நல்லா பேசிக்கிட்டு இருந்தார்.. இரவில் நடந்தது என்ன? டெல்லி கணேஷ் மகன் மகா வெளியிட்ட தகவல்
சென்னை: நடிகர் டெல்லி கணேஷின் மரணம் தொடர்பாக அவரின் மகன் மகா டெல்லி கணேஷ் பேட்டி அளித்துள்ளார்.
டெல்லி கணேஷ் மகன் மகா அளித்த பேட்டியில்,. அப்பாவிற்கு 80 வயதாகிவிட்டது. நாங்கள் சமீபத்தில்தான் அவருக்கு 80வது திருமணம் கூட செய்து இருந்தோம். அவர் நன்றாகவே இருந்தார். ஆனால் கொஞ்சம் வயோதிகம் காரணம் அவர் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வந்தார் . சிகிச்சை கொடுத்து வந்தோம்.

எங்களிடம் நன்றாக பேசிக்கொண்டு இருந்தார். நேற்று சிரித்தபடி பேசிக்கொண்டு இருந்தார். அவர் சிரித்தபடி இருந்த பின் இரவு ஓய்வு எடுக்க சென்றார். 11 மணிக்கு அவர் உறங்கும் முன் மாத்திரை கொடுப்பது வழக்கம். அப்படித்தான் மாத்திரை கொடுக்க சென்றேன். ஆனால் அவர் எழுந்திருக்கவில்லை.
சோதனை செய்ததில் அவரின் உயிர் பிரிந்திருந்தது . அவருக்கு நாளை காலை 10 மணிக்கு இறுதிச்சடங்கு செய்யப்படும். வரிசையாக பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உறவினர்கள் பலர் வர வேண்டும் என்பதால் நாளை இறுதிச்சடங்கு நடக்கும்., என்று கூறியுள்ளார்.
மரணம்: பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் (80) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். சென்னை ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவரின் மரணம் நிகழ்ந்தது எப்படி என்பது தொடர்பான விபரங்கள் வெளியாகி உள்ளன.
வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் டெல்லிகணேஷ்(80) காலமானார். நாயகன், அபூர்வ சகோதரர்கள், சங்கமம், அவ்வை சண்முகி, இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்தவர்.
கடந்த 3 நாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லை. உடல்நிலை காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இப்படிப்பட்ட நிலையில் 3 நாட்களுக்கு முன் அவரின் உடல்நிலை மோசமானது.
உடல்நிலை பாதிக்கப்பட்டு அவர் படுத்தப்படுக்கையானார். இப்படிப்பட்ட நிலையில் நேற்று இரவு உறங்க சென்றவர் பெரிதாக நகராமல் ஒரே பக்கமாக படுத்திருந்ததாக கூறப்படுகிறது. 9 மணிக்கு உறங்க சென்றவரை சோதித்ததில் 11.30 மணிக்கு அவர் மரணம் அடைந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் வயோதிகம் காரணமாக சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். நீண்ட நாட்களாக வயோதிகம் காரணமாக அவரின் உடலில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாகவே அவர் மரணம் அடைந்தார். மற்றபடி அவரின் மரணத்திற்கு வேறு முக்கியமான நோய் காரணங்கள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. அவரின் மறைவிற்கு தமிழ்நாடு முழுக்க பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களுக்கு முன்பு, அவர் டெல்லியை தளமாகக் கொண்ட நாடகக் குழுவான தட்சிண பாரத நாடக சபாவில் உறுப்பினராக இருந்தார். கணேஷ் இந்திய விமானப்படையில் 1964 முதல் 1974 வரை பணியாற்றினார், அதற்கு பின் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று அந்த பணியில் இருந்து விலகினார். இவருக்கு டெல்லி கணேஷ் என்ற மேடைப் பெயர் கே.பாலசந்தரால் வழங்கப்பட்டது.
பட்டின பிரவேசம் (1976) திரைப்படத்தில் கே.பாலசந்தரால் தமிழ்த் திரைப்படத் துறைக்கு அறிமுகமானார். 1981ல் எங்கம்மா மகாராணி படத்தில் ஹீரோவாக நடித்தவர் கணேஷ். பெரும்பாலும் துணை நடிகராக அல்லது நகைச்சுவை நடிகராக நடித்தார். ஏன் நிறைய குறும்படங்களில் கூட நடித்துள்ளார். அதே சமயம் அவர் அபூர்வ சகோதரர்கள் (1989) போன்ற படங்களில் வில்லன் வேடங்களிலும் நடித்துள்ளார். இது போன்ற வேடங்கள் பெரிய அளவில் கவனிக்கப்பட்டன.
பாசி (1979) திரைப்படத்தில் நடித்ததற்காக தமிழ்நாடு மாநில திரைப்பட விருதின் சிறப்புப் பரிசைப் பெற்றார். அன்றைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா வழங்கிய கலைமாமணி (1994) போன்ற பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றார். சிந்து பைரவி (1985), நாயகன் (1987), மைக்கேல் மதன காம ராஜன் (1990), ஆஹா..! (1997) மற்றும் தெனாலி (2000) ஆகிய படங்களில் இவரின் நடிப்பு கவனிக்கப்பட்டது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications