வாங்க கமல் சார்.. தனியா நிற்கலாம்.. "அவங்களை" வச்சு செய்யலாம்.. மய்யம் கொடுத்த தெம்பு!!
கமல் தலைமையில் உருவாகிறதா 3வது அணி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
சென்னை: இந்த 2 கட்சிகளுமே வேணாம்.. நாம தனியாவே நிக்கலாம்.. நமக்கென்று தனித்தன்மை உள்ளது என்று மநீம உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.
கமலின் மநீம வேகமெடுத்து வருகிறது.. தேர்தலுக்கு தயாராக வருகிறது.. தனியார் நிறுவனம் ஒன்றின் வாயிலாக, கள ஆய்வு ஒன்றினையும் நடத்தி உள்ளது.
கமல் மக்களுடன் கூட்டணி என்று சொல்லிவிட்டார்.. பிறகு நல்லவர்களுடன் கூட்டணி என்றும் சொல்லிவிட்டார்.. ஆனால் அந்த நல்லவர்கள் யார் என்று வெளிப்படையாக தெரியவில்லை. நாங்கள்தான் அந்த நல்லவர்கள் என்று ஜெயக்குமார் வந்து சொல்லிவிட்டு போகிறார். இருந்தாலும் கமல் யாரை சொல்கிறார் என தெரியவில்லை.

திருச்சி
அதேபோல, மயிலாப்பூர் மற்றும் திருச்சி தொகுதிகளின் கமலின் பெயர் பலமாக அடிபட்டு வருகிறது.. இவைகளில் ஒரு இடத்தில் கமல் போட்டியிடுவார் அல்லது மதுரையிலும் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கிறார்கள்.. ஆனால், கமல் இதற்கும் எதுவுமே சொல்லவில்லை.

மய்ய உறுப்பினர்கள்
எனினும் கூட்டணி தொடர்பாக மய்ய உறுப்பினர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று சிலரிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னதாவது: குறுகிய காலகட்டத்தில், ஒரு லட்சம் பேர், எங்க கட்சியில் புதிதாக இணைந்திருக்கிறார்கள்.. லோக்சபா தேர்தலில், மக்கள் நீதி மையம் பெற்ற ஓட்டுகளை கணக்கிட்டால், 100 முதல், 150 இடங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவோம்.. வேட்பாளர் தேர்வு பற்றி தலைவர் விரைவில் அறிவிப்பார்.

உறுதி
பாஜகவுடன் கூட்டணி கிடையவே கிடையாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதேபோல, கம்யூனிஸ்ட்டுகளும் வேணாம்.. பாஜகவை இந்த அளவுக்கு தலைதூக்க காரணமான கட்சி கம்யூனிஸ்ட்தான்.. இடதும் போகாமல், வலதும் போகாமல் அந்த கட்சியும் எங்களுக்கு தேவையில்லை.. மய்யத்துக்கென்று தனித்துவம் இருக்கிறது.. தனியாக நிற்பதே எங்களுக்கு அழகு.. அதுதான் கெத்து.. உறுப்பினர் சேர்க்கை அபாரமாக பெருகி கொண்டு இருக்கிறது.. களப்பணியாற்ற நாங்கள் பெரும் மும்முரமாக இருக்கிறோம்.. மய்யத்தின் வளர்ச்சி வேகமாக உருவெடுக்கிறது.. கடந்த முறை போலவே இந்த முறையும் தனித்து நின்றால் எங்களுக்கு பெருமையாக இருக்கும்' என்கின்றனர்.

3வது அணி
இதைபற்றி நடுநிலையாளர்களிடம் பேசும்போது, "3வது அணி அமைக்க காய் நகர்த்தி வருகிறார் என்ற தகவல் கசிந்தபடியே உள்ளது.. ரஜினியை நேரடியாகவே கமல் கூப்பிட்டு பார்த்தார்.. அவர் பிடிகொடுக்கவில்லை.. எப்படியும் கமலுக்கு ரஜினி கடைசி நேரத்தில் ஆதரவு தருவார் என்ற நம்பிக்கை பலமாக உலாவி வருகிறது.

உரசல்
இப்போதைக்கு கூட்டணி பேச்சில், திமுகவுடன் உரசல் ஏற்பட்டால், காங்கிரஸ் வெளியேறி மய்யத்துடன் இணையலாம் என்று தெரிகிறது. அதேபோல விசிகவுக்கும் வாய்ப்பு உள்ளது. கமல் பிறந்தநாளுக்கு ராகுல் வாழ்த்து சொல்லி இருக்கிறார்.. அநேகமாக இதுவே கூட்டணிக்கான ஒரு அஸ்திவாரம்தான் போலும்.

திமுக ஓட்டுக்கள்
ஆனால், நிச்சயமாக திமுகவின் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் சக்தியாக கமல் இருப்பார்.. மநீம, செல்வாக்கான தொகுதிகளில் 15 முதல் 20 ஓட்டுக்களை எடுத்தாலே போதும்... திமுகவுக்கு தடுமாற்றம்தான்.. ஓபனாக சொல்ல போனால், கமல் உருவாக்க போகும் 3 வது அணி திமுகவுக்கு செல்ல வேண்டிய வாக்குகளை பிரித்துவிடும்... அது ஆளும்கட்சிக்கு சாதகமாக்கும்.

சீமான்
இதில் கமலை மட்டும் சொல்ல முடியாது.. சீமானையும் சேர்த்து கொள்ளலாம்.. அதனால் இந்த திமுகவுக்கு இன்னும் சிக்கல்தான்... அடுத்து, சசிகலா வேறு வெளியே வர உள்ளார்.. அவர் வந்தால் ஒருவேளை நான்குமுனை போட்டி வந்தாலும் வரலாம்.. அப்படி ஒரு போட்டி வந்தாலும் திமுகவுக்கு நெருக்கடி வரும்.. இருந்தாலும் கமல் மூலமே அதிக ஓட்டுக்கள் திமுகவுக்கு பிரியும் என்றே தெரிகிறது" என்றனர்.












Click it and Unblock the Notifications