ஒரே செயலியில் டிக்கெட் புக்கிங் + பஸ் டிராக்கிங்.. சென்னை மாநகர பஸ்சில் வருது செம வசதி
சென்னை: சென்னை மாநகர பேருந்துகளில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு விரைவில் டிக்கெட் புக்கிங் மற்றும் பஸ் டிராக்கிங் என இரண்டும் ஒரே செயலியில் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தற்போது பயன்பாட்டில் இருக்கும் சென்னை பஸ் செயலியில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பயணிகள் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்துகளில் ஒன்றாக மாநகர பேருந்துகள்தான் உள்ளன. சென்னையை பொருத்தவரை புறநகர் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்களில் ஓடினாலும் அனைத்து இடங்களுக்கும் இந்த வசதி இல்லை. எனவே நகரின் அனைத்து பகுதிகளுக்கும் செல்லக்கூடிய மாநகர பேருந்துகள்தான் பயணிகளின் போக்குவரத்து தேவையை பெரிதும் தீர்த்து வைக்கின்றன.

மாநகர பேருந்து: சென்னையை பொறுத்தவரை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் தினமும் பல லட்சகக்ணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். சென்னையில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதிய தாழ்தள பேருந்துகள் தற்போது பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல் மெட்ரோ, புறநகர் ரயில் மற்றும் மாநகர பேருந்துகளில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் வகையில் சென்னைக்கான ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டத்தை வகுப்பது தொடர்பான நடவடிக்கைகளை சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம் (கும்டா) மேற்கொண்டு வருகிறது.
பயணிகள் கோரிக்கை: சென்னை மாநகர பேருந்துகள் எங்கு வந்து கொண்டிருக்கிறது என்பதை பயணிகளே அறிந்து கொள்ளும் வகையில், சென்னை பஸ் ஆப் என்ற செயலி பயன்பாட்டில் உள்ளது. இந்த செயலியில் பஸ்கள் எந்த இடத்தில் வருகிறது? பயணிகள் நிற்கும் பேருந்து நிறுத்தத்திற்கு எவ்வளவு நேரம் ஆகும் போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளன. ஆனாலும் இந்த செயலியில் டிராக்கிங் சிஸ்டம் துல்லியமாக இல்லை எனவும் பல வழித்தடங்களில் வரும் பஸ்கள் முறையாக செயலியில் காட்டப்படுவது இல்லை என்பது பயணிகள் பலரும் கூறும் கருத்தாக உள்ளது.
ஒரே செயலியில் 2 வசதி: இந்த நிலையில் தான் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு விரைவில் டிக்கெட் புக்கிங் மற்றும் பஸ் டிராக்கிங் என இரண்டும் ஒரே செயலியில் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தற்போது பயன்பாட்டில் இருக்கும் சென்னை பஸ் செயலியில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் கொண்டு வரப்படும் என்றும், பயணிகள் இந்த செயலியில் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் பஸ்சில் ஏறியதும் நடத்துநர்கள் டிக்கெட்டை தன்னிடம் உள்ள கருவியைக் கொண்டு உறுதி செய்து கொள்ளும் வகையில் இந்த சிஸ்டம் செயல்படும் எனக் கூறப்படுகிறது.
துல்லியமாக காட்டும்: இது தொடர்பாக போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறுகையில், "புதிய செயலி பஸ்கள் வரும் இடத்தை துல்லியமாக காட்டும் வகையில் இருக்கும். டிக்கெட்டிங் சிஸ்டமும் துல்லியமாக இருக்கும். பயணிகள் தங்கள் கருத்தை தெரிவிக்கவும் இதில் வசதி செய்யப்படும். பேருந்து சேவையை மேம்படுத்த இது உதவும்.
பயணிகள் முன்கூட்டியே எடுத்த டிக்கெட்டை பேருந்து பயணத்தின் போது நடத்துநரிடம் காட்டினால் அவர் உறுதிப்படுத்திக்கொள்வார். இந்த வசதி மூலம் பயணிகள், நடத்துநர்கள் என இருவருக்குமே பெரும் சிரமம் குறையும். இந்த செயலி சென்னை நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு (CITS) அமைப்பின் ஒரு அம்சமான ஆட்டோமெட்டிக் வாகன லோகோஷன் சிஸ்டம் ( AVLS) கீழ் மேம்படுத்தப்படும்" என்றார்.
பேருந்து நிறுத்தத்தில் எல்இடி டிஸ்பிளே: மேலும் அவர் கூறுகையில், "இது போக 500 பேருந்து நிறுத்தங்களில் எல்.இ.டி டிஸ்பிளேக்கள் வைக்கப்படும். இதன் மூலம் பேருந்துகள் வரும் நேரம் உள்பட வழித்தடம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பயணிகள் அறிந்து கொள்ள முடியும். இந்த திட்டத்தின் சோதனை திருப்திகரமாக முடிந்துள்ளது.
தற்போது மாநகர பேருந்துகளில் ஜிபிஎஸ் பொருத்துவது போன்ற தொழில் நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. கணிசமான பேருந்துகளில் இவை பொருத்தப்பட்ட பிறகு பேருந்து நிறுத்தங்களில் எல்.இ.டி போர்டுகள் பொருத்தப்படும். ஜிபிஎஸ் தரவுகளின் அடிப்படையில் பேருந்து குறிப்பிட்ட பஸ் ஸ்டாப்பிற்கு வரும் நேரம் காட்டும்" எனவும் கூறினார்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications