ராஜீவ் கொலை வழக்கு: தூக்கு தண்டனையை நிறுத்த கோரி சோனியா கடிதம்.. வாயில் துணி கட்டுவோருக்கு தெரியுமா?
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனையை நிறுத்த கோரி 1999-ம் ஆண்டு இப்போதைய காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அன்றைய ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனுக்கு கடிதம் அனுப்பி இருந்தார். இந்த கடிதம் இப்போது வாயில் துணி கட்டி பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக போராடும் காங்கிரசாருக்கு தெரியுமா? என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நேரடியாக தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்பட்ட 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்துக்கு ஏதோ ஒரு வகையில் தொடர்பு கொண்டவர்கள் என பலரும் கைது செய்யப்பட்டனர். இப்படி கைது செய்யபட்டவர்களில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் அடங்குவர். இப்போது பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது. அதுவும் 31 ஆண்டுகால சிறை தண்டனைக்குப் பின்னரே பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பேரறிவாளன் விடுதலையை ஒட்டுமொத்த தமிழகமும் உணர்வுப்பூர்வமாக கொண்டாடி வருகிறது. ஆனால் தமிழகத்தில் பாஜக, காங்கிரஸ் இரண்டு தேசிய கட்சிகளும் இந்த விவகாரத்தில் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளன. இதில் காங்கிரஸ் ஒருபடி மேலே போய், பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக வாயில் துணி கட்டும் போராட்டத்தை இன்று நடத்தியது. காங்கிரஸ் கட்சியின் இந்த போராட்டம் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே 1999-ம் ஆண்டும் 2021-ம் ஆண்டு ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை மன்னிப்பாக சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் கூறிய கருத்துகள் இப்போது தமிழக காங்கிரஸ் கட்சியினருக்கு பதிலடியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1999-ம் ஆண்டு பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினிக்கு தூக்கு தண்டனை உறுதியானது. அப்போது ஜனாதிபதியாக இருந்த கே.ஆர்.நாராயணனுக்கு சோனியா காந்தி கடிதம் ஒன்றை அனுப்பினார்.
அக்கடிதத்தில், எனக்கோ என் மகனுக்கோ என் மகளுக்கோ கொலையாளிகள் 4 பேரையும் தூக்கில் போடுவதில் விருப்பம் இல்லை. கொலையாளிகள் தங்களுக்கு கருணை மனு அனுப்பும் போது அவர்களை மன்னித்து தூக்கு தண்டனையை நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் என சோனியா காந்தி குறிப்பிட்டிருக்கிறார். மேலும் நளினிக்கு கருணை காட்ட வேண்டும் என்றும் சோனியா வலியுறுத்தி இருக்கிறார். இந்த கடிதம் இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications