக்கப் போகிறீர்கள். இதைப் படிக்கும்போது சிலருக்கு ஆச்சரியம் வராது இருக்கலாம்.

அடிமனதிலிருந்து நீங்கள் அதை உணரவேண்டும் என்றால், முதலில் இந்த மக்களின் வலி புரியவேண்டும். அவர்களின் பின்புலம் புரிய வேண்டும். வதங்கிப் போய் கிடக்கும் செடிக்கு ஒரு சொட்டு நீர் கிடைத்தால் உயிர்பெற்றுவிடும். அப்படியான உயிர்த் தண்ணீர் தரும் காரியம்தான் அரசின் இந்த உதவி.

அப்படி அரசிடம் உதவிக்கேட்டு நிற்கும் ஆதரவற்ற ஜீவன்தான் சித்ரா. கணவரை இழந்த இவரை அவரது பிள்ளைகள்கூட கவனிக்கவில்லை. ஏனெனில் அம்மாவின் துயரத்தைத் தூக்கிச் சுமக்கும் அளவுக்கு அந்தப் பிள்ளைகளுக்குப் பொருளாதார வலு இல்லை. வறுமையை எப்படி இன்னொரு வறுமையால் போக்க முடியும்?

ஆகவே தனது அரசு உதவினால் மேற்கொண்டு வாழ்க்கையைக் கொண்டுபோய் விடலாம் என நம்பி முதல்வர் ஸ்டாலினுக்கு மனு போட்டுள்ளார் சித்ரா. அவரது மனக்குறைக்கு உடனடியாக மருந்துபோட்டுள்ளார் ஸ்டாலின்.


சித்ராவுக்குப் பவானி, மஞ்சு, லாவண்யா என மூன்று பெண் பிள்ளைகள். இவருக்கு 16 வயதில் திருமணமானது. சில ஆண்டுகள் முன்புதான் கணவரை இழந்துள்ளார் சித்ரா.

 கண்டுகொள்ளாத அதிமுக ஆட்சி:

கண்டுகொள்ளாத அதிமுக ஆட்சி:

ஆகவே கைம்பெண் உதவித் தொகைக் கேட்டு, கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அரசு அலுவலக கதவைத் தட்டியுள்ளார். கணவரை இழந்த கைம்பெண்களுக்குப் போய்ச் சேரவேண்டிய உதவித்தொகை கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சரியாக வழங்கப்படவில்லை என்பது அவருக்குத் தெரியவந்துள்ளது. மேற்கொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் தத்தளித்துள்ளார் சித்ரா.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் உடனடியாக இந்தத்துறை தூசி தட்டப்பட்டு பயனாளிகள் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு பறந்தது. அதை அறிந்து முதல்வர் ஸ்டாலினுக்கு மனு எழுதிப் போட்டு, உதவிக் கோரியுள்ளார். அதன் பின் என்ன நடந்தது? அவரே சொல்கிறார், படியுங்கள்.

"கல்யாணம் ஆன காலத்திலிருந்து நான் எந்த வேலைக்கும் போனதில்லை. எனக்கு வேலை செய்து பழக்கமும் இல்லை. நான் படிக்கவும் இல்லை. திடீரென்று வீட்டுக்காரர் இறந்ததால் நிலைகுலைந்து போனேன்.

என் பிள்ளைகளிடமும் போய் என்னால் உதவிக் கேட்கமுடியவில்லை. அவர்களுக்கு ஒரு தந்தையாக என் கணவர் எதையும் செய்தது இல்லை. அவர்களே தங்களது வாழ்க்கைத்துணையை அமைத்துக் கொண்டுவிட்டார்கள். ஏதோ என் மகள்களின் வாழ்க்கை போகிறது. அவர்களால் எனக்கு உதவி செய்ய முடியாது.

என் மாமனார் இறந்ததால், அவரதுரோடு போடும் வேலை என் கணவருக்குக் கிடைத்தது. 15 வருஷமாக அந்த வேலையைத்தான் என் கணவர் செய்துவந்தார். அவர் சம்பாதித்து எங்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை. இறப்பதற்கு சில மாதங்கள் முன்னதாக தான் அவர் வீட்டுக்கே வந்தார்.

 4 மாதங்களாகக் கிடைக்கும் உதவித் தொகை:

4 மாதங்களாகக் கிடைக்கும் உதவித் தொகை:

அதுவரை ஜாலியாக அவர் வாழ்ந்துவந்தார். ஆகவேதான் ஸ்டாலின் அய்யாவிடம் விதவை உதவித்தொகை கேட்டு மனு போட்டேன். உடனடியாக நடவடிக்கை எடுத்து எனக்கு உதவினார். இப்போது 3 மாதங்களாக விதவை உதவித்தொகையை வைத்துத்தான் வாழ்ந்து வருகிறேன்" என்கிறார் சித்ரா.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், தனது கணவர் அதிமுகவில்தான் இருந்தார் என்றும் ஆனாலும் எவ்வளவோ முறை உதவிக்கேட்டுச் சென்றும் அந்தக் கட்சிக்காரர்கள் உதவி செய்யவே இல்லை என்றும் சொல்கிறார். மாற்றுக் கட்சி குடும்பமாக இருந்தும் எங்களுக்கு ஸ்டாலின்தான் உதவி செய்திருக்கிறார். அவர்க்கு நான் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்று கண்கலங்குகிறார் இந்தச் சித்ரா.

