டக்குனு "அந்த" 3 பேருக்கு போனை போட்ட சசிகலா.. வெலவெலத்து போன அதிமுக.. இதெல்லாம் உண்மையா?
அமைச்சர்களுடன் சசிகலா போனில் பேசியதாக சொல்லப்படுகிறது
சென்னை: "நான்தான் அதிமுக, நான்தான் பொதுச்செயலாளர்" என்பதில் சசிகலா மிக தீவிரமாக இருப்பதாக அமமுகவினர் தெம்புடன் சொல்கின்றனர்.. அத்துடன், இப்போதே 3 அமைச்சர்கள் சசிகலாவுடன் போனில் பேசியதாகவும் தகவல்கள் கசிய தொடங்கிவிட்டன.
ஒரு வாரம் ரெஸ்ட்டுக்கு பிறகு சசிகலா இன்று சென்னை வருகிறார்.. இதற்கான ஏற்பாடுகளை அமமுக கடந்த ஒரு வாரமாக செய்து வந்தது.
கிட்டத்தட்ட ஒரு மாத பரபரப்பின் உச்சம் இன்று நடந்து கொண்டிருக்கிறது.. சசிகலா சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.. அவர் வருகை ஒரு பக்கம் இருந்தாலும் என்ன மனநிலையில் அவர் இருக்கிறார் என்று இப்போதே தெரிந்துவிட்டது.

கொடி
வழக்கு, கேஸ், எதிர்ப்பு என்று எத்தனை இருந்தாலும், காரில் அதிமுக கொடியுடன்தான் வருகிறார்.. டிஸ்சார்ஜ் ஆகும்போது ஆஸ்பத்திரியில், நான் கொடி இல்லாத காரில் இதுவரை போனதில்லையே என்று டிடிவி தினகரனிடம் சொல்லி உள்ளார்.. இதற்கு பிறகுதான் அதிமுக கொடி கட்டப்பட்டது. இப்போதும் அதே கொடியுடன் கிளம்பி வருகிறார்.

செல்போன்
டிஸ்சார்ஜ் ஆகும்போதே, அவருடைய உடைமைகள் ஒப்படைக்கப்பட்டன.. அதில் செல்போனும் ஒன்று.. அன்றைய தினமே சசிகலாவின் கைக்கு செல்போன் சென்றுவிட்டதால், முக்கிய விஷயங்களை இந்த 7 நாள் ரெஸ்ட்டில் ஆலோசிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. மேலும் தினகரனிடம் தினந்தோறும் நேரில் அழைத்து பேசி வந்தாராம்.

யார் அவர்கள்?
அதேபோல, 3 அமைச்சர்கள் சசிகலாவிடம் போனில் பேசியிருக்கிறார்களாம்.. மேற்கு மாவட்டத்தை சேர்ந்த 2 அமைச்சரும், தென்மாவட்டத்தை சேர்ந்த ஒரு அமைச்சரும்தான் போனில் பேசியதாக தகவல் கசிந்து வருகிறது. சசிகலாவின் குரலை போனில் கேட்டதுமே அவர்களுக்கு வெலவெலத்து போய் உள்ளது. என்ன அமைச்சரே என்று ஆரம்பித்து, சில விஷயங்கள் தொடர்பாக பேசியதாக சொல்லப்படுகிறது.

தலைமை
இந்த தகவல் அப்போதே தலைமைக்கும் பறந்து உள்ளது.. அதனால் சம்பந்தப்பட்டவர்களை கூப்பிட்டு விசாரித்துள்ளனர்.. அப்படி எதுவும் இனி நிகழாதவாறு பார்த்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டனராம்.. ஏற்கனவே சில அமைச்சர்கள், 50 எம்எல்ஏக்கள் தயாராக இருப்பதாக செய்திகள் வந்த நிலையில், இப்போது கூடுதலாக இந்த தகவலும் கசிந்து வருகிறது.
-
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications