Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாசலில் எஜமானருக்காக நாய்.. புதரில் எட்டி பார்த்து ஆடிப்போன மக்கள்! இது ஷாங்காயின் நிஜமான விசுவாசம்

Subscribe to Oneindia Tamil

ஷாங்காய்: சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள பாஷான் குடியிருப்பில் நிகழ்ந்த ஒரு சம்பவம், ஒட்டுமொத்த நபர்களின் மனதை ஆழமாக நெகிழ செய்துவிட்டது.. இந்த செய்திதான் இணையத்தில் 2 நாட்களாகவே வைரலாகி கொண்டிருக்கிறது... ஒரு நாயை தத்தெடுத்து வளர்க்க குடியிருப்புவாசிகளிடம் போட்டா போட்டியும் எழுந்துள்ளது.. என்ன நடந்தது?

ஷாங்காய் நகரின் பாஷான் மாவட்டத்தில் 'காவோ' என்ற நபர் ஒருவர் அப்பார்ட்மென்ட் ஒன்றில் வசித்து வந்தார். இவருக்கென்று யாருமில்லை... தனி நபராக அந்த வீட்டில் வசித்து வந்தார்..

Loyal Dog Owner Faithful Dog

கடந்த 10 வருடங்களாகவே 'ஆ வங்' என்ற நாயை தன்னுடன் வளர்த்து வந்தார்.. இந்த நாய் மீது அதிக பிரியத்துடன் இருந்தார். தன்னுடைய குழந்தையைப் போல அன்புடன் வளர்த்து வந்தார். அந்த நாய்க்கும் காவோ மீது அதிக பிரியம்.. எங்கே போனாலும் 2 பேரும் சேர்ந்துதான் செல்வார்கள்.. ஒருவருக்கொருவர் துணையாக வாழ்ந்தனர்.

அப்பார்ட்மென்ட் நாய்

கடந்த டிசம்பர் 11ம் தேதி, காவோவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது... இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றனர்.. ஆனால் மருத்துவமனை கொண்டு செல்லும் முன்பே அவர் உயிரிழந்தார்.... ஆனால் இந்த விஷயம் ஆ வங் நாய்க்கு தெரியவே இல்லை. எஜமானர் எங்கே சென்றார் என்றே புரியாமல், "அவர் மீண்டும் வருவார்" என்ற நம்பிக்கையோடு, தினமும் வீட்டின் வாசல் முன்பு படுத்துக்கொண்டு காத்திருந்தது.

சாப்பிடவும் இல்லை, தண்ணீரும் குடிக்கவில்லை.. பசியும் தாகமும் இருந்தபோதிலும், வீட்டின் வாசலிலேயே பல வாரங்களாக அந்த நாய் காத்திருந்தது. அக்கம் பக்கத்தினர் நாயை பார்த்து பரிதாபப்பட்டு, சாப்பாடும் தண்ணீரும் கொண்டு வந்து வைத்தனர்..

எஜமானரின் காலடி சத்தம்

ஆனால் நாய் எதையுமே சாப்பிடவில்லை.. எந்நேரமும் வாசல் கதவையே உற்று நோக்கியபடி இருந்தது. எஜமானரின் காலடி சத்தம் கேட்குமா? என்ற ஏக்கம், அதன் கண்களில் தெளிவாக தெரிந்தது.

பிறகு கடந்த ஜனவரி 6ம் தேதி கடும் மழை பொழிந்தது.. அந்த நேரத்தில் ஆ வங் திடீரென காணாமல் போய்விட்டது.. இதனால் குடியிருப்புவாசிகள் பெரும் கவலையடைந்தனர்... நாயை பலரும் தேட ஆரம்பித்தனர்.. நாய் கிடைக்காததால் போலீசுக்கு போனார்கள்..

காவல்துறையின் உதவியுடன் 2 நாட்கள் கழித்து, ஜனவரி 8ம் தேதி, குடியிருப்பு பகுதியில் உள்ள புதர் பகுதியில் நாயை கண்டனர்.. குளிரில் நடுங்கியபடி படுத்திருந்த நாயை பத்திரமாக மீட்டு கொண்டு வந்தனர்.. குளிர்காலம் என்பதால் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.. கண்களில் கண்ணீர் வழிந்தபடியே இருந்தது..

டாக்டர் டெஸ்ட்

அப்பார்ட்மென்ட்டின் அலுவலகத்தில் தரையில் துணிகளை விரித்து அதில் படுக்க வைத்தனர்.. பார்ப்பதற்கு மிகுந்த சோர்வாக இருந்தது.. உடனே அதற்கு உணவு கொடுக்கப்பட்டது. முதலில் தயங்கிய நாய், பிறகு சாப்பிட்டுள்ளது. பிறகு டாக்டரை குடியிருப்புவாசிகள் வரவழைத்துள்ளனர்.. சாதாரணமாக யாரையும் அருகில் விடாத இந்த நாய், அன்று மிகுந்த சோர்வில் இருந்ததால், டாக்டர் அதனை எளிதாக தூக்கி டெஸ்ட் செய்துள்ளார்.. மன அழுத்தத்திலும், உடல் பலவீனமாகவும் இருப்பதாக கூறினார்..

ஆ வங் நாய் எப்போதுமே அமைதியான நாய்., குழந்தைகளிடமும் முதியவர்களிடமும் அது ஒருபோதும் குரைத்ததில்லை. அனைவருக்கும் அது மிகவும் பிடித்த நாயாக இருந்தது என்று நெகிழ்ந்து சொல்லும் குடியிருப்புவாசிகள் இந்த நாயை தத்தெடுக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.. இதற்கு பலரிடம் போட்டா போட்டி நிலவி கொண்டிருக்கிறது..

விசுவாசமான நாய்

எஜமானர் மீது இத்தனை பிரியம் வைத்த இந்த அ-வாங் நாயின் வீடியோ இணையத்திலும் வெளியாகி காண்போரை நெகிழ வைத்து வருகிறது.. இதை பார்த்த நெட்டிசன்கள், கடந்த 2009ம் ஆண்டு வெளியான 'ஹாச்சி' படத்தில் வரும் நாயைப் போலவே, எஜமானரின் மரணத்திற்கு பிறகும் மாறாத அன்பை செலுத்தும் இந்த நாயின் விசுவாசம் வியப்பை தருகிறது என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

1920-களில் ஜப்பானில் நடந்த ஒரு உண்மை கதையை அடிப்படையாக கொண்ட படம்தான் 'ஹாச்சி... எ டாக்ஸ் டேல்' என்ற படத்தை நினைவூட்டுவதாக சிலர் கமெண்ட்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+