ஐயோ.. அம்மா.. சூது கவ்வும் பட பாணியில்.. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் ட்விஸ்ட்.. கதறிய ஹரிஹரன்
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள ஹரிஹரன் நேற்று நீதிபதிகளிடம் கெஞ்சிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஹரிஹரன் என்பவர் உட்பட மேலும் 5 பேரைப் பிடித்து போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பேரூராட்சியின் அதிமுக கவுன்சிலராக உள்ளார் ஹரிதரன். இவரிடமிருந்து 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அருள் மற்றும் ஹரிஹரனின் நெருங்கிய நண்பர் ஹரிதரன் என போலீஸ் தகவல் வெளியிட்டு உள்ளனர் .
இன்னொரு பக்கம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையிடம் விடிய விடிய விசாரணை நடந்தது. தற்போது விசாரணை முடிந்து அவர் சிறையில் நடைக்கப்பட்டு உள்ளார். புழல், அரக்கோணம், திருநின்றவூர் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூரில் பொன்னை பாலு உள்ளிட்டோருடன் அஞ்சலை சதி ஆலோசனை செய்துள்ளார்.
விறுவிறு விசாரணை: பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், தேடப்பட்டு வந்த பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை 2 நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.
கொலையாளிகளுக்கு அஞ்சலை பணம் கொடுத்தது தெரிய வந்துள்ளதால் அவரது 2 வங்கிக் கணக்கு விவரங்களை போலீசார் திரட்டி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங்கை கொன்றுவிட்டால் வடசென்னையில் ஆதிக்கம் செலுத்தலாம் என பொன்னை பாலுவை அஞ்சலை மூளைச் சலவை செய்ததாகவும் தகவல்.
ஆம்ஸ்ட்ராங்கை கொல்வது தொடர்பாக பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை 4 இடங்களில் சதி ஆலோசனை கூட்டங்கள் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அஞ்சலை புழல் சிறையிலும், ஹரிதரன் பூந்தமல்லி சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர்.
என்கவுண்டர்: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் கடந்த 5ஆம் தேதி, கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து இந்த கொலை வழக்கில், பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், அருள் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் திருவேங்கடம் நேற்று என்கவுண்டர் செய்யப்பட்டார்.
போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முயன்ற போது திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை தனது வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக திருவேங்கடம் கூறியதன் பேரில் அவரை அங்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது போலீசாரை தாக்கிவிட்டு செல்ல முயன்ற போது அவர் என்கவுண்டர் செய்யப்பட்டார்.
கெஞ்சிய ஹரிஹரன் : பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள ஹரிஹரன் நேற்று நீதிபதிகளிடம் கெஞ்சிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நீதிமதி மன்றத்தில் அவர் ஆஜர் செய்யப்பட்டு அதன்பின் போலீஸ் கஸ்டடிக்கு கொண்டு செல்லப்படும் போது.. நீதிபதிகளிடம் கோர்டில் ஹரிஹரன் அய்யா போலீஸ் கஸ்டடிக்கு மட்டும் அனுப்பாதீங்க.. ஐயோ.. அம்மா.. அவங்க என்னை கொன்றுவிடுவார்கள்.,. என்னை என்கவுண்டர் செய்து விடுவார்கள்.. என்று நீதிபதிகளிடம் கண்ணீர்விட்டார் ஹரிஹரன்.
சூது கவ்வும் படத்தில் இதேபோல் என்கவுண்டர் செய்யப்படுவோம் என்ற அச்சத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் விஜய் சேதுபதி பேசுவார். அதேபோல்தான் ஹரிஹரனும் நான் தப்பி ஓட மாட்டேன்.. ஆனால் இவர்கள் என்னை என்கவுண்டர் செய்து விடுவார்கள்.. என்று நீதிபதிகளிடம் கண்ணீர்விட்டார் ஹரிஹரன்.












Click it and Unblock the Notifications