இந்தப் பெண்மணியைப் போலவே இந்த ஆட்சியில் முதியோர் உதவித் தொகையைப் பெற்றதால், புதிய உயிர்பெற்றுள்ளார் பெரம்பூரைச் சேர்ந்த 67 வயது முதியவர் தனசேகர். இவர் அவரது கதையைச் சொல்கிறார் படியுங்கள்.

"அயனாவரத்தின் திமுக இளைஞரணியில் இருக்கும் ஒருவர்தான், 'நீ உதவித்தொகை கேட்டு எழுதிப் போட்டால் பணம் கிடைக்கும்' என்று முதன்முதலாக ஆலோசனை சொன்னார். அவர் பெயர் எனக்கு உடனே ஞாபகத்திற்கு வரவில்லை. அவர்தான் விண்ணப்பம் வாங்கிக் கொண்டுவந்து, அவரே எழுதியும் கொடுத்தார். அவர் எழுதிக் கொடுத்த ஒரே வாரத்திற்குள் எனக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை கிடைத்துவிட்டது.


இப்போது 4 மாதங்களாக உதவித் தொகையைப் பெற்று வருகிறேன்" என்கிறார்

தனசேகர் உடல்நிலை முடியாமல் இருந்து வருகிறார். அவரால் இயல்பாக நடக்க முடியாது. ஒரு கால் முழுமையாகச் செயல்படாது. அதேபோல் ஒரு கையும் சரியாக இயங்காது. இவருக்கு கை கால் விழுந்துவிட்டது.

அதனால், அவர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குப் போய் சிகிச்சை பெற்றுவருகிறார். மாதம் ஒருமுறை பெரம்பூரிலிருந்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குச் செல்லவேண்டும். அதற்கு ஆட்டோவில்தான் செல்வார். வறுமை வாட்டியதால் முன்பு எல்லாம் சரியாக மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் இருந்துள்ளது. ஆட்டோவுக்குகூட பணம் இல்லாத அளவுக்கு வறுமை இவரை வாட்டி வந்துள்ளது.

 திமுக ஆட்சியில்தான் எல்லாம் கிடைத்தது:

திமுக ஆட்சியில்தான் எல்லாம் கிடைத்தது:

ஆனால் இப்போது அரசு அளிக்கும் மாதம் 1000 ரூபாய் உதவித்தொகையைக் கொண்டு, யாரையும் எதிர்பாராமல் சிகிச்சைக்குச் செல்ல முடிகிறது. இவரது மருத்துவச் செலவுக்கே மாதம் 600 ரூபாய் செலவாகிறது. மீதம் உள்ள 400 ரூபாயைக் கொண்டே வீட்டு வாடகை தந்து வருகிறேன் என்கிறார் இந்த முதியவர்.

சுருக்கமாகச் சொன்னால், "படுத்தப்படுக்கையாக ஆன பிறகு வீட்டுக்குச் சுமையாகி விட்டேன். என் மனைவியை நான் காதலித்து கல்யாணம் செய்து கொண்டேன். நான் படுத்தப்படுக்கையாக ஆன பிறகு அவர் துடித்துப் போய்விட்டார்.

எனக்காக வீட்டு வேலைக்குப் போக ஆரம்பித்தார். அவருக்கும் வயதாகிவிட்டது. அவராலும் வேலை செய்ய முடியவில்லை. அந்த லவ் பாசத்தால்தான் இதுவரை என்னைக் காப்பாற்றி வருகிறார்.இந்த ஆயிரம் ரூபாய் கிடைத்த பிறகுதான் நான் மனிதனாக மறுபடியும் வாழ ஆரம்பித்திருக்கிறேன்" என்கிறார்.

"இந்த திமுக ஆட்சியில்தான் நான் பல நன்மைகளைப் பெற்றிருக்கிறேன். டிவி வாங்கி இருக்கிறேன். கிரைண்டர் வாங்கி இருக்கிறேன். மிக்சி வாங்கி இருக்கிறேன். ஃபேன் வாங்கி இருக்கிறேன்.

இப்போது எனக்கு கை, கால் விழுந்த பிறகு மாதம் ஆயிரம் ரூபாயையும் திமுக ஆட்சியில்தான் வாங்கி இருக்கிறேன். படுத்தப்படுக்கையாகக் கிடந்த என்னை இந்த ஆட்சிதான், நல்ல மருத்துவம் பார்த்து எழுந்து நடக்க வைத்திருக்கிறது. இந்த ஆட்சியால்தான் உயிர் பிழைத்தேன். இந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மோடி நன்றி" என்கிறார் உணர்ச்சிகரமாக.

பலருக்கும் இன்று ஆயிரம் ரூபாய் என்பது ஒரு நாள் செலவு. ஆனால் இவரைப் போன்றவர்களுக்கு அது ஒரு மாத செலவு. அந்த வலி அறிந்தவர்களுக்கு அரசு தரும் இந்த உதவித்தொகையின் அருமை புரியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+