“அம்பயரே ஹிட் விக்கெட்டில் அவுட்”.. அமைச்சர்கள் சொத்துக்குவிப்பு வழக்கில் சரமாரியாக விளாசிய நீதிபதி!
சென்னை: ஆட்சி மாறியதும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அப்படியே யூ டர்ன் போட்டுள்ளனர். எல்லோரும் ஒரே டீமாக மாறியதால் அம்பயர் ஆன நீதிமன்றம், 'ஹிட் விக்கெட்டில் அவுட்' ஆகியுள்ளது என அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் ஐகோர்ட் நீதிபதி கடுமையாகச் சாடியுள்ளார்.
2 அமைச்சர்கள் சொத்துக்குவிப்பு வழக்கு: தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.40 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரது மனைவி மணிமேகலை மீதும் கடந்த 2012-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது ரூ.44.56 லட்சம் அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவருடைய மனைவி ஆதிலட்சுமி, நண்பர் கே.எஸ்.பி.சண்முகமூர்த்தி உள்ளிட்டோர் மீதும் லஞ்ச ஒழி்ப்பு போலீசார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த 2 வழக்குகளின் விசாரணையும் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்குகளில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரி, ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நிலுவையில் இருக்கும்போதே, இந்த வழக்குகளை மேற்கொண்டு விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் மனு தாக்கல் செய்து, அனுமதி கிடைத்ததும், விசாரணை நடத்தி குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி வழக்கை முடித்து வைக்கக்கோரி அறிக்கை தாக்கல் செய்தனர். அதன்படி அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் சொத்துகுவிப்பு வழக்குகளில் இருந்து விடுவித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.
மீண்டும் கையில் எடுத்த ஐகோர்ட்: இதற்கிடையே வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இருந்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை விடுவித்த உத்தரவை சீராய்வு செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அதேபோன்று 2 திமுக அமைச்சர்கள் சொத்துக் குவிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுக்க தானாக முன்வந்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, "இந்த வழக்குகளில் போலீசாரின் விளக்கங்களை கேட்காமல் உத்தரவு பிறப்பித்தால், அது அவர்களை களங்கப்படுத்திவிடும். இதுபோல தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுப்பது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி விடக்கூடாது" என்று வாதத்தை முன்வைத்தார்.
அதற்கு பதில் அளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "தற்போது இந்த வழக்குகளில் இறுதி தீர்ப்பு அளிக்கவில்லை. இந்த வழக்குகளில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரி அமைச்சர்கள் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவுக்கு 2021ஆம் ஆண்டு ஏப்ரல் வரை போலீசார் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், அப்படியே 'யூ-டர்ன்' போட்டு வழக்கின் திசையை மாற்றிவிட்டுள்ளனர்.
ஹிட் விக்கெட்: 2021ஆம் ஆண்டில் ஆட்சி மாறியதும், ஆட்டத்தில் உள்ள அனைத்து வீரர்களும் திடீரென்று ஒரே அணியைச் சேர்ந்தவர்கள் ஆகிவிட்டதால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளது மிகவும் வெளிப்படையானது. இதை உணர்ந்த அம்பயர், அதாவது சிறப்பு நீதிமன்றம், ஹிட் விக்கெட்டில் அவுட் ஆவதே புத்திசாலித்தனமான வழி என்று முடிவு செய்ததாகத் தெரிகிறது.
ஏற்கனவே விசாரித்த வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்த அனுமதி கோரிய லஞ்ச ஒழிப்புத்துறையினர், கூடுதல் விசாரணையில் சேகரிக்கப்படும் ஆதாரங்களின் அடிப்படையில், கூடுதல் குற்றப்பத்திரிகைதான் தாக்கல் செய்ய முடியும். ஆனால், இந்த வழக்குகளில் ஆதாரங்கள் இல்லை என்று கூறி, வழக்குகளை முடித்து வைக்க போலீசார் பரிந்துரைத்துள்ளது வினோதமாக உள்ளது. இதை ஏற்று அனைவரையும் விடுவித்து இருக்கும் கீழ் கோர்ட்டின் அணுகுமுறையும் சட்டவிரோதமானது.

இந்த வழக்குகளின் ஆவணங்களை ஆராய்ந்தபோது ஏதோ ஒன்று ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு கோர்ட்டில் நடந்து இருப்பதை நிதர்சனமாக உணர முடிகிறது. இந்த வழக்குகளில் தவறான நடைமுறையை கீழமை நீதிமன்றம் பின்பற்றியுள்ளது. 2 அமைச்சர்களுக்கு எதிரான இந்த விடுவிப்பு உத்தரவுகள் ஒரே மாதிரியாக காப்பியடித்தது போல உள்ளன. அதில் பெயர்களும், தேதிகளும் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.
பிளே கிரவுண்ட் ஆகிவிடும்: இது இந்த ஐகோர்ட்டின் மனசாட்சியை உலுக்கும் விதமாக உள்ளது. இதனால், நான் 3 நாட்கள் தூங்கவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் இந்த உயர் நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது. நீதிமன்றம் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கோ அல்லது அரசுக்கோ உரித்தானது அல்ல. மாறாக நாட்டில் வாழும் குப்பனுக்கும், சுப்பனுக்கும் உரித்தானது.
யார் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தாலும், வழக்குகளை நீர்த்துப்போகச் செய்துவிடுகின்றனர். தவிர, இதுபோன்ற அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில், சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளன. இந்தப் போக்கு தடுக்கப்படாமல் போனால், எம்.பி./எம்.எல்.ஏ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்கள், குற்றவியல் நீதி அமைப்பைத் தடம் புரளச் செய்யும் விளையாட்டு மைதானமாக மாறும்." என கடுமையாக குறிப்பிட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள இரு வழக்குகளுக்கு, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமசந்திரன், லஞ்ச ஒழிப்பு சூப்பிரண்டு உள்ளிட்டோர் பதில் அளிக்க வேண்டும். என நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 20ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
-
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